அரவிந்தர் யோக மார்க்கத்தில் பயணித்தபோது இறைவழிபாட்டில் ஈடுபட்டவர் அல்லர். துர்க்கை துதியை அவர் எழுதியிருந்தாலும், அது இறைவியைத் துதிப்பதற்காக எழுதப்பட்டதல்ல; பாரத தேசம் விடுதலை பெற வேண்டும், அதற்கான சக்தியை பாரத மக்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக எழுதினார். அவர் வழிபடுவதற்காக கோயிலுக்குச் சென்றதில்லை; சடங்குகளைச் செய்தவர் அல்ல; மாறாக பகட்டான இறை பக்தியை கிண்டல் செய்தவர்.
Day: August 12, 2022
சிவகளிப் பேரலை- 89
சிவபெருமான் விசித்திரமானவர். பெரிய பெரிய மகான்களும், தவசீலர்களும் அவரைக் காண முடியாமல் தவிக்கின்ற நிலையில், எளிய பக்தனுக்கு அவர் இர(ற)ங்கி வந்து காட்சி தருகிறார். பக்தர்களோடு விளையாடுவதற்காக திருவிளையாடல் செய்யும் சிவபெருமான், அந்தத் தருணங்களிலே அறியாமையால் பக்தர்கள் அடித்தாலும், திட்டினாலும்கூட சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். இதனைத்தான் நிந்தாஸ்துதியாக (வஞ்சப்புகழ்ச்சியாக) இங்கே வர்ணிக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.....
சுயாட்சிக்குத் தகுதியாவதெப்படி?
நாம் நாளுக்குநாள் ஆடவர்களுக்குள்ள தன்மையை இழந்துகொண்டே வருகிறோம். இப்படிக் காலம் கழிப்போமானால் சிவாஜியும் அசோகர் முதலிய மன்னர்களையும் தந்த இப்பாரத பூமி ஸப் இன்ஸ்பெக்டர்களையும் கலெக்டரையும் மேன்மேலும் பேறுவதாய்ப் போய்விடும். இதுவரை செய்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திரஸ்கரித்தும் மாறுபடுத்தியும் நாம் எண்ணத்தை நிறைவேற்ற மனமில்லாத ராஜாங்கத்தாரிடம் இன்னும் கெஞ்சுவதானால் நமது மூடத்தனம் எத்தன்மையது பாருங்கள். ...