அத்வைதப் பேரானந்தத்தின் உச்சநிலையை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல் இது... ‘எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்’ என்ற பாரதியின் தாரக மந்திரம் ஒலிக்கும் கவிதையும் கூட...
Day: August 5, 2022
சிவகளிப் பேரலை- 82
ஒரே ஆற்றல்தான் நிலைசக்தியாகவும், இயங்குசக்தியாகவும் திகழ்கிறது. (ஆயினும் நிலைசக்திதான் இயங்குசக்திக்கு ஆதாரம்.) இதுதான் ஹரிஹர தத்துவம். இதனையே சிவசக்தி என்று இணைத்துக் கூறுவார்கள். சக்தியைப் பெண்பாலாகக் கூறுவதற்குப் பதில், ஆண்பாலாகவே சுட்டும்போது அந்த சக்தி, ஹரி என்று கூறப்படுகிறது. இதனால்தான் சக்தியின் சகோதரராக விஷ்ணு வர்ணிக்கப்படுகிறார்.
சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்
நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்களை சுவாமி விவேகானந்தருடன் மானசீகமாக இணைத்துக் கொள்வது இன்றளவும் நடந்து வருகிறது. அவர்கள் எல்லாம் வெவ்வேறு விதமான பின்னணிகளைக் கொண்டவர்கள். அவர்களின் மாநிலங்கள், மொழிகள், தொழில்கள், படிப்புகள் எனப் பலவும் வேறு. ஆனால் அவர்கள் அனைவருமே சுவாமி விவேகானந்தரின் கருத்துகள், செயல்பாடுகள் அல்லது அவரது ஆளுமை ஆகியவற்றால் கவரப்பட்டவர்கள். எனவே நாடு முழுவதும் அதிகம் பேரால் பரவலாக அறியப்பட்ட உதாரண புருஷராக அவர் இன்றளவும் விளங்கி வருகிறார்....