அந்நியா்களா அந்தணா்கள்?

திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகத்தின் தலைவரான திரு. டி.எஸ்.தியாகராஜன் ‘தினமணி’ நாளிதழில் எழுதியுள்ள, நமது மனசாட்சியை உலுக்கும் கட்டுரை இது…

பாஞ்சாலி சபதம் – 2.3.13

பீமனும் பார்த்தனும் சபதம் செய்தவுடன், காப்பிய நாயகி பாஞ்சாலி சபதம் செய்கிறாள். அவைக்களத்தே தனது பெண்மையை அவமதிக்கத் துடித்த கயவர்களைத் தண்டிக்க வெஞ்சினம் கூறுகிறாள், மாகாளி வடிவில் நின்ற பாஞ்சாலி. “பாவிதுச் சாதனன் செந்நீர், - அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம், மேவி இரண்டுங் கலந்து - குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல்முடிப் பேன்யான் - இது செய்யுமுன்னே முடியேன்” என்று ஆனையிடுகிறாள். இதுகேட்டு ‘ஓம் ஓம்’ என்று உறுமியது வானம். பூமியில் நடுக்கம் நிகழ்ந்தது. புயல் வீசியது. தருமன் பக்கமே தர்மம் என்பதை ஐம்பூதங்கள் சாட்சியாக உரைத்தன. “நாமும் கதையை முடித்தோம் - நானிலம் முற்றும் நல்லின்பத்தில் வாழ்க!” என்று நிறைவு செய்கிறார் மகாகவி பாரதி...

ஆச்சார்யர் நரேந்திரர்!

திரு. திருநின்றவூர் கே.ரவிகுமார், சென்னையில் வசிக்கிறார்; அசோக் லேலண்ட் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தர் 150வது ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கான ‘பிரபுத்த பாரத’ குழுவில் உறுப்பினராக இருந்தவர்; சிறந்த மொழிபெயர்ப்பாளர்; எழுத்தாளர். ‘பொருள் புதிது’ இணையதள ஆசிரியர் குழு உறுப்பினர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே…

பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?

பாரதியாரின் தரிசனங்களை முழுமையான கருத்தாக்கங்களாக நாம் பார்க்க வேண்டுமே அல்லாது ஏதோ ஒரு கவிதையில் இருந்து ஒன்றிரண்டு வரிகளை மேற்கோள் காட்டி அவர் “நாத்திகர்” என்றெல்லாம் பேசுவது பகுத்தறிவின்மையையே காட்டுகிறது. குறிப்பாக எதையுமே உருப்படியாகவும், ஆழமாகவும் ஆராயாமல் கருத்துக் கூறும் திராவிட இயக்க அறியாமையை.

லோகோபகாரம்

தெய்வம் உண்டு. ‘’நலஞ் செய்வோன் என்றும் கெட்ட வழி சேரமாட்டான்’’ என்று கீதை சொல்லுகிறது. அவனுக்குக் கெடுதி நேரிடாதபடி அவனுடைய யோக க்ஷேமத்தைத் தான் சுமப்பதாகத் தெய்வம் வாக்களித்திருக்கிறது. ஆனால், ஆரம்பத்திலே சோதனைகள் நேரிடும். மனம் தளராமல் லோகோபகாரம் செய்துகொண்டே போனால் பிறகு சோதனைகள் நின்றுபோய் நன்மை உதயமாகும்....

உயிர் பெற்ற தமிழர் பாட்டு

மகாகவி பாரதியின் புரட்சிகரமான கருத்துகள் மிகுந்த இப்பாடல், பெரும்பாலான பாரதியார் கவிதைகள் தொகுப்புகளில் காணப்படுவதில்லை. “நந்தனைப் போல்ஒரு பார்ப்பான்- இந்த நாட்டினில் இல்லை”, “உண்மையின் பேர்தெய்வம் என்போம்- அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்”, “சூத்திர னுக்கொரு நீதி- தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி; சாத்திரம் சொல்லிடு மாயின்- அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”, “தோன்றி அழிவது வாழ்க்கை” - என்பது போன்ற அமரத்துவம் வாய்ந்த வைர வரிகள் மிகுந்த கவிதை இது...