காதலியை வர்ணிக்கும் காதலனின் இதயமாக கவிஞர் மாறுகையில், “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் சொன்னதும்கூட இனிய பதிவாகிறது. “உலகில் சிறந்தது எல்லாம் எதுவோ அது நானே” என்பார் கிருஷ்ண பரமாத்மா. இங்கு, சிறந்ததாக தான் கருதும் வசந்த காலமும், ஓவியக் கலையும், மார்கழி மாதமும், மல்லிகை மலரும் காதலியையே நினைவுபடுத்துகின்றன, தமிழ்க் காதலரான கவியரசர் கண்ணதாசனுக்கு… மடியில் விளையாடும் மழலையாகவும், தழுவும் கன்னியாகவும், கண்போல் வளர்க்கும் அன்னையாகவும் காதலியைக் காணும் ஆணை காதலனாகப் பெற்ற பெண், புண்ணியம் செய்தவள்!
Day: September 26, 2022
அபயம்
காரணம் இல்லாமல் மகாகவி பாரதி எதுவும் எழுதவில்லை. இக்கதையை ஏன் எழுதியிருப்பார்?