கண்ணனை தனது ஆண்டானாகவும் தன்னை அடிமையாகவும் கருதி பாரதி பாடும் இப்பாடல், காண மிகவும் எளிமையும் பொருளில் ஆழமும் கொண்டது...
Month: April 2022
தமிழ்த் தாத்தா (21- 25)
"ஒரு நூல் அல்ல, பல நூல்களை நீங்கள் பதிப்பிக்கலாம். அந்த அளவுக்குச் செல்வம் அளிக்குமாறு ஒரு கிராமத்தையே உங்கள் பெயரில் எழுதிவைக்க மகாராஜா நினைக்கிறார்" என்றார் பாண்டித்துரைத் தேவர். "நான் இன்று அரண்மனை போயிருந்தேன். பாஸ்கர சேதுபதி அவர்கள் இந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள்" என்று சொன்னார். இந்நாள் வரை தங்களுக்கு எந்தவிதமான உதவியும் அவர் செய்யாமல் இருந்தது பெரிய தவறு என்று நினைக்கிறார்கள். ஆகவே தம் ஜமீனிலுள்ள ஒரு கிராமத்தையே தங்களுக்கு வழங்க எண்ணுகிறார். இந்தச் செய்தியைத் தங்களிடம் தெரிவிக்கும்படி என்னிடம் சொன்னார்' என்றார். இதைக் கேட்டவுடன் பாண்டித்துரைத் தேவர் எதிர்பார்த்தபடி ஆசிரியருக்கு மகிழ்ச்சி அதிகமாக உண்டாகவில்லை. அவரிடம், "மகாராஜா அவர்களுடைய எல்லையற்ற அன்பை நான் இதனால் உணர்ந்து கொள்கிறேன். என்னுடைய கருத்தை நான் அவர்களிடமே நேரில் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டார்....
கண்ணன் பாட்டு – (16-21)
மகாகவி பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில், கண்ணம்மாவாக கண்ணனை வர்ணித்து, சிருங்கார ரசத்தில் பாடிய 6 பாடல்கள் அற்புதமான அகச்சுவை உடையவை. அவை இங்கே...
காற்றிடைச் சாளரம் – 5
மனம் என்னும் துணி- காற்றிடைச் சாளரத்தில் அலைபாய்கிறது இந்தக் கந்தல் துணி....
தமிழ்த் தாத்தா (15-20)
புறநானூற்றுக்குப் பிறகு மணிமேகலையை ஆராயத் தொடங்கினார். மணிமேகலை பெளத்த காவியம், ஜைன காவியமாகிய சீவக சிந்தாமணியில் ஏற்பட்ட சந்தேகங்களைப் போக்குவதற்கு ஜைனர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் பெளத்தர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. மணிமேகலை பெளத்த சமயக்கொள்கை நிரம்பின நூல். ஆகவே அதைப் படித்தபோது பல செய்திகள் தெரியவில்லை. ‘வீரசோழியம்’ என்ற இலக்கண நூல் ஒரு பௌத்தரால் இயற்றப்பட்டது. அதில் பௌத்த சமயக் கருத்துக்கள் காணப்பட்டன. அவற்றைப் படித்தும் பல செய்திகளை அறிந்துகொண்டார். சென்னையில் மளூர் ரங்காசாரியார் என்ற பேராசிரியர் இருந்தார். அவர் பெளத்த நூல்களை நன்றாகக் கற்றவர். அவர் வாயிலாகப் பல செய்திகளை இவர் அறிந்து கொண்டார். பெளத்த சமய சம்பந்தமான நூல்கள் பல ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றையெல்லாம் தருவித்து ரங்காசாரியாரிடம் கொடுத்தார். அவர் அவற்றைப் படித்து, பௌத்த மதக் கருத்துக்களை எல்லாம் சொன்னார். அவற்றையெல்லாம் மிக்க ஆர்வத்தோடு ஒரு மாணாக்கனைப் போலத் தொகுத்துக்கொண்டார்.... 1896-ஆம் வருடம் ஜூன் மாதம் மணிமேகலையை சென்னையில் கொண்டுவந்து அச்சிடக் கொடுத்தார். பெளத்த சமய சம்பந்தமாகத் தாம் தெரிந்து கொண்டவற்றை எல்லாம் புத்தர், பெளத்த தருமம், பெளத்த சங்கம் என்னும் தலைப்பில் எழுதி அவற்றை மணிமேகலைப் பதிப்பின் முன் அமைத்தார். அகராதி, அரும்பதவுரை ஆகியவை எல்லாம் இணைக்கப் பெற்றன. 1898-ஆம் வருடம் ஜூலை மாதத்தில் மணிமேகலை நிறைவேறியது. அதில் 59 தமிழ் நூல்களிலிருந்தும், 29 வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டியிருந்தார். அரும்பதவுரையில் கண்ட சொற்களுக்கு விளக்கங்களையும் கொடுத்திருந்தார். மணிமேகலை கதைச் சுருக்கத்தையும் சேர்த்திருந்தார்.... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 15-20 அத்தியாயங்கள்)...
கண்ணன் பாட்டு- 15
பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில் 15 வது கவிதை- கண்ணன் - என் காந்தன்.
தமிழ்த் தாத்தா (11, 12, 13, 14)
1876-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ஆசிரியப் பெருமானுடைய ஆசிரியரும், பெரும்புலவர் பெருமானுமாகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை இறைவன் திருவடியை அடைந்தார். கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் அந்தப் புலவர் பெருமானுக்குத் தமிழே நினைவாக இருந்தது. அந்தக் கடைசிக் காலத்தில் கூடத் திருவாசகத்தை வாசித்துக் கொண்டிருந்த இவருக்கு ஏற்பட்ட ஒரு சிறு ஐயத்தைத் தீர்த்து வைத்தார். பிள்ளையின் மறைவினால் ஆசிரியர் துன்பக் கடலில் ஆழ்ந்தார். சுப்பிரமணிய தேசிகரைப் பார்க்கும் போது விம்மி விம்மி அழுதார். "பிரிவதற்கரிய பொருளை இழந்து விட்டோம். இனி நாம் என்ன செய்வோம்? உம்மிடத்தில் பிள்ளையவர்களுக்கு எத்தனையோ அன்பு இருந்தது. இனியும் நீர் இந்த மடத்துப் பிள்ளையாகவே நம்மிடம் பாடம் கேட்டுக் கொண்டு இங்கு இருந்து வரலாம்” என்று சுப்பிரமணிய தேசிகர் ஆறுதல் கூறினார்... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 11-14 அத்தியாயங்கள்)...
இன்றைய இந்தியாவின் முகங்கள்-1
உலகம் முழுவதும் கொரானா தொற்றுப் பரவி பாதிப்பை ஏற்படுத்திய போது அதற்கு தடுப்பூசியை ஓராண்டுக்குள் கண்டுபிடித்து, நம்மவருக்கு மட்டுமல்ல - உலகெங்கும் இலவசமாகவும் மிகக் குறைந்த விலையிலும் கொடுத்து சாதனை படைத்தது மோடி அரசு. அந்தச் சாதனைக்குப் பின்னால் இருந்தது பாரத் பயோடெக் நிறுவனம். அதைத் துவங்கியவர் டாக்டர் கிருஷ்ண எல்லா-வும் அவரது மனைவி டாக்டர் சுசித்ரா எல்லா-வும்.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
‘சுமைதாங்கி’ திரைப்படத்தில் இடம்பெற்ற கவியரசரின் இப்பாடல், காலத்தை வென்று ரீங்கரிக்கும் இனிய தத்துவப் பாடல்....
பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்: நூல் மதிப்புரை
மேற்கத்திய, மார்க்சீய தாக்கத்துடன் சரித்திரத்தைப் பார்க்கும் வரலாற்றாசிரியர்கள் திரிக்கும், மறைக்கும் வரலாற்றுப் பகுதிகளுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவது, வீர சாவர்க்கர் எழுதிய இந்த நூலின் தலையாய குறிக்கோள். முக்கியமாக – பாரதத்தின் /ஹிந்துக்களின் வரலாறு தோல்வியின் வரலாறு, பல நூற்றாண்டு அடிமைத்தனத்தின் வரலாறு என்ற தவறான கண்ணோட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. பாரத/ஹிந்து வரலாறு இடைவிடாத போராட்டத்தின் வரலாறு. நம் நாட்டின் அரசர்கள், மக்கள், வீரர்கள், தலைவர்கள், போராடி இன்றும் வெற்றி பெற்ற நாகரீகமாக வேத, ஹிந்து, பாரத நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் திகழச்செய்துள்ளார்கள் எனும் கருத்தை நூலாசிரியர் ஒவ்வொரு கட்டத்திலும் ஆழமாக பதியவைக்கிறார்.
கண்ணன் பாட்டு – (10-14)
கண்ணனைத் தனது உள்ளங்கவர் கள்வனாக, மனங்கவர் காதலனாகக் கருதி மகாகவி பாரதி பாடும் இப்பாடல்கள் அகப்பாடலின் ஒரு வடிவம். ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில் 10 முதல் 14 வரையிலான 5 கவிதைகள் இவை...
தமிழ்த் தாத்தா (7, 8, 9, 10)
குருபூஜை அன்று பிள்ளையவர்களோடு ஆசிரியர் தங்கியிருந்தார். அப்போது ஒரு புலவர் வந்து சுப்பிரமணிய தேசிகரைப் பற்றிப் புகழ்ந்து தமக்கு ஒரு பாட்டு எழுதித் தரும்படி பிள்ளையிடம் கேட்டார். பிள்ளையவர்கள் எழுதித் தந்தார். பின்னர் அதுபோலப் பலர் ஒருவர் பின் ஒருவராக வர, ஒவ்வொருவருக்கும் ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தார். அவர்கள் அந்தப் பாடல்களைத் தாமே எழுதியதாகத் தேசிகரிடம் போய்ச் சொல்லிப் பரிசு பெற்றார்கள். மறுநாள் தேசிகரை மீனாட்சிசுந்தரம் பிள்ளை சந்திக்கும்போது, 'இரவு எல்லாம் பிள்ளையவர்களுக்கு மிகவும் வேலை வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது' என்று தேசிகர் குறிப்பாகச் சொன்னார். (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 7- 10 அத்தியாயங்கள்)...
கண்ணன் பாட்டு- 9
கண்ணனின் விஷமங்கள் அனைத்தும் குழந்தைத்தனம். அதைச் சொல்லிப் புலம்பும் குழந்தைமையின் அழகிய வெளிப்பாடே இப்பாடல். பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில் 9வது பாடல் இது...
தமிழ்த் தாத்தா (3,4,5,6)
"அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சி அடைந்த தோற்றமும், இளந் தொந்தியும், முழங்கால் வரையில் நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின்புறத்துள்ள சிறிய குடுமியும், இடையில் உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோன்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோன்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப் பார்க்கும் பார்வை இல்லை. அலட்சியமான பார்வையும் இல்லை. தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்ல மெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வை தான் இருந்தது. அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உற்சாகம் இல்லை; சோம்பலும் இல்லை; படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே ருத்திராட்ச கண்டி விளங்கியது. பல காலமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாசகனைப் போல நான் இருந்தேன். அவனுக்குக் காட்சியளிக்கும் அத் தெய்வம் போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உற்சாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளித்தது." - கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலில் இருந்து...
கண்ணன் பாட்டு- 8
பெண்குழந்தையைப் பெற்ற தந்தையர் பாக்கியவான்கள். தனது குழந்தையை தந்தை முத்தமிட்டு, சீராட்டி மகிழ்வது ஒரு தெய்வீக அனுபவம். இதையே கண்ணன் பாட்டு தொகுப்பில் எட்டாவது கவிதையான ‘கண்ணம்மா - என் குழந்தை’ என்ற பாடல் காட்டுகிறது. இப்பாடல் திரையிசைப் பாடலாக பலகோடி மக்களைக் கவர்ந்த பாடல் என்பது கூடுதல் தகவல்...