உடல்நிலை குணமடைந்த மங்கள் பாண்டே ராணுவ நீதிமன்றத்தின் முன்பாக குற்றவாளியாகக் கொண்டுபோய் நிறுத்தப்பட்டார். அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. அவருடைய இந்த செயலுக்கு யார் தூண்டுதல், யார் யார் அவருக்குத் துணையாக இருந்தார்கள். யாருடைய வழிகாட்டுதலில் அவர் இப்படிச் செய்தார் என்றெல்லாம் கேட்டும், அவர் யார் பெயரையும் சொல்லவில்லை. தன்னால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆங்கில அதிகாரிகளிடம் தனக்குத் தனிப்பட்ட எந்த விரோதமும் கிடையாது என்றார். தான் பிறந்த நாட்டைக் காப்பாற்றவும், தங்கள் கலாச்சாரங்களுக்கு அவமரியாதை நேரிடுவதை எதிர்த்தும் தான் இந்தப் போரில் ஈடுபட்டதாகக் கூறினார்.....
Day: September 28, 2022
மழை
ஒரு நாளில் நாம் எத்தனையோ நிகழ்வுகளைக் காண்கிறோம். அவற்றில் நாமே பாத்திரமாகவும் பங்கேற்கிறோம். அவற்றை பிறர் ருசிக்கும் வகையில் எழுத்தில் பதிவு செய்யும் கலை அனைவர்க்கும் வாய்ப்பதில்லை. இதோ, மகாகவி பாரதி தனது அனுபவத்தை எத்துணை அற்புதமாக அரிய கவிதையைச் செருகி கதையாக்கி இருக்கிறார், பாருங்கள்! “மழை வர்ஷமாகச் சொரிந்தது. ராமராயரும், பிரமராய அய்யரும் மற்றோரும் குடல் தெறிக்க ஓடி வந்து சேர்ந்தார்கள். நானும் வேணு முதலியாரும் கொஞ்சம் நனைந்து போயிருந்தோம். மற்றவர்கள் ஊறுகாய் ஸ்திதியில் இருந்தார்கள்.” என்ற வர்ணனையை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.... அவரது மேதமை புரியும்!
எனது முற்றத்தில்- 22
என் மதிப்புக்குரிய நண்பர் பி.எஸ்.என்.மல்லையா பற்றிப் பார்ப்போம். வங்கி அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் மல்லையா. சங்கப் பெரியவர்கள் சொல்லியதன் பேரில் 1948-இல் தொடங்கிய ‘விக்ரமா’ வார இதழின் ஆசிரியராக 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டார். இவரை காங்கிரஸ் கட்சி வளைத்துப் போட்டுக்கொள்ள குறி பார்த்தது. இவருடைய பணிக்காலம் நெடுக கர்நாடகாவின் நாலைந்து காங்கிரஸ் முதலமைச்சர்கள் உள்பட அனைவருடனும் நெருங்கிப் பழகியவர். ஆனால் காங்கிரசின் அழைப்புக்கு ஒரு ‘நமஸ்தே’ போட்டுவிட்டு தொடர்ந்து ஹிந்துத்துவ இதழியலில் காலுறைத்து நின்றார். ..