ஆண்களை வெறுக்கும் நாயகியின் மனதை மாற்ற முயலும் நாயகன் பாடுவதாக அமைந்த இப்பாடல், கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் இடம்பெற்றது. இன்றைய பெண்ணியவாதிகளுக்கு இப்பாடல் பிடிக்காமல் போகலாம்; ஆனால், பெண்களுக்குப் பிடிக்கும். கவியரசரின் வைர வரிகள் வசீகரிக்காமலா போகும்?
Month: October 2022
கொட்டையசாமி
இக் கதை பாரதி பிரசுராலயத்தார் வெளியிட்ட கட்டுரைகள் தொகுதியில் இடம் பெற்றது. அந்தக் காலத்து ஜமீன்தார்களின் பொதுவான குணாதிசயங்களை விளக்க பகடியாக எழுதிய இந்தக் கதையில் கொட்டையசாமி என்பவன் ஜமீன் சபையில் நிகழ்த்திய ஆட்ட பாட்டங்களைப் படித்து ரசிக்கலாம். பொழுதுபோக்குக் கதைகளில் இதுவும் ஒன்று.நெட்டையபுரம் வேறு- எட்டயபுரம் வேறல்ல என்பது பாரதியை அறிந்தோருக்குத் தெரியும்.
கொன்றைவேந்தன் (46-50)
நாடு முழுவதும் வாழ என்று சொல்லும்போது நாட்டுமக்கள் அனைவருமே நலமுடன் வாழுதல் என்ற பொருளும் அடங்கியுள்ளது. இதைத்தான் இன்றைய மத்தியஅரசு ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்று கூறி செயல்படுத்த முனைப்புக் காட்டுகிறது. நாட்டு வளர்ச்சியின் பயன், கடையருக்கும் மடைமாற்றமின்றி போய்ச்சேர வேண்டும். அப்போதுதான் நாடு முழுவதும் வாழும்.
ஸ்வதந்திர கர்ஜனை- 2(2)
இனி சுதந்திரத்துக்காகப் போராடிய ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ பிறந்து வளர்ந்த வரலாற்றைப் பார்ப்போம். ‘காங்கிரஸ்’என்று இங்கு குறிப்பிடும் சொல்லுக்கும் இன்று இருக்கும் ஒரு அரசியல் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக நினைக்க வேண்டாம். இங்கு ‘காங்கிரஸ்’ என்னும் சொல், முதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மனுக் கொடுத்து சலுகை பெறும், படித்த இந்தியர்கள் தொடங்கிய ஒரு அமைப்பைக் குறிக்கும் சொல்....
ஜப்பான் தொழிற்கல்வி
தெளிந்த அறிவும் இடைவிடாத முயற்சியும் இருந்தால் சக்தியுண்டாகும். தெளிந்த அறிவென்பது இரண்டு வகைப்படும் – ஆத்ம ஞானம், லெளகிக ஞானம் என. ஆத்ம ஞானத்தில் நமது ஜாதி சிறந்தது. லெளகிக ஞானத்தில் நம்மைக்காட்டிலும் வேறு பல தேசத்தார் மேன்மை யடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தேசங்களில் ஜப்பான் ஒன்று. புத்தகங்களாலும், பத்திரிகைகளாலும், யாத்திரைகளாலும் நாம் ஜப்பான் விஷயங்களை நன்றாகத் தெரிந்து கொள்ளுதல் பயன்படும். கூடியவரை பிள்ளைகளை ஜப்பானுக்கு அனுப்பிப் பலவிதமான தொழில்களும் சாஸ்திரங்களும் கற்றுக் கொண்டு வரும்படி செய்வதே பிரதான உபாயமாகும். தொழிற் கல்வியிலும் லெளகிக சாஸ்திரப் பயிற்சியிலும் நாம் மற்ற ஜாதியாருக்கு ஸமானமாக முயலுதல் அவசரத்திலும் அவசரம்.
கொன்றைவேந்தன் (41-45)
கைதவம் என்றால் வஞ்சனை, கபடம், சூது என்று பொருள். தெய்வம் கருணைக்கடல், மிகவும் பொறுமையானது. ஆயினும் உலகில் வஞ்சகக் கொடுமை மிகுந்துகொண்டே வந்தால், அந்த அசுரத்தனத்துக்கு முடிவுகட்ட தெய்வம் அறச்சீற்றத்தோடு பேரச்சம் தரும் உருவில் தோன்றும். அப்போது வஞ்சனை அழியும்.
மகாவித்துவான் சரித்திரம்- 2(3)
இவர் திருநீறு பெறுவதற்கு எழுந்து செல்லும்பொழுது தேசிகரைப் பார்ப்பதற்கு மிக்க ஆவலோடு இவர் பின்னே நின்ற யானும் சென்றேன். நெற்றியில் திருநீறு இட்டு இவரை இருக்கச்செய்துவிட்டுத் தேசிகர், "உங்களுக்குப் பின்னே வருகிற இவரோ முன்பு வந்த பொழுது பாடங்கேட்பதாகச் சொல்லிய சாமிநாதைய ரென்பவர்?" என்று விசாரித்தார். அப்பொழுது 'ஸ்வாமி' என்று இவர் சொல்லவே எனக்கு உண்டான உவப்பிற்கு எல்லையே இல்லை. ஒரு பொருளாக என்னை நினைந்து தாம் வந்தபொழுது நான் பாடங்கேட்டு வருவதாக இப்புலவர்பிரான் சொல்லிய அருமையையும் அதனை ஞாபகப்படுத்திக் கொண்டு விசாரித்த தேசிகருடைய பெருமையையும் எண்ணி எண்ணி இன்பம் அடைந்து கொண்டே சென்று தேசிகர் இருக்கும்படி சொல்ல இவருக்குப் பின்னே இருந்தேன்.
விதி
நாட்டு விதி என்பது அர்த்த, நீதி சாஸ்திரங்களின் விதி. இதனைத் தற்காலத்தோர் அரசியல் விதியென்று சொல்லுகிறார்கள். அதுவும் சாஸ்திர விதியோடு சேர்ந்ததுதான். ஆனால் மற்ற இலக்கணம் முதலிய சாஸ்திரங்களின் விதிகளைக் காட்டிலும் அரசியல் விதிகள் மிகவும் விரைவுடன் மாறுபடுவதால் இதனைத் தனியாக ஒரு பகுதியாக்கும்படி நேரிட்டது. எனவே, தெய்வ விதிக்குப் பரிபூரணமாக உட்பட்டு சாஸ்திர விதிகளையும் நாட்டு விதிகளையும் மேன்மேலும் புத்திசாலித்தனமாகச் சீர்திருத்திக் கொண்டு வந்தால், மனுஷ்ய ஜாதிக்கு ஷேமமுண்டாகும்.
பொருள் புதிது – தீபாவளி மலர் 2022
அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! பொருள் புதிது - தீபாவளி மலர் 2022இன் உள்ளடக்கம்.... (தலைப்பைச் சொடுக்குக!)
தரித்த நறுந்திலகம்!
நமது நாட்டை ஒருங்கிணைத்ததில் கலை, இலக்கியங்களுக்கு எத்துணை பங்குண்டோ, அதே அளவுக்கு பண்டிகைகளுக்கும் பங்குண்டு. குறிப்பாக தீபாவளி நமது பண்டிகைகளுள் முதன்மையானது. ஆண்டு முழுவதும் உழைத்துக் களைத்த மக்களுக்கு பேரானந்தம் அளிக்க வரும் தீபாவளியை இருகரம் நீட்டி வரவேற்போம்! இந்த தீபாவளியை ஒட்டி, பொருள் புதிது தளத்தில் சிறப்புப் பகுதியாக ‘தீபாவளி மலர்’ வெளியாகிறது. இம்மலரின் இதழ்களை ஊன்றிப் படியுங்கள். உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரியப்படுத்துங்கள்.
உண்மையான தீபாவளி!
மகாகவி பாரதி நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-இல் அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக வெளிவந்தது இந்தக் கட்டுரை. பின் ‘கலைமகள்’ பத்திரிகையில் 1941-இல் அக்டோபர் மாதம் வெளியாயிற்று. நமது நேயர்களுக்கு மகாகவி பாரதியின் இக்கட்டுரையை தீபாவளிப் பரிசாக வழங்கி மகிழ்கிறோம்!
சனாதனத்தில் சமத்துவம்
தற்காலத்தில் பொருளறியாமல் அரசியல் வியாதிகளால் அதிக அளவில் புண்படுத்தப்படும் சொல் ‘சனாதனம்’. அதிலும், அதிலும், திராவிட அரசியல் (திராவிடம் என்பதும், அதுவும் பொருளறியாத - அநர்த்தக் கும்பலிடம் சிக்கித் தவிக்கிறது) பேசுவோர் சனாதனத்தை அழிப்பதாகவே முழங்குகின்றனர். இதனால், பலர் குழப்பமடைகின்றனர். அவர்களைத் தெளிவுபடுத்துகிறது திரு. பத்மன் எழுதியுள்ள இக்கட்டுரை....
நாட்டை இணைக்கும் தீபாவளி
நமது நாடு பண்பாடுகளின் சங்கமம்; நாகரிகங்களின் விளைநிலம். என்று தோன்றியது எனக் கூற இயலாத் தொன்மைச் சிறப்பும், ஆன்மிகமும் சமயமும் இணைந்த வாழ்வியலும், மானுடம் வியக்கும் உன்னதமான கலைச்சிறப்பும், பல மொழிகளில் எழுந்த இலக்கிய வளமும் சேர்த்துச் சமைத்த நாடு இது. இந்த நாட்டை அமைத்த பல காரணிகளுள் பண்டிகைகள் தலையாயவை. அவற்றுள் முதன்மை பெறுவது தீபாவளி. இதுகுறித்து, பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் எழுதிய கட்டுரை இது....
தீபாவளி வாழ்த்துகள்! (கவிதை)
'வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் 'பொருள் புதிது’ வாசகர்களுக்கு அனுப்பிய கவிதை வாழ்த்துமடல்...
டானா கம்பியும் பொட்டு வெடியும்
எழுதத் தொடங்கியது பொட்டுவெடி தான்; ஆனால், முடியும்போது வாணவேடிக்கை காட்டுகிறார் மூத்த பத்திரிகையாளர் திரு. எஸ்.எஸ்.மகாதேவன். வண்ணங்களின் சிதறலாக, எண்ணங்களின் குவியல்களை நம் முன் காட்சிப்படுத்தி இருக்கிறார் இக்கட்டுரையில்...