எனது முற்றத்தில்- 16

நெல்லை மாவட்டக் கடற்கரையோரம், இடிந்தகரை கிராமத்தில் 1969இல் ஏராளமான மீனவ கிறிஸ்தவர்கள் தாய்மதம் திரும்பினார்கள்.  பிரமாண்டமான சர்ச்சுக்கு எதிரே சின்னஞ்சிறு விநாயகர் கோயில் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்தக் கோயிலுக்கு நேரில் சென்ற ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மீனவ சகோதர சகோதரிகள் மத்தியில் அருளுரை நிகழ்த்தினார். மீனவர்களை அந்த வட்டாரத்தில் பரதவர்கள் என்று குறிப்பிடுவார்கள். இதை சுட்டிக்காட்டிய சுவாமிகள் "நீங்களெல்லாம் பரதனின் வம்சத்தில் வந்தவர்கள். இது உங்களுக்கு பெருமை தரும் விஷயம்" என்று எடுத்துக் கூறினார். இதைக் கேட்டு அந்த மீனவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள் அதைக் கண்ட இந்தத் துறவிக்கும் கண் கலங்கியது....

சத்திய சோதனை- 3 (16-19)

பிரம்ம சமாஜத்தைக் குறித்து வேண்டிய அளவு தெரிந்து கொண்டேன். ஆனால், சுவாமி விவேகானந்தரைப் பார்க்காமல் என்னால் திருப்தியடைய முடியவில்லை. ஆகவே, அதிக உற்சாகத்தோடு பேளூர் மடத்திற்குப் போனேன். அநேகமாக, முழுத்தூரமும் நடந்தே அங்கே சென்றதாக ஞாபகம். மடம் அமைந்திருந்த ஏகாந்தமான இடம், என் மனதைக் கவர்ந்து இன்பம் ஊட்டியது. சுவாமி, தமது கல்கத்தா வீட்டில் இருக்கிறார்; நோயுற்றிருப்பதால் அவரைக் காண்பதற்கில்லை என்று சொல்லக் கேட்டு ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தேன்.      பிறகு சகோதரி நிவேதிதா இருக்கும் இடத்தை விசாரித்து தெரிந்துகொண்டு, சௌரிங்கி மாளிகையில் அவரைச் சந்தித்தேன். அவரைச் சுற்றி இருந்த ஆடம்பரங்கள் என்னைத் திடுக்கிடச் செய்தன. அவரிடம் பேசிய பிறகு, நாங்கள் இருவரும் அநேக விஷயங்களில் ஒத்துப் போவதற்கு இல்லை என்பதைக் கண்டேன். இதைக் குறித்து கோகலேயிடம் பேசினேன். அவரைப் போன்ற உணர்ச்சி வேகமுள்ள ஒருவருக்கும் எனக்கும் எந்த ஒரு விஷயத்திலும் கருத்து ஒற்றுமை ஏற்பட முடியாது போனதில் ஆச்சரியமில்லை என்று கோகலே கூறினார்.      ஸ்ரீ பேஸ்தன்ஜி பாத்ஷாவின் வீட்டில் மீண்டும் நிவேதிதாவைச் சந்தித்தேன். பேஸ்தன்ஜியின் வயதான தாயாருடன் சகோதரி நிவேதிதா பேசிக் கொண்டிருந்த சமயத்தில் நான் அங்கே போக நேர்ந்தது. ஆகவே, அவ்விருவருக்கும் மொழிபெயர்த்துக் கூறுபவனானேன். அவருடன் எந்த ஒருமைப்பாட்டுக்கும் என்னால் வரமுடியவில்லை என்றாலும், ஹிந்து தருமத்தினிடம் அவருக்கு இருந்த அளவு கடந்த அன்பைக் கண்டு வியக்காமல் இருக்க என்னால் முடியவில்லை. அவர் எழுதிய நூல்களைக் குறித்து பின்னால் தான் அறிந்தேன்.....

சிவகளிப் பேரலை- 91

   சிவபெருமானை மனோ வாக்கு காயம் ஆகிய மூன்றினாலும் பக்தன் சிரத்தையுடன் வணங்க வேண்டும் என்பதை முந்தைய ஸ்லோகத்தில் வலியுறுத்திய ஜகத்குரு, இந்த ஸ்லோகத்தில் அதனால் பக்தனுக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய நன்மை என்ன என்பதை உரைக்கின்றார்.....

விடுதலைப் போரில் அரவிந்தர் – 1

சுதந்திர இந்தியா உருவாகப் பாடுபட்ட விடுதலை வீரர்களுள் வங்கத்தைச் சார்ந்த மகரிஷி ஸ்ரீ அரவிந்தர் முக்கியமானவர். புரட்சிவீரராக வாழ்வைத் துவங்கி, குறுகிய காலத்தில் நாடு முழுவதும் விடுதலை வேட்கையை தீப்போலப் பரப்பியவர் அவர். ஆனால், பின்னாளில் போராட்ட வாழ்விலிருந்து விலகி, ஆன்ம விடுதலைக்கான பயணத்தையும் உலக ஒருமைப்பாட்டுக்கான முயற்சிகளையும் பாண்டிசேரியில் இருந்தபடி தொடர்ந்தார். சிறந்த இயக்க நிர்வாகி, விடுதலைப் போராளி, கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர், ஆன்மிகவாதி எனப் பன்முகம் கொண்டு இலங்கியவர் மகரிஷி ஸ்ரீ அரவிந்தர். திலகருக்குப் பின் இந்திய சுதந்திரப் போரை வழிநடத்தி இருக்க வேண்டிய மகத்தான ஆளுமையான அரவிந்தர் ஆன்மிக விடுதலை நோக்கி நகர்ந்தது, இறைவன் சித்தம் போலும். இந்த ஆண்டு மகரிஷி ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த தினத்தின் 150வது ஆண்டு நிறைகிறது (1872- 2022). இவரது பிறந்த நாளில் தான் பாரதம் 1947இல் சுதந்திரம் பெற்றது. இதையொட்டி, நமது இணையதள ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. திருநின்றவூர் ரவிகுமார் அரவிந்தரின் வாழ்க்கை சரிதத்தை சுருக்கமாக இங்கே தொடராக எழுதுகிறார். சுதந்திர நன்னாளில், மகரிஷி அரவிந்தரின் பிறந்த நாளிலேயே இத்தொடர் இங்கு தொடங்குகிறது.இரண்டு நாட்கள் இடைவெளியில் இத்தொடர் நமது தளத்தில் தொடர்ந்து வெளியாகும்.

பாரதி- அறுபத்தாறு (37- 39)

முந்தைய பாடலில் மாங்கொட்டைச் சாமியின் புகழ் பாடிய மகாகவி பாரதி, இப்பாடலில், தனது குருவாக வரித்துக் கொண்ட கோவிந்த சுவாமியின் புகழைப் பாடுகிறார். அறிவே தெய்வம் என்ற பாரதிக்கு அன்பே தெய்வம் என்ற தரிசனம் தந்த ஞானி இவர்....

பால பாரத சங்கம்- முதலாவது பிரகடனம், பத்தாம் அவதாரம்

வருஷந்தோறும் 60 கோடி ரூபாய்கள் இங்கிருந்து வற்றடிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடந்துகொண்டிருந்தால் இந்த பாரத தேசம் நாளுக்கு நாள் சொல்லமுடியாத தரித்திரத்திலும் பிணியிலும் மூழ்கி வருவது ஆச்சரியமாகுமா? இப்போது நடைபெற்று வரும் பிரிட்டிஷ் ராஜாங்க முறைமையிலே மேலே கூறியது போன்ற அநீதிகள் எத்தனையோ இருக்கின்றன. இந்த அநீதிகளை நாசம் செய்யும் பொருட்டாக நமக்கிடையே கடவுள் பத்தாம் அவதாரம் செய்திருக்கின்றார். இப்போது மனித ரூபமாக அவதாரம் செய்யவில்லை. அவருடைய அவதாரத்தின் பெயர் சுதேசியம்...