‘மாயி’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி. நடிகர் சரத்குமாரும் வடிவேலுவும் திருமணத்திற்காக பெண் பார்க்கப் போவார்கள். பெண்ணின் தந்தை மணப்பெண்ணை அழைக்க, அந்தப் பெண் மின்னல் போல சடக்கென்று இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் போய் விடுவாள். அப்போது வடிவேலுவின் ரியேக்ஷன் பட்டையைக் கிளப்பும்..... யார் இந்த மொக்கச்சாமி?
Day: January 11, 2023
பாஞ்சாலி சபதம் – 2.3.3
குலைந்த நிலையில் இருந்தாலும், அழுது அரற்றினாலும், துருபதன் மகள் பாஞ்சாலியின் தீரம் குறையவில்லை. அம்மி மிதித்து, அருந்ததி காட்டி, வேள்வித்தீ முன்னர் கைத்தலம் பற்றிய தனது கணவர்களைப் பார்த்து இதற்காகவா உங்களை மனம் செய்தேன்? என்று அவையில் வினவுகிறாள் பாஞ்சாலி. இதனை “பாண்டவரை மின்செய் கதிர்விழியால் வெந்நோக்கு நோக்கினாள்.” என்று மகாகவி பாரதி குறிப்பிடுகிறார். அதாவது சுடும் பார்வை. அவளை தாதியென்று துச்சன் ஏச, கர்ணனும் சகுனியும் சிரிக்கிறார்கள். “சபையினோர்? வீற்றிருந்தார்!” என்கிறார் மகாகவி. அதாவது மனிதம் மறந்து மரத்துக் கிடந்தது அந்த அவை.
பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை
வரலாற்றுத்துறை பேராசிரியரான திரு. இரா.குப்புசாமி, ஈரோடு, நந்தா கலை, அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர். விவேகானந்தரின் 120- வது சிகாகோ சொற்பொழிவு தினம் மற்றும் பாரதியின் நினைவுதின விழா, 2013, செப். 11-ம் தேதி, திருப்பூர், சின்னக்கரையில் உள்ள பார்க் கலை கல்லூரியில் நடைபெற்றது. அதில் ‘பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை’ என்ற தலைப்பில், ஈரோடு, நந்தா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் திரு. இரா.குப்புசாமி ஆற்றிய உரையின் தொகுப்பே இந்தக் கட்டுரை.