புதிய ஆத்திசூடியில் “ரௌத்திரம் பழகு” (96) என்று சொன்ன அதேபாரதி, தனது சுயசரிதைக் கவிதையான பாரதி-அறுபத்தாறில், பொறுமையின் அவசியம் குரித்து இக்கவிதையைப் படைத்திருக்கிறார். “கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான் கொல்வதற்கு வழியெனநான் குறித்திட்டேனே”- என்கிறார் இப்பாடலில்.
Day: August 3, 2022
சிவகளிப் பேரலை – 80
முந்தைய ஸ்லோகத்தில் மென்மையான சிவனின் திருப்பாதங்கள், எமனின் முரட்டு மார்பை எப்படி மிதித்தன? என்று வியந்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில், பக்தனின் மனம் பல்வேறு எண்ணங்களாலும், அனுபவத்தாலும் கடினமாகத் திகழ்கிறதே, அதில் எப்படி அவர் நடனமிடுவார் என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான பதிலையும் தருகிறார்....
மகாவித்துவான் சரித்திரம்- 1(6)
இவர் சில அன்பர்களுடன் ஒரு தினம் திருவானைக்காவிற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்காகப் புறப்பட்டுக் காவிரியின் தென்பாலுள்ள ஓடத்தில் ஏறியபொழுது உடனிருந்த சிதம்பரம்பிள்ளை யென்னுங் கனவான் இவரை நோக்கி ஸ்ரீ அகிலாண்டேசுவரியின் மீது ஒரு மாலை இயற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்; அப்பொழுது உடன் சென்றவருள் ஒருவர், "முன்னமே திருவண்ணாமலையை வலம் வரத் தொடங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள் ஒருமுறை வருவதற்குள் சோணசைலமாலையைப் பாடிமுடித்தது போல் நீங்கள் சம்புநாதரைத் தரிசனஞ் செய்து திரும்புவதற்குள் அம் மாலையைச் செய்வதற்கு இயலுமா?" என்று கேட்டார். இவர் நேருமானாற் செய்யலாமென்று சொல்லிப் பாடத்தொடங்கி, எழுதியும் எழுதுவித்துக்கொண்டும் சென்று கோயிலுக்குப்போய்த் தரிசனம் செய்த பின்பு, சில நாழிகை அங்கே ஓரிடத்தில் தங்கிப் பாடல்களைச் செய்துகொண்டே இருந்துவிட்டுத் திரும்பி வீடுவந்து சேர்வதற்குள் அந்நூலை முடித்தனரென்று சொல்வார்கள்.