புதுச்சேரியில் புயற் காற்று

புதுவையில் 1016-இல் வீசிய புயலின் பாதிப்புகளை நேர்முக வர்ணனையுடன் செய்தியாக்கி இருக்கிறார் மகாகவி பாரதி. ”ஏழை ஜனங்களின் கஷ்டங்கள் பொறுக்கக்கூடிய நிலைமையிலேயில்லை. தெய்வந்தான் ரக்ஷிக்க வேண்டும்.” என்று செய்தியின் இடையே கூறும் பாரதியின் மானுடநேயம் கவனிக்கத் தக்கது...

ஸ்வதந்திர கர்ஜனை- 1(7)

தன்னிடம் பெரும் படையெதுவும் இல்லை, ஆயுதங்களும் சொல்லும்படியாக எதுவும் இல்லை, இருந்தும் அவரிடமிருந்த சாமர்த்தியமும் வீரமும் கைகொடுக்க, பிரிட்டிஷாருக்கு தாந்தியா தோபே சிம்ம சொப்பனமாக இருந்தார். தாந்தியா என்ன மந்திரம் செய்தாரோ தெரியாது, எதிரிகளான சுதேச மன்னர்கள்கூட இவரைக் கண்டதும் கேட்ட உதவிகளைச் செய்து கொடுத்தார்கள்.

ஆச்சார்ய புருஷர் விவேகானந்தர்

விடுதலை வீரர், 'வீரமுரசு’ என்றழைக்கப்பட்ட தேசபக்தர் சுப்பிரமணிய சிவா,  ‘ஸ்வதந்திராநந்தன்’ என்ற புனைப்பெயரில் சுவாமி விவேகானந்தரின் அருள்மொழிகளை மொழிபெயர்த்து வெளியிட்ட நூலின் முன்னுரை இது. இச்சிறிய கட்டுரையில், தான் அறிந்த சுவாமி விவேகானந்தரை எளிய முறையில் அறிமுகம் செய்கிறார் சுப்பிரமணிய சிவா.

கலியுக கடோற்கசன்

சமகால நிகழ்வுகளை நமது முன்னை வரலாற்றுப் பெருமையுடனும், கனவுகள் மிக்க எதிர்காலத்துடனும் ஒப்பிட்டு, சமுதாயத்துக்கு வழிகாட்டுபவரே உண்மையான எழுத்தாளர். அந்த வகையில், மகாகவி பாரதி தமிழ் எழுத்தாளர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்கிறார். இந்தக் கதையில் அதீத பலசாலி ஒருவனது திறன்களை பகடியாக வர்ணிக்கும் பாரதி, அவன் வைத்திருந்த சில காகிதங்களில் இருந்த குறிப்புகளை மிகவும் கேலியாக குறிப்பிடுகிறார். ‘ஹோம்ரூல்’ இயக்கத்தையும் இடையே போகிற போக்கில் நையாண்டி செய்கிறார். இறுதியாக “ஹிந்துக்களுடைய மூல பலமாகிய மந்திர சாஸ்திரத்தை இடைக்காலத்து மூடர் இவ்வளவு சீர்கெடுத்து வைத்திருப்பதையும், அதைத் தற்காலத்து மூடர்களிலே பலர் நம்புவதையும் நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமுண்டாயிற்று” என்று அவர் குறிப்பிடுவதிலிருந்து, தேசநலன் கருதும் உன்னத எழுத்தாலனை அவரிடம் தரிசிக்கிறோம்.

வில்லிசை வித்தகர் விண்ணில் கலந்தார்!

இனி அப்படி ஒருவரை நாம் காண்பதற்கில்லை. கத்தியை மிஞ்சும் புத்திக் கூர்மையும், கடவுளே நாணும் குழந்தைத் தூய்மையும் கலந்திருக்கும் ஒருவரை எங்கே காணப் போகிறோம்? அந்தத் தாமிரபரணி தந்த தங்கத் தமிழ்ச் சொற்கள் அலைபுரளும் லாகவத்தை எவரிடம் பார்க்கப் போகிறோம்? என்ன கவிதை! என்ன நகைச்சுவை! என்ன சரளம்! எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அந்தப் பேரன்பு!

மகாவித்துவான் சரித்திரம்- 1(24-இ)

மாயூரம் சிறந்த சிவஸ்தலமாதலாலும் கல்விமான்களாகிய பல பிரபுக்களும் தமிழபிமானிகளும் வித்துவான்களும் நிறைந்திருந்த நகரமாதலாலும் இவருக்கு அவ்வூர் வாழ்க்கை ஏற்றதாகவும் உவப்புள்ளதாகவும் இருந்தது. அங்கே இருந்துகொண்டு அடிக்கடி திருவாவடுதுறை சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்துச் சிலநாள் அங்கே இருந்துவிட்டு வருவார். இவருடைய வீடு ஒரு கலைமகள் நிலயமாகத் திகழ்ந்தது. பல மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்வதும், தம்மைப் பார்க்க வந்த பிரபுக்களிடம் தமிழ் நூல்களிலுள்ள அருமையான செய்திகளைக் கூறி மகிழ்வித்தலும், புதிய செய்யுட்களை இயற்றுதலும் ஆகிய தமிழ்த் தெய்வ வழிபாடுகளே காலை முதல் இரவு நெடுநேரம் வரையில் இவருடைய வேலையாக இருந்தன. (முதல் பாகம் முற்றிற்று)...

வண்ணான் தொழில்

முந்தைய கதையில் குள்ளச்சாமியின் பிரதாபங்களைச் சொன்ன மகாகவி பாரதி, அதில் கூறியபடியே, இக்கதையிலும் அவரது பிரதாபத்தைத் தொடர்கிறார். முதுகின் மேலே கிழிந்த பழங் கந்தைகளையெல்லாம் ஒரு பெரிய அழுக்கு மூட்டை கட்டிச் சுமந்து கொண்டு வந்த குள்ளச்சாமியிடம், “ஏ சாமி, உனக்கென்ன பயித்தியமா? கந்தைகளைக் கட்டி ஏன் முதுகிலே சுமக்கிறாய்?” என்று கேட்கிறார் பாரதி. அதற்கு, “நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய், நான் முதுகின் மேலே சுமக்கிறேன்” என்று சொல்லி ஓடிப்போய் விட்டார். “உடனே நான் பொருள் தெரிந்து கொண்டேன்” என்கிறார் பாரதி....

வசந்தகால நதிகளிலே…

செய்யுளின் கடைசி வரியின் கடைசிச் சொல்லும், அடுத்த செய்யுளின் முதல் வரியின் முதல் சொல்லும் ஒன்றாக அமைந்திருப்பது ‘அந்தாதி’ எனப்படும். அதாவது அந்தமே ஆதியாகத் தொடர்வது. இந்த யாப்பிலக்கண முறையில் திரைப்படப் பாடலையும் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன். ‘மூன்று முடிச்சு’ படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல், திரைப்படத்தின் அதிரடித் திருப்பக் காட்சியை உள்ளடக்கியது. அதற்கேற்றவாறு சொற்பிரயோகத்தையும் கையாண்டிருக்கிறார் கவியரசர்.

சும்மா

பகவத்கீதையின் பத்தாவது அத்தியாயமான விபூதி யோகத்தில் பகவான் கிருஷ்ணர் கூறிய கருத்துகளையே, சுருக்கமாக இக்கதையில் குள்ளச்சாமி வாயிலாகக் குறிப்பிடுகிறார் மகாகவி பாரதி. ”ஹிந்துஸ்தானத்து மகா யோகிகளின் மகிமையால் இந்த தேசம் இன்னும் பிழைத்திருக்கிறது. இனி இந்த மண்ணுலகம் உள்ளவரை பிழைத்திருக்கவும் செய்யும்” என்று அதே குள்ளச்சாமி கூறுவதாக எதிர்கால தீர்க்கதரிசன வாக்கையும் மகாகவி இதில் பதிவு செய்கிறார்...

சத்திய சோதனை- 4(31-35)

தாம் கோழையாக இருக்கும் ஓர் உபாத்தியாயர், தம்மிடம் படிக்கும் மாணவர்களை வீரர்களாக்கிவிடவே முடியாது. புலனடக்கம் என்பதே தெரியாத ஓர் ஆசிரியர், புலனடக்கத்தை மாணவர்களுக்குப் போதித்து விடவும் முடியாது. ஆகையால், என்னுடன் இருக்கும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் நானே எப்பொழுதும் உதாரண பாடமாக இருக்கவேண்டும் என்பதைக் கண்டேன். இவ்விதம் அவர்கள் என் உபாத்தியாயர்களாயினர். அவர்களுக்காகவேனும் நான் நல்லவனாக இருந்து நேர்மையுடன் வாழ வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். டால்ஸ்டாய் பண்ணையில் இருந்தபோது எனக்கு நானே அதிகமாக விதித்துக் கொண்ட கட்டுத்திட்டங்களும் புலனடக்கங்களும், பெரும்பாலும் என் பாதுகாப்பிலிருந்த குழந்தைகளுக்காகவே என்றும் சொல்லலாம்.....

இது 1962 அல்ல, 2022!

இயக்குநர் மணிரத்னம் இயக்கி வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜசோழனை இந்து அடையாளங்களுடன் காட்டி விட்டதாக, தமிழகத்தில் சிலர் வயிறெரிகிறார்கள். அவர்களில் சிலர் ஒருபடி மேலாகச் சென்று இந்து என்ற மதமே இருந்ததில்லை என்று விதண்டாவாதம் செய்கிறார்கள். அவர்கள் வாங்கிய காசுக்குக் கூவுகிறார்கள்; தொலையட்டும். எனினும், விழிப்புணர்வுள்ள சமய அறிஞர்களும், ஹிந்து செயல்வீரர்களும் சமூக ஊடகங்களில் தங்கள் வாதங்களால் இந்த அறிவிலிகளுக்கு சம்மட்டி அடி கொடுத்து, பந்தாடி வருகிறார்கள்; இது 1962 அல்ல, 2022 என்பதை அந்த மண்டூகங்களின் மர மண்டையில் ஆணி அடித்தது போலப் புரிய வைக்கிறார்கள். அவற்றில் இரு பதிவுகள் இங்கே…

ஸ்வதந்திர கர்ஜனை- 1(6)

அரண்மனை வாயிலில் கூடியிருந்த மக்களை ராணி கடைசியாகச் சந்தித்தார். இருள் சூழ்ந்தது. ராணியை இனி பார்க்க முடியுமா என கண்ணீர் சிந்தினர் மக்கள். அப்போது ராணி வீர ராணுவ உடை அணிந்து, தன் வெள்ளைக் குதிரை மீதேறி அமர்ந்து இடையில் அவருடைய புகழ்பெற்ற வாள் அசைய, முதுகில் தனது சுவீகாரக் குமாரன் தாமோதரனைத் துணியால் இருகக் கட்டிவைத்துக் கொண்டு போர்க்களம் புகத் தயார் நிலையில் இருந்தார்.

செய்கை

....தெய்வத்தை நம்பிச் செய்கைப் பொறுப்பில்லாமல் இருப்போரெல்லாம் சோம்பேறிகளென்று நினைப்பது குற்றம். உண்மை அப்படியில்லை. இயற்கையின் வலிமையிலே இயற்கையின் கொள்கைப்படி, இயற்கையே மனிதரின் செயல்களையெல்லாம் நடத்துகிறான். இது மறுக்க முடியாத சத்தியம். இதை உணர்ந்தவன் ஞானி: இந்த ஞானமுண்டாகித் தான் செய்யும் செய்கைகளுக்குத் தான் பொறுப்பில்லையென்றும் தெய்வமே பொறுப்பென்றும் தெரிந்துகொண்டு நடக்கும் பெரியோர் சோம்பலிலே முழுகிக் கிடப்பதில்லை. அவர்கள் அக்னியைப் போலே தொழில் செய்வார்கள். ....

எனது  முற்றத்தில்- 24

தாம்பரம் வர்த்தக பிரமுகர், தேசியவாதி மீனாட்சிசுந்தரம் பல ஆண்டுகளுக்கு முன், அரவிந்தரைப் பற்றி பேசுங்கள் என்று என்னைக் கேட்டுக் கொண்டபோது எனக்கு தூக்கிவாரிப் போட்டது. காரணம், நான் பேச வேண்டிய இடம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம். அங்கு வள்ளல் கருணாநிதி செட்டியார் உபயத்தால் வருடாந்தர ஸ்ரீ அரவிந்தர் நினைவுச் சொற்பொழிவு நடக்கும். அதில்தான் அந்த ஆண்டு நான் போய் பேச வேண்டியிருந்தது. மொட்டை மாடியில் சிறுவர்களை உட்கார வைத்து அரவிந்தர் பற்றி கதை சொல்லலாம். ஒரு பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்றுவது என்றால், உதறலுக்குக் கேட்கவா வேண்டும்?

மகாவித்துவான்-சரித்திரம்-1(24ஆ)

காசியாத்திரை பலமுறை செய்தவரும் அக்காலத்தில் திருவிடைமருதூர்க் கட்டளை அதிகாரம் பெற்றுப் பார்த்து வந்தவருமான ஸ்ரீ சுப்பிரமணியத் தம்பிரானவர்களுடைய விருப்பத்தின்படி ஸ்ரீ காசியின் தலவரலாறுகளைக் கூறும் நூல்களுள் ஒன்றாகிய ஸ்ரீ காசி ரகசியமென்னும் நூல் இவரால் தமிழிற் செய்யுள் வடிவாக இயற்றப்பட்டது.