கடல் கண்ணிகள்- கவிதைக்கு முன்னுரை

மகரிஷி அரவிந்தர் எழுதிய ‘கடலுக்கு’ என்ற ஆங்கிலக் கவிதையை தமிழில் மொழியாக்கம் செய்த மகாகவி பாரதி (கடல் கண்ணிகள்), அதற்கு எழுதிய முன்னுரை இது.

விவேகானந்தர்: என்றும் வாழும் இளமை

திரு. ஜெயமோகன், தமிழின் முன்னணி எழுத்தாளர்; திரைக்கதை வசனகர்த்தா. ‘தி இந்து- தமிழ்’ நாளிதழில் 2014-இல் இவர் எழுதிய கட்டுரை நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது.

பாஞ்சாலி சபதம் – 2.2.6

பாஞ்சாலியை அவைக்கு அழைத்து வருமாறு ஏவிய துரியனைக் கண்டு சினம் கொண்ட நடுநிலை நாயகரான விதுரன், ”மூட மகனே, நீ செய்வது தகாது. பாண்டவர் உன்னை மாய்க்கும் முன்னம் அவர்களிடம் பறித்ததை திருப்பி அளி” என்று அறிவுறுத்துகிறார். உடனே, விதுரனை மடையனென்று விளம்பிய துரியன் தேர்ப்பாகனை அழைத்து, ‘பாஞ்சாலியை அவைக்கு வருமாறு வேந்தன் பணித்ததைக் கூறு’ என்கிறான். தேர்ப்பாகனால் நடந்த இழிவை அறிந்த பாஞ்சாலி, “மாண்பிழந்த நாயகர்தாம்- என்னைமுன்னே கூறி இழந்தாரா? தம்மையே -முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா?” என்று பதிலறிந்து வருமாறு பாகனிடம் கூறுகிறாள். அதாவது, ஏற்கனவே அடிமைப்பட்டவனுக்கு பிறரை- குறிப்பாக மனைவியை- அடிமையாக்கும் சுதந்திரம் இல்லை என்பதே பாஞ்சாலியின் கருத்து.