“தெய்வீக செய்தியைப் பற்றி மக்கள் பொதுவாகவே தெளிவற்றிருக்கிறார்கள். தெய்வீகக் கட்டளையை நாம் வேறுபடுத்தித் தெரிந்துகொள்ள வேண்டும். கடவுள் நம்மிடம் பல வழிகளில் பலவிதமாக பேசுகிறார். அதெல்லாம் தெய்வீக கட்டளை அல்ல. அது வரும்போது மிகத் தெளிவாகவும் மறுக்க முடியாததாகவும் இருக்கும். அது உங்கள் அறிவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும் மனம் அதை ஏற்று கீழ்படிந்தேயாக வேண்டும். அப்படிப்பட்டதொரு தெய்வீக கட்டளை கிடைத்துதான் நான் பாண்டிச்சேரிக்கு சென்றேன்”.
Month: September 2022
மகாவித்துவான் சரித்திரம்- 1(21-அ)
வாளொளி புற்றூரென்னுந்தலம் அரதனபுரமெனவும் வழங்கும்; தேவாரம் பெற்றது. இத்தலத்து ஸ்வாமியின் திருநாமம் மாணிக்கலிங்கரென்பது; அம்பிகையின் திருநாமம் வண்டுவார்குழல் நாயகி யென்பது. இத்தல விருட்சம் வாகை. குசகேதுவென்னும் ஒரு சோழவரசன் பொருட்டு அரதனப்பாறையிலிருந்து சிவபெருமான் சிவலிங்க வடிவாகத் தோற்றினமையால் இத்தலம் அரதனபுரமெனப் பெயர்பெற்றது. வாசுகி யென்னும் மகாநாகம் இத்தலத்தையடைந்து சிவபெருமானை வழிபட்டு ஆபரணமாகும் பேறு பெற்றது. அப்பாம்பு ஒரு புற்றிலுறைந்தமையால் புற்றூரென்று முதலில் ஒரு பெயருண்டாயிற்று.....
தராசு கட்டுரைகள்- 4
சில தினங்களின் முன்பு சென்னைப் பட்டணத்தில் பொருட்காட்சி பார்க்க பத்திரிகையின் மனிதரொருவர் போயிருந்தார். அங்கே சாமான்யமாகக் கிடைக்கக்கூடிய மிகவும் பெரிய பூசனிக்காயைக் காட்டிலும் அதிகப் பெரிதாகிய ஒரு பூசனிக்காய் இருந்தது. 'சாஸ்திர எருப் போட்டதனால் இந்தப் பயன் உண்டாயிற்றென்று தெரிகிறது. ஒரு புல் முளைக்கிற இடத்தில் இரண்டு புல் முளைக்கும்படி செய்பவன் தேசத்துக்குப் பெரிய உபகாரி' என்று இங்கிலிஷ்காரர் சொல்வதுண்டு. 'தொகைக்குள்ளது அளவுக்கும் உண்டு' என்று அந்தப் பத்திரிகைக்காரர் சொல்லுகிறார். ....
வையத் தலைமை கொள்!- 7
ஔவையின் ஆத்திசூடி, தமிழ்ப் பேரரசுகளின் வீழ்ச்சிக் காலத்தில் எழுதப்பட்டது. சமுதாயத்தில் ஒரு கட்டமைப்பையும் ஒழுங்கையும் உருவாக்கவே நீதிநூல்கள் எழுதப்பட்டன. அக்காலத்தில் அதனை ஆத்திசூடி முழுமையாக செய்தது. பாரதியின் காலம், தாய்நாடு மிலேச்சர்தம் கொடுங்கரங்களில் சிக்கித் தவித்த காலம். எனவே, சில இடங்களில் அவர் முந்தைய கட்டுக்களைத் தகர்க்கத் துணிகிறார். இதுவே பாரதி சில இடங்களில் ஔவையுடன் மாறுபடக் காரணம். இது அவரது புதிய பார்வை. அதனால் தமிழ் இலக்கியத்தில் விளைந்தது புதிய பாதை....
நம்பிக்கை அளித்த மகான்
-சுவாமி சிவானந்தர் நவீன இந்தியாவின் புகழ்மிக்க தேசப்பற்று கொண்ட இந்தத் துறவி 1863, ஜனவரி மாதம் 12-ம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். அவருக்கு நரேந்திரன் என்று பெயரிடப்பட்டது. அவரது தந்தை ஒரு மிகச் சிறந்த வழக்குரைஞர். அவரது அறிவுக்கூர்மை, பண்பாடு ஆகியவற்றால் அனைவராலும் மிகவும் மதிக்கப்பட்டவர். அவரது தாய் தேவி புவனேஸ்வரி கடவுள் பக்தி மிக்கவர்; மட்டுமின்றி தனது குழந்தைகளை மிகச் சிறந்தவர்களாக வளர்ப்பதில் திறமையுடையவராகவும் இருந்தார். சிறு வயது நரேந்திரன் குறும்புத்தனத்தோடு மனோதிடம் கொண்டவனாகவும் இருந்ததால், அவரைக் … Continue reading நம்பிக்கை அளித்த மகான்
கிளிக் கதை
நமது சமூகத்தில் நிலவும் மூடத்தனங்களையும், மோசடிப் பேர்வழிகளை நம்பி மோசம் போகும் மக்களையும் கண்டிக்க இதழாளர் என்றும் தவறியதில்லை. தீவிர மத நம்பிக்கை கொண்டவராயினும், சமுதாயத்தில் நிலவிய தவறான போக்குகளை அவர் அவ்வப்போது விமர்சித்து வந்தார். தனது எழுத்தையே அதற்கு ஆயுதமாக்கிய பாரதி எழுதிய நையாண்டிக் கதை இது...
வையத் தலைமை கொள்!- 6
இளைஞர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்; அவர்கள் தங்கள் குணத்தை, வலிமையை, அறிவை, சமூக உணர்வை, நடையழகை, எண்ணத்தை எவ்வாறு வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொன்ன பாரதி, அவற்றின் மூலமாக செய்ய வேண்டிய கடமைகளையும் பட்டியலிட்டுள்ளார். தனி மனித வளர்ச்சியானது அவனது குடும்பத்துக்கும், ஊருக்கும், அவன் பிறந்த நாட்டுக்கும், அதனால் இந்த உலகிற்கும் நன்மை தருவதாக அமைய வேண்டும். இதுவே பாரத பாரம்பரியம்....
மகாவித்துவான் சரித்திரம்- 1(20)
அப்பால் ஒரு விசேடகாலத்தில் திருவாவடுதுறையில் அம்பலவாண தேசிகர் முன்னிலையில் பல வித்துவான்களும் பிரபுக்களும் சூழ்ந்த மகாசபையில் அந்நூல் அரங்கேற்றப்பட்டது. அதைக் கேட்ட எல்லோரும் அதிசயித்தார்கள். திருவாவடுதுறை சம்பந்தமாகப் பல பிரபந்தங்கள் இருந்தாலும் அக் கலம்பகம் எல்லாவற்றிலும் சிறந்ததாகவும் பொருள் நயம் செறிந்ததாகவும் சைவ சம்பிரதாயங்களையும் ஆதீன சம்பிரதாயங்களையும் விளக்கிக் கொண்டிருப்பதாகவும் உள்ளதென்று கொண்டாடினார்கள். அப்பொழுது பெரிய காறுபாறாகவும், ஆதீன வித்துவானாகவுமிருந்து விளங்கிய கனகசபைத் தம்பிரான் முதலியோர்கள் இவருடைய புலமைத் திறத்தைக் கண்டு மகிழ்ந்து, “இவர்களுக்குச் சந்நிதானம் தக்க மரியாதை செய்தருள வேண்டும்” என்று தலைவரிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள். அதனைக் கேட்ட அம்பலவாண தேசிகர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகரோடும் ஆலோசித்து ‘மகாவித்துவான்’ என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கினார். எல்லோரும், “அத்தகைய பட்டத்திற்கு இவர் ஏற்றவரே” என்று கூறிச் சந்தோஷித்தார்கள். ....
தராசு கட்டுரைகள்- 3
நாம் இகலோகத்து அறிவிலும் மேம்பாடு பெற வேண்டும். தெரியாத சாஸ்திரங்களின் ஆரம்பங்களைப் பிறரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு அவற்றை நமது ஊக்கத்தாலும் உயர்மதியாலும் மேன்மேலும் வளர்ந்து மீளவும் உலகத்தாருக்கு ஊட்ட வேண்டும். இகலோக வளர்ச்சியிலே நாம் தலைமை வகிக்க வேண்டும். அதற்கு நாமே தகுதியுடையோர்....
வையத் தலைமை கொள்!- 5
ஒருவர் அடிப்படையாகப் பெற வேண்டிய குணநலன்கள், உடல் வலிமை, கல்வித் திறம் ஆகியவற்றைப் பெற்றிருந்தாலும், அவனது நடையழகும், நல்லெண்ணமும், சமுதாய உணர்வும்தான் அவனை அவையத்து முந்தி இருக்கச் செய்கின்றன; இலக்கை நோக்கி அவனை உந்தித் தள்ளுகின்றன. தனது ‘நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும், வருகின்ற ஹிந்துஸ்தானமும்’ என்ற கவிதையில், எப்படிப்பட்ட இளைஞர்கள் நாட்டில் இருக்க வேண்டும், எப்படிப்பட்டவர்கள் இருக்கக் கூடாது என்பதை அறுதியிட்டு உரைத்திருக்கிறார் பாரதி.
விடுதலைப் போரில் அரவிந்தர்- 10
“ஹிந்து மதம் என்றால் என்ன? சாஸ்வதமானது என்று நாம் அழைக்கும் சனாதன மதம் என்பது எது? முப்புரமும் கடல்களால் சூழப்பட்டு இமயமலையை ஒருபுறம் கொண்ட பழமையான இந்தப் புண்ணிய பூமி ஹிந்து தேசம். இந்த தேசத்தில் ஆரிய இனத்தவரால் காலம் காலமாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால் இது ஹிந்து மதம். ஆனால் இது ஒரு தேசத்துக்குள்ளோ அல்லது புவிப் பரப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள்ளோ கட்டுப்பட்டதல்ல. நாம் ஹிந்து மதம் என்று சொல்வது உண்மையில் எப்பொழுதும் இருக்கக்கூடிய மதம். ஏனெனில் அது எல்லோரையும் அரவணைத்துக் கொள்ளும் உலக மதம். எந்த ஒரு மதமும் எல்லாக் காலத்திற்கும் ஏற்புடையதாக இல்லாவிட்டால் அது உலக மதமாக, உலகம் தழுவிய மதமாக இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான, குறுகலான மதம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, ஒரு குறிப்பிட்ட நோக்கம் நிறைவேறும் வரையில் மட்டுமே உயிருடன் இருக்கும்”....
அந்தரடிச்சான் ஸாஹிப் கதை
நையாண்டியும் கற்பனையும் கலந்து செய்த இக்கதை, யாரையோ மறைமுகமாகச் சாடுகிறது. அது யாராயிருக்கும்?
வையத் தலைமை கொள்!- 4
‘குணநலம் சான்றோர் நலனே’ என்பார் திருவள்ளுவர் (திருக்குறள்- 982). நாட்டின் குடிமகன் சான்றோனாக இருக்க வேண்டும் என்று விழையும் பாரதி, அதற்கான பண்பு நலங்களைக் கூறிச் சென்றிருக்கிறார். அச்சமே மனிதனை கீழ்நிலைக்குத் தள்ளுகிறது என்பதால்தான் ‘அச்சம் தவிர்’ என்று தனது புதிய ஆத்திசூடியைத் துவக்குகிறார் பாரதி. ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்ற திருக்குறளை (1075) இங்கு நினைவு கூரலாம்....
ஆறு மனமே ஆறு…
ஆறு மனமே ஆறு… அந்த ஆண்டவன் கட்டளை ஆறு! (2) சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு… தெய்வத்தின் கட்டளை ஆறு! ஆறு மனமே ஆறு… அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!
தராசு கட்டுரைகள்- 2
நானிருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவிலே ஒரு சாஸ்திரியார் இருக்கிறார். நல்ல வைதீகர்; அத்தியயனத்திலே புலி; கிராத்தம் பண்ணி வைப்பதிலே ஸாட்சாத் வியாழக்கிழமைக்கு (பிருஹஸ்பதி பகவானுக்கு) நிகரானவர். அவர் வீட்டிலே அவரொரு கட்சி, இளையாள் ஒரு கட்சி, மூத்தாள் பிள்ளை முத்துசாமியும், அவன் மனைவியும் ஒரு கட்சி ஆக மூன்று கட்சிகளாக இருந்து பல வருடங்களாக இடைவிடாமல் சண்டை நடந்து வருகிறது. அவர் இன்று காலை என்னிடம் வந்து, என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்? என்று கேட்டார்.....