பாரதியும் பாரதிதாசனும்- 4அ

பாரதி, பாரதிதாசன் என்ற இருவருடைய கவிதைகளையும் ஆர அமர நினைந்து பார்ப்போமேயானால், இருவருடைய உணர்ச்சிக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதை அறிய முடியும். இருவருடைய ஆற்றலும் பேராற்றல்கள் என்பதிலும் ஐயமில்லை. பலவிடங்களில் வாழும் மக்களிடம் பழகிய காரணத்தால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் குழாய் மூலம் நீர் சொரிவது போலப் பாரதியின் கவிதைகள் வெளிப்பட்டன. தமிழர்களை அல்லாமல் பிற மக்களோடு பழகும் வாய்ப்பைப் பெறாத காரணத்தாலும் பிற இடங்களுக்கு அதிகம் சென்று தங்கி உறவு கொள்ளாத காரணத்தாலும் புரட்சிக் கவிஞரின் பாடல்கள் குடத்தைக் கவிழ்த்து நீரைச் சொரிவது போல உணர்ச்சியை அப்படியே கொட்டி விடுகின்றன.

பாஞ்சாலி சபதம் – 2.3.10

அவையில் பாஞ்சாலியைச் சிறுமை செய்யும் நோக்கில் துச்சாதனன் அவளது சீலையைப் பற்றி இழுக்கிறான். அப்போது வேறு வழியின்றி கண்ணனைச் சரண் புகுகிறாள் துருபதன் மகள். “ஆதிமூலமே என்றழைத்த யானைக்காக முதலையை மாய்த்தவன்; காளிங்கன் மீது களி நடனம் புரிந்தவன்; சக்கரமும் சார்ங்கமும் ஏந்தியவன்; தூணைப் பிளந்து நரசிம்மமாக அவதரித்து அகந்தை கொண்ட அசுரனை மாய்த்தவன்; முனிவர் அகத்தில் மிளிர்பவன்; அறிவினைக் கடந்த விண்ணகப் பொருளான கண்ணா, என் மானத்தைக் காப்பாயாக!” என்று மனமுருகி வேண்டி இருகரம் கூப்பினாள். அப்போது ஆங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது.  “பொய்யர்தந் துயரினைப்போல், - நல்ல புண்ணிய வாணர்தம் புகழினைப்போல், தையலர் கருணையைப் போல்…” பாஞ்சாலியின் ஆடை வளர்ந்த்து. துச்சாதனன் துகிலுரிக்க உரிக்க, பாண்டவர் ஐவரின் தேவியின் சீலை, புதிது புதிதாய், வண்ணப் பொற்சேலைகளாக வளர்ந்தது. கரம் சோர்ந்து வீழ்ந்தான் கீழ்மகன்…

ஏழையே தெய்வம்!

பேரா. திரு. இரா.வன்னியராஜன், திருவேடகம் விவேகானந்த குருகுலக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென்பாரதத் தலைவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் உறித்த கட்டுரை இது…