ஸ்வதந்திர கர்ஜனை- 2 (22)

கோவைப் பகுதியில் நடந்த நிகழ்ச்சிகளை சுருக்கமாகப் பார்த்தோம். இனி தஞ்சை மாவட்டத்தில் நடந்த இரு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். முதல் நிகழ்ச்சியில்,  திருவையாறிலுள்ள அரசர் கல்லூரியில் தொடங்கி அங்கிருந்த அரசு அலுவலகங்கள் தீக்கிரையான செய்திகளையும், தொடர்ந்து சீர்காழியில் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள உப்பனாற்றுப் பாலத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கையும் பார்க்கலாம்.

பாஞ்சாலி சபதம் – 2.3.6

அவையில் பாஞ்சாலியின் கதறல் கேட்டு பீமன் பொங்கி எழுகிறான். தனது அன்னண் தருமனைப் பார்த்து, “மாதர் குல விளக்கை, பாஞ்சாலன் மகளை, திருஷ்டத்துய்மன் சகோதரியை, போரில் வென்று கைத்தலம் பற்றிவந்த காரிகையை சூதில் பணயம் வைத்தது ஏன்?” என்று சினத்துடன் வினவுகிறான். இறுதியாக, “இது பொறுப்பதில்லை - தம்பி! எரிதழல் கொண்டுவா. கதிரை வைத்திழந்தான் - அண்ணன் கையை எரித்திடுவோம்” என்று கர்ஜிக்கிறான் என்கிறார் மகாகவி பாரதி.

விவேகானந்தரை வணங்குவது இந்தியாவை வணங்குவதற்குச் சமம்!

திரு.ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்; முன்னாள் மத்திய கப்பல் துறை அமைச்சர். 26.9.2013 அன்று தஞ்சாவூரில் விவேகானந்த ரதத்தை வரவேற்று ஜி.கே.வாசன் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம் இது.