அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! நமது நாடு ஏன் அடிமைப்பட்டது என்று சிந்தித்த மகாகவி பாரதி, சமூகத்தின் ஒரு பகுதியான அடித்தட்டு மக்களை பஞ்சமர்கள், தீண்டத் தகாதோர் என்று ஒதுக்கி வைத்த பாவமே அடிப்படைக் காரணம் என்று கண்டறிகிறார். ஈனம் என்று கூறப்படும் ஜாதியாரை ஆதரித்து அவர்களை உயர்த்துவதே தேசம் உய்யும் வழி என்கிறர் இக்கட்டுரையில். ஒரு கதை போல எழுதி, இறுதியில் அற்புதமான அறவுரையை முத்தாய்ப்பாக வைத்திருக்கிறார் பாரதி. சுதந்திர நன்னாளில் அவரது அறவுரையை அறிவுரையாக ஏற்போம். நாட்டைக் காப்போம்!
Day: August 15, 2022
சிவகளிப் பேரலை- 92
சிவபெருமானின் திருவடித் தாமரைகளை தியானிப்பதால் அறியாமை அகன்று, ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பதை முந்தைய ஸ்லோகத்தில் மொழிந்த ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் பரமஸே்வரரின் திருவிளையாடல் புராணங்களைக் கேட்பதால் பாவங்கள், தீமைகள் அனைத்தும் நம்மைவிட்டு விலகியோடும் என்பதை விண்டுரைக்கிறார். ...
மகாவித்துவான் சரித்திரம்- 1(9)
அம்பலவாண முனிவர் , வடமொழி தென்மொழி யிரண்டிலும் முறையான பயிற்சியுடையவர். பல சிவபுராணங்களிலும் பல பிரபந்தங்களிலும் சைவ சாஸ்திரங்களிலும் அவருக்கு நல்ல ஆராய்ச்சி உண்டு. சிறந்த ஒழுக்கமுடையவர். இடைவிடாமற் படித்தலிலேயே காலத்தைப் போக்குபவர். மடத்திற் பல தமிழ்நூல்கள் கிடைக்குமாயினும் ஒவ்வொன்றையும் ஒரே அளவுள்ள சுவடிகளில் எழுதி வைத்துக் கொள்வதில் அவருக்குத் திருப்தியதிகம். அவ்வாறு அவர் எழுதிய சுவடிகள் மிகப் பல. அவர் கல்வி கேள்விகளிற் சிறந்தவராக விருந்தாலும் உலகப்பயிற்சியே இல்லாதவர். யாருக்கேனும் பாடஞ்சொல்லுதலில் அவர் பழகவில்லை. அவர் 96 பிராயத்திற்கு மேற்பட்டு வாழ்ந்திருந்தவர். ஸ்ரீ சூரியனார் கோயிலிலுள்ள ஸ்ரீ சிவாக்கிரயோகிகள் மடத்துத்தலைவராக அம்பலவாண தேசிகராற் பின்பு நியமிக்கப்பெற்றவர்....
இன்குலாப் ஜிந்தாபாத்… இந்துஸ்தான் ஜிந்தாபாத்!
சுதந்திரத் திருநாளை முன்னிட்டு, தேசபக்தி மிளிரும் கவியரசரின் அற்புதமான திரைப்படக் கவிதை இங்கு வெளியாகிறது....