வங்கமே வாழிய!

14-9-1905-இல் சென்னைக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் மகாகவி பாரதி பாடிய பாடல் இது; மறுநாள் ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் வெளியாகி உள்ளது.

சுவாமிஜியைக் கண்டெடுத்த தமிழகம்

‘பத்மன்’ என்ற பெயரில் எழுதிவரும் திரு. நா.அனந்த பத்மநாபன், பல நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர்.  சென்னையில் வசிக்கிறார். இதழியல் துறையில் பல்லாண்டுகால அனுபவம் உடைய இவர், தமிழக அரசின் விருது பெற்ற  ’மூன்றாவது கண்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதி  இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

பாஞ்சாலி சபதம் – 2.2.4

விநாச காலம் நெருங்குகையில் விபரீத புத்தி ஏற்படுவது இயல்பு. கௌரவர்களின் அழிவுக்காலத்துக்கு அடிகோலிடும் நிகழ்வு இப்போது நிகழ்கிறது. சூதில் தோற்ற சகோதரனின் மனைவியை - அவைக்கு பாஞ்சாலியை அடிமையாக அழைத்து வருமாறு ஏவுகிறான் துரியன். அப்போது உலகில் நெறி கெடுவதால் குழப்பம் நேரிடுகிறது என்று சொல்வதுடன் நிறுத்தவில்லை, மகாகவி பாரதி. சிவனும் மாலவனும் பிரம்மனும் வாணியும் லட்சுமியும் கொற்றவையும் நிலைகுலைகிறார்கள் என்கிறார்... இங்கே அவரது யாப்பு ஆசிரியப்பாவாக மாறுகிறது....

பாரதியும் பாரதிதாசனும்- 3அ

இளமையிலேயே நாடு முழுவதையும் சுற்றித் திரிந்து பார்த்த காரணத்தாலும் பிற மொழி பேசும் இந்திய நாட்டு மக்களோடு பல்லாண்டுகள் பழக நேர்ந்த காரணத்தாலும், பாரதியாரின் அறிவு, விரிந்த பரப்பும் பாங்கும் கொண்டது என்பதை மறுக்க முடியாது. இந்தியா முழுவதையும் ஒன்றாகக் காணுகின்ற ஒருமைக் கண்ணோட்டம், பரந்துபட்ட அவருடைய அனுபவத்தின் விளைவு என்று நினைக்க வேண்டியுள்ளது.