தற்காலிக இந்திய சர்க்கார் ஆசாத் ஹிந்த் 1943 அக்டோபர் 21-இல் துவக்கப்பட்டது. இப்படி இந்த இந்திய தற்காலிக சுதந்திர சர்க்கார் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதை சிங்கப்பூரிலுள்ள சாத்தே சினிமா கட்டடத்தில் கிழக்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் பிரகடனம் செய்யப்பட்டது. இதற்கான பிரகடனத்தில் இந்திய சுதந்திர சர்க்காரின் பிரதம மந்திரியாகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நேதாஜி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு கையெழுத்திட்டார்.....
Day: January 29, 2023
பாரதியும் பாரதிதாசனும் -4இ
சமுதாயத்திலுள்ள குறைபாடுகள், விருப்பு வெறுப்புக்கள் ஆகியவற்றில் மனத்தை உழலவிட்ட கவிஞர் தம் பாடல்களில் அம் மன உழற்சியை வெளியிட்டுப் பலவிடங்களிலும் பாடியிருப்பதைக் காண்கின்றோம். இத்தகைய சூழ்நிலைக்கு எதிராக 'அழகின் சிரிப்பு' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள 16 கவிதைத் தொகுப்புகளும் 1944 - க்கு முன்னர் வெளியிடப் பெற்றது. ஆதலின் மேலே கூறிய குழப்பங்கள் எதுவுமில்லாமல் ஒப்புயர்வற்ற கவிதைகளாக விளங்கக் காண்கின்றோம்.
பழைய உலகம்
“அடுத்த ஜன்மத்தில் நான் மற்றொரு மனிதனாகப் பிறந்து வாழ்கையிலே செல்வமுண்டானால், இப்போதுள்ள எனக்கு எவ்விதமான லாபமும் இல்லை. அதைப்பற்றி எனக்கு அதிக சிரத்தை யில்லை. இந்த ஜன்மத்தில் பணம் தேடுவதுதான் நியாயம். வரும் ஜன்மத்து ரூபாய்க்கு இப்போது சீட்டுக் கட்டுவது புத்திக் குறைவு” - மகாகவி பாரதியின் யதார்த்தமான சிந்தனையும் லாகவமான எழுத்து நடையும் பிணைந்த கட்டுரை இது...
விவேகானந்தர்- 150 ஆண்டுகளைக் கடந்து…
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரசாரகர்; சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர்; மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளராகவும், விஜயபாரதம் வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர் திரு. நா.சடகோபன். சுவாமி விவேகானந்தர் குறித்து 2012-இல் இவர் எழுதிய கட்டுரை இங்கே…