மகாவித்துவான் சரித்திரம்- 1(7)

சபாபதி முதலியார், திருவேங்கடாசல முதலியார், திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை யென்னும் மூவரும் ஒருவருடைய வீட்டிற்கு ஒருவர் போய் நூலாராய்ச்சியின் விஷயமாக ஒருவரோடொருவர் அளவளாவி இன்புறுவது வழக்கம். அக்காலங்களிலெல்லாம் அவர்கள் பிள்ளையவர்களுக்குத் தமிழ் நூல்களிலுள்ள வேட்கைப் பெருக்கத்தையும் இயற்கையறிவினையும் முன்னரே இவருக்கு அமைந்திருக்கும் அகன்ற நூலாராய்ச்சிப் பெருமையையும் ஞாபக சக்தியையும் அடக்கத்தையும் தருக்கின்மையையும் நட்புடைமை முதலியவற்றையும் குறித்து வியந்தார்கள். இவர் சந்தேகமென்று வினவுகின்ற வினாக்களில் பெரும்பாலன அவர்களுக்குப் புதிய விஷயங்களை அந்தச் சமயங்களில் தோன்றச்செய்யும்; விடைதர வேண்டி மேன்மேலும் பல நூல்களை ஆராயும்படி அவர்களை அவை தூண்டும். இவருடைய பாடல்களையும் அவற்றிலுள்ள நயங்களையும் அவர்களறிந்து இவருடைய ஆற்றலைப் பாராட்டினார்கள். இளமையிலே இவ்வளவு நல்லாற்றல் வாய்ந்தமை யாருக்குத்தான் வியப்பைக்கொடாது?

சிவகளிப் பேரலை- 83

ஒற்றைக் கடவுளைத்தான் நாம் பல்வேறு நாமரூபங்களில் அழைத்தாலும், அவற்றில் எல்லாம் சிறப்பானதாகவும், அனைத்திற்கும் மேலான தத்துவமாகவும் விளங்குவது சிவபரம்பொருள்தான். சிவ தத்துவத்தில்தான் இறைத்தன்மை முழுவதுமாக வெளிப்பட்டு நிற்கிறது. அதனால்தான் சிவபெருமான் மகாதேவர், பரமேஸ்வரர், சர்வேஸ்வரர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். இதே காரணத்தால்தான் பழந்தமிழ் இலக்கியங்கள் பழையோன், பிறவா யாக்கைப் பெரியோன், முக்கண் முதலோன் என்றெல்லாம் எந்தை சிவபிரானை ஏற்றித் துதிக்கின்றன....

நூற்றைம்பதிலும் இளமை குன்றாத விவேகானந்தர்

இந்தியாவின் உயிர்நாடி மதமும், ஆன்மீகம்தான் என்று பலமுறை விவேகானந்தர் அறிவுறுத்தியிருக்கிறார். பொருளாதாரத்தில் பலம் பெற்று வரும் இந்தியா ஆன்மீகத்தின் பக்கமும் தனது கவனத்தை கூடுதலாகத் திருப்பிக்கொள்ள வேண்டும்....