பாரதம் வந்த உடனேயே அவருக்கு இங்குள்ள அரசியல் நிலை முழுமையாகப் புரிந்தது. காங்கிரஸ் சில மிதவாத தலைவர்களின் பிடியில் இருந்தது. பெரிய, பரந்த பாரத சமுதாயத்திற்கு காங்கிரஸ் என்ற சிறு அமைப்பின் வழிகாட்டுதலும் பங்களிப்பும் போதுமானதாக இல்லை. ஆங்கில அரசுக்கு எதிராக அது எழுப்பிய குரல் வலிமையற்றதாகவும் அற்பமானதாகவும் இருந்தது. எனவே புதிய தலைமையை உருவாக்கவும், சமுதாயம் முழுமையையும் ஒருங்கிணைத்து போராடவும் தயார்ப்படுத்த வேண்டி இருந்தது. அப்போது பம்பாயில் இருந்து வெளிவந்த ‘ஹிந்து பிரகாஷ்’ (ஹிந்து பேரொளி) என்ற பத்திரிகையில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற தலைப்பில் அரவிந்தர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். அதில் காங்கிரசை கடுமையாகத் தாக்கி எழுதினார்....
Day: August 11, 2022
சிவகளிப் பேரலை- 88
சிவபெருமானின் பெருமைகளை வியந்து கூறி, அவருக்கு எப்படி நிறைவான பூஜை செய்வது? என்று ஸ்ரீ ஆதிசங்கரர் மலைத்து நின்று வினவும் அற்புதம், இந்த ஸ்லோகத்திலும் தொடர்கிறது....
பாரதி- அறுபத்தாறு (27-36)
“சென்றதினி மீளாது; மூடரே, நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா; இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்” -என்ற அற்புதமான உபதேசம் அடங்கிய கவிதை இது...