ஹிந்து- முஸ்லிம் மத வேற்றுமைப் பிரச்னை இன்று தோன்றியதல்ல என்பதை மகாகவி பாரதியின் இச்செய்தி உறுதிப்படுத்துகிறது. இந்த வேற்றுமையை இல்லை என்று ஒளித்துவைத்துப் பிரயோசனமில்லை என்று கூறும் இதழாளர் பாரதி, ”மேற்கண்டவாறு இருக்கும் நிலைமையை உத்தேசிக்குமிடத்து அநேகர் மனதில் பரதகண்டத்தின் வருங்காலத்தைப் பற்றி பயமேற்படுகின்றது“ என்று விசனப்படுகிறார். நமது மகமதிய சகோதரர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இடையிலான வேற்றுமை உணர்ச்சியை எவ்வாறாகிலும் சரிப்படுத்த வேண்டும் என்ற அவரது ஆத்மார்த்த விருப்பமும் இச்செய்தியில் தெரிகிறது......
Day: August 29, 2022
பாரதி-அறுபத்தாறு- (49-53)
காதலின் புகழைப் பாடும் மகாகவி பாரதியின் இக்கவிதை தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்றது. ஆணும் பெண்ணும் கூடிக் களித்து வாழும் இல்லறமே உலகை வாழ வைக்கிறது. அதற்கு அடிநாதம் காதலே. “காதல் செயும் மனைவியே சக்தி கண்டீர்! கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்” என்ற பாரதியின் பிரகடனம், காதலர்களுக்கு அமுத வாக்கு. இறைவனே காதலிக்கையில் மானுடர் காதலின் சுவையை இழக்கலாகுமா? என்பதே கவியின் கேள்வி. அதேசமயம், காதல் என்ற பெயரில் நிகழும் முறைகேடுகளை தனது அடுத்த (54-56) கவிதைகளில் கண்டிக்கவும் அவர் தவறவில்லை.