சிவகளிப் பேரலை- 95

என் பாதங்களோ மிக மென்மையானவை, பக்தா உனது மனதோ மிகவும் கடினமானது என்று சிவபெருமானே உன்னகத்துள் எனது உய்வுக்கு முரணான சந்தேகம் எழுந்தால், அதனை உடனடியாக நீக்கிவிடு. பவானியின் மணாளனாகிய சிவபெருமானே, அவ்வாறு நீர் உண்மையிலேயே கருதுவீராயின், மிகவும் கரடுமுரடான இமயமலை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களிலே நீர் எப்படி உழன்று திரிகின்றீர்? என்று நமக்காகக் கேட்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ...

மகாவித்துவான் சரித்திரம்- 1(10)

பலரிடத்தும் சென்று சென்று அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து பலமுறை அலைந்து ஒவ்வொரு நூலையும் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்டு வந்தவராதலின், யாதொரு வருத்தமுமின்றி மாணாக்கர்களைப் பாதுகாத்து அவர்களை அலைக்கழியாமல் அவர்களுக்கு வேண்டியவற்றை உடனுடன் கற்பித்துவர வேண்டுமென்ற எண்ணம் இவருக்கு இருந்துவந்தது. அதனால், பாடங்கேட்க வரும் செல்வர்களுக்கும் ஏனையோருக்கும் விரும்பிய நூல்களைத் தடையின்றிப் பாடஞ்சொல்லி ஆதரிக்கும் இயல்பு அக்காலந்தொடங்கி இவருக்கு முன்னையினும் அதிகமாக ஏற்பட்டது. சில ஏழைப் பிள்ளைகளுக்கு ஆகாராதிகளுக்கும் உதவிசெய்து வருவாராயினர். தம் நலத்தைச் சிறிதும் கருதாமல் மாணாக்கர்களுடைய நன்மையையே பெரிதாகக் கருதும் இயல்பு இப்புலவர்பெருமானிடத்து நாளடைவில் வளர்ச்சியுற்று வந்தது.....