அக்கினிக் குஞ்சுகள்- நூல் அறிமுகம்

பத்திரிகையாளர் வ.மு.முரளி, தினமணியின் இணைப்பிதழான  'இளைஞர் மணி'யில் 2015 அக்டோபர் 27 இல் தொடங்கி 2018 டிசம்பர் 20 வரை 120 வாரங்கள் தொடர்ந்து எழுதிய கட்டுரைத் தொடரின் தொகுப்பு இது.  “வாரந்தோறும் படித்தாலும் அப்பொழுது ஏற்படாத மலைப்பு நூல் வடிவில் தொகுப்பாக படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது”  என்று தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் குறிப்பிட்டுள்ளார். அது பொருத்தமான பாராட்டுத் தான்.

“சென்னை இளைஞர்களே, நீங்கள்தான் உண்மையில் அனைத்தையும் செய்து முடித்தவர்கள்”

திரு. மாலன் தமிழகம் அறிந்த மூத்த பத்திரிகையாளர்; இயற்பெயர் நாராயணன்; தினமணி, இந்தியா டுடே (தமிழ்), குமுதம், குங்குமம்,புதிய தலைமுறை ஆகிய பத்திரிகைகளிலும் சன் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்; கணையாழி, திசைகள் ஆகிய இலக்கிய இதழ்களில் பணியாற்றியவர்; ஜனகணமன (நாவல்), என் ஜன்னலுக்கு வெளியே, உயிரே உயிரே, சொல்லாத சொல் (கட்டுரைத் தொகுப்புகள்), மாலன் சிறுகதைகள் உள்ளிட்ட நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது முதல் கட்டுரை இங்கே…

தேசியக் கல்வி – 2

தேசியக் கல்வி ஏன் அவசியம் என்பதையும் அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும்  ‘தேசியக் கல்வி’ என்ற கட்டுரையில் எழுதிய மகாகவி பாரதி, அது தொடர்பான சில தனிப்பட்ட குறிப்புகளையும் எழுதி இருக்கிறார், அவை இங்கே  ‘தேசியக் கல்வி- 2’ என்ற தலைப்பில் அளிக்கப்படுகின்றன. கூடவே, தொகுப்பாசிரியர் திரு. பெ.தூரனின் விளக்கமும் இடம் பெறுகிறது…

காற்றுக்கென்ன வேலி?

இந்த உலகம் ஆண்- பெண் சேர்க்கையால் தான் வாழ்கிறது. உலகின் நியதியில் இருவரும் சமம். ஆனால், இயல்பில் ஆண் ஆதிக்கமே பெண்னுரிமை பேசும் நாடுகளிலும் கூடத் தொடர்கிறது. இந்த ஆதிக்கத்தை ஏற்காத சமத்துவத்துக்கான குரல்கள், மகாகவி பாரதி முதல் கவியரசு கண்ணதாசன் வரை- ஆண்களாலேயே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு ஓர் அரிய மாதிரிப் பாடல் தான் இங்கே பதிவாகிறது. 1977-இல்வெளியான ‘அவர்கள்’ (இயக்கம்: கே.பாலசந்தர்), ஆணுக்கும் பெண்ணுக்குமான அன்பின் ஆழத்தை புதிய நாற்கோணத்தில் காட்ட முயன்ற திரைப்படம். விவாகரத்து கொடுத்துவிட்ட சந்தேகப் பிராணியான கணவன், விதிவசத்தால் வாழ்வில் இணைய முடியாத முன்னாள் காதலன், தன்னை மிகவும் நேசிக்கும் மனைவியை இழந்த இளைஞன் ஆகியோர் ஓர் இளம்பெண்ணின் வாழ்வில் குறுக்கிடுகிறார்கள். அவர்களில் யாரைத் தேர்வு செய்கிறாள் அவள்? மீண்டும் அவளது பயணம் யாருடன்? இவர்கள் மூவரையும் ஒதுக்கி, தனிப் பயணம் தொடங்கும் புரட்சிகர மாது இவள்… மகனுடனான உறவை அறுத்து உடன் செல்கிறாள் இவளது முன்னாள் கணவனின் அன்னை. இவர்களது எல்லைகளை சுயநல ஆண்களால் வரையறுக்க இயலாது…

பாஞ்சாலி சபதம்- 2.2.2

சூதில் பாஞ்சாலியை பணயம் வைத்து தருமன் இழந்ததும், கௌரவர்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றனர். சூதில் அதுவரை வென்றதெல்லாம் ஒன்றுமேயில்லை; காமத்திரவியமாம் பாஞ்சாலியை வென்றதே மிகப் பெரும் வெற்றி என்று கூறி, காரணமான மாமனைப் பாராட்டுகின்றனர். இதிலிருந்து, அவர்களின் தீய உள்ளக் கிடக்கை வெளிப்படுகிறது...

மார்கழிப் பனித்துளி (6-7)

‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் எழுதும் ‘மார்கழிப் பனித்துளி’ இசைக் கவிதைகளை இங்கே மீள்பதிவு செய்கிறோம். இங்கே உள்ளவை இரு கவிதைகள்....

இந்தத் தெய்வம் நமக்கநுகூலம்

மகாகவி பாரதியின் மூத்த மகள் தங்கம்மாள் ருதுவான நாளன்று பாடிய பாடல் இது என யதுகிரி அம்மாள் குறிப்பிடுகிறார்.

புத்தாண்டுக் கவிதைகள் இரண்டு

நமக்கு ஒவ்வொரு நாளும் புதிய வாழ்நாளே. உறங்கி விழிப்பதே புதிய பிறவி தான். எனில் புத்தாண்டு என்பது என்ன? இக் கவிதைகள் செயற்கையான மின்சிசிறிக் காற்றை மறுதலித்து இயற்கைத் தென்றலை நாடுமாறு சொல்கின்றன... எனி ஹவ், ஹேப்பி இங்கிலிஷ் நியூ இயர்!