பாரதியும் பாரதிதாசனும் – 3 இ

பாரதியின் நாட்டுப் பற்று - நாட்டின் நலனைக் கவனியாதவர் மாட்டு அவர் கொண்ட அலட்சியம் - நாட்டுக்குத் தீங்கிழைப்பார்மாட்டு அவர் கொள்ளும் சீற்றம் - கடமை மறக்கும் ஆட்சியாளரை அவர் சாடுகின்ற திறம் ஆகிய அனைத்தும் சிறந்த கவிதை வடிவில் அமைந்திருப்பது பாஞ்சாலி சபதம்....

பாஞ்சாலி சபதம் – 2.3.5

நியாயம் சொல்ல வந்த பீஷ்மரும் துரியன் பக்கம் நிற்பது பாஞ்சாலிக்குத் தெளிவாகிறது. “சீதையைக் கடத்தி வந்த ராவணனை அவனது அவையில் இருந்தோர் பாரட்டினார்களாம். அதுபோலிருக்கிறது உங்கள் செய்கை” என்கிறாள். மண்டபம் கட்டி அழைத்து வந்தது எங்கள் அரசாட்சியைப் பிடுங்கத் தானா என்று கேட்கிறாள். ‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ என்று ஒரு வேறொரு பாடலில் பாரதி பாடுவது உண்மைதான் என்பதை அவையில் பாஞ்சாலியின் தர்க்கம் காட்டுகிறது. “பெண்டிர் தமையுடையீர்! பெண்களுடன் பிறந்தீர்! பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ? கண்பார்க்க வேண்டும்!” என்று கையெடுத்துக் கும்பிடுகிறாள். கொடுமை கண்டு எதிர்க்கத் திறமில்லா, நாணமற்ற அவையினரைப் பார்த்து.

விவேகானந்தரின் குரல்

பத்திரிகையாளர்  திரு. டி.ஐ.அரவிந்தன்,  ‘தி இந்து தமிழ்’ நாளிதழில் 2014-இல் எழுதிய பதிவு, இங்கு மீள்பதிவாகிறது.