அண்டங்காக்கையும் அமாவாசையும்

நம் நாட்டில் பிரபலமான கேலிச்சித்திரக்காரர் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண். அவர் காக்கைகளை விதம்விதமாக வரைந்துள்ளார். அவரது மனைவி கமலா,  “அவருக்கு என்னை விட காக்காயைதான் ரொம்பப் பிடிக்கும்” என்று கிண்டலாகச் சொல்லி உள்ளார். லஷ்மணனுக்கு காக்கையை மிகவும் பிடிக்கும் என்பது உண்மைதான். காக்கை இவருக்கு 'பொன்' குஞ்சு.

ஸ்வதந்திர கர்ஜனை- 1(1)

அமரர் திரு. தஞ்சை.வெ.கோபாலன், திருவையாறில்  ‘பாரதி இலக்கியப் பயிலரங்கம்’ என்ற அமைப்பைத் துவங்கி, மகாகவி பாரதி குறித்து இளம் தலைமுறைக்கு அஞ்சல் வழி பாடம் நடத்தியவர்; தேசபக்தி மிளிரும் எழுத்தாளர். ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரியான இவர்  நமது தேசமே தெய்வம் இணையதளத்தில் எழுதிய தொடர் கட்டுரை இங்கு மீள் பிரசுரம் ஆகிறது. இத்தொடர் நமது நாட்டை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க தங்கள் இன்னுயிரை ஆஹூதியாக்கிய மாவீரர்களின் சரித்திரத்தை சுருக்கமாக விவரிக்கிறது. இத்தொடர் வாரம் இரு முறை நமது தளத்தில் வெளியாகும்.

தராசு கட்டுரைகள்- 8

தராசு சொல்லுகிறது:- புராணங்கள் முழுதும் சரித்திரமல்ல; ஞான நூல்கள்; யோக சாஸ்திரத்தின் தத்துவங்களைக் கவிதை வழியிலே கற்பனைத் திருஷ்டாந்தங்களுடன் எடுத்துக் கூறுவன. இவையன்றி நீதி சாஸ்திரத்தை விளக்கும்படியான கதைகளும் அந்நூல்களில் மிகுதியாகச் சேர்ந்திருக்கின்றன. சரித்திரப் பகுதிகளும் பல உண்டு. இவ்வாறு பல அம்சங்கள் சேர்ந்து ஆத்ம ஞானத்துக்கு வழிகாட்டி, தர்மநியதிகளை மிகவும் நன்றாகத் தெரிவிப்பதால் அந்த நூல்களை நாம் மதிப்புடன் போற்றி வருதல் தகும்....

சத்திய சோதனை- 4 (21-25)

     குழந்தைகள், பெற்றோரின் உடற்கூற்றை மாத்திரமேயன்றி அவர்களுடைய குணத்தின் தன்மைகளையும் பிதுரார்ஜிதமாகப் பெறுகின்றனர். சுற்றுச் சார்பிலுள்ள நிலைமைகளும் குழந்தைகளின் குணங்கள் அமைவதில் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. என்றாலும், குழந்தைகள், மூதாதையர்களிடமிருந்து அடைந்ததையே ஆரம்ப மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன. மூதாதையர்களிடமிருந்து பெறும் தீய தன்மைகளை வெற்றிகரமாகத் தள்ளிவிட்டு வளரும் குழந்தைகளையும் பார்த்திருக்கிறேன். ஆன்மாவுக்குத் தூய்மையே இயற்கையான குணமாக இருப்பதனால் இது சாத்தியமாகிறது.....