1920-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஒரு விபரீத முடிவை எடுத்தது. அதாவது, பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்ப்பதற்காக, சட்டசபைத் தேர்தல்களைப் புறக்கணிப்பதாக அக்கட்சி அறிவித்தது. இதன் பின்புலத்தில் மகாத்மா காந்தி இருந்தார். இதனை காங்கிரஸ் கட்சியிலிருந்த தீவிரவாத கோஷ்டியினர் (பிபின் சந்திர பால், சித்தரஞ்சன் தாஸ் உள்ளிட்டோர்) ஏற்கவில்லை. அவர்களை ஆதரித்த சுதேசமித்திரன் பத்திரிகையும் மகாத்மா காந்தியின் முடிவை எதிர்த்தது. அதுகண்டு காந்தி அபிமானிகள் பலர் மகாகவி பாரதிக்கு தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் சுதேசமித்திரன் பத்திரிகையில் நீங்கள் எப்படி வேலை செய்யலாம்? என்று அவர்கள் கேட்டனர். அதற்கு சுதேசமித்திரன் பத்திரிகையிலேயே மகாகவி எழுதிய பதில் தான் இக்கட்டுரை… இதில் பாரதியின் அரசியல் ஞானமும், தேசபக்தியும் மிளிர்கின்றன.
Day: January 20, 2023
பாஞ்சாலி சபதம் – 2.3.11
பாஞ்சாலியை அவமதிக்க எண்ணிய கௌரவர் சோர்ந்து விழுந்ததைக் கண்டு அவை அமைதி காத்தது. அப்போது, பீமன் எழுந்து வெஞ்சினம் உரைக்கிறான். “கண்ணன் பதம் மீதும் கண்களின் கழலால் மதனனை எரித்த சிவனின் கழலடி மீதும் ஆணையிட்டு உரைக்கிறேன்” என்று சொல்லும் அவன், எங்கள் தேவியைத் தனது தொடை மீது அமரச் சொன்ன நாய்மகன் துரியோதனனை யுத்தக் களத்தில் தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்; துச்சாதனைன் தோள்களைப் பிய்ப்பேன். இது நான் சொல்லும் வார்த்தை அல்ல, தெய்வத்தின் வார்த்தை!” என்று சபதம் செய்கிறான்.
விவேகானந்தம்
திரு. கவிக்கோ ஞானச்செல்வன், தமிழகம் அறிந்த புலவர், சென்னையில் வசிக்கிறார்; தமிழாசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர்; சிறந்த எழுத்தாளர். ‘பாரதி வாழ்கிறார், நீங்களும் கவிஞராகலாம், அர்த்தமுள்ள அரங்குகள்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தினமணிக்கதிரில் வெளியான ‘பிழையின்றித் தமிழ் எழுதுவோம்’ தொடர் தமிழ்மொழி மீதான இவரது பற்றை வெளிப்படுத்தும். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது….