-கவியரசு கண்ணதாசன்

காதலியை வர்ணிக்கும் காதலனின் இதயமாக கவிஞர் மாறுகையில், “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் சொன்னதும்கூட இனிய பதிவாகிறது. “உலகில் சிறந்தது எல்லாம் எதுவோ அது நானே” என்பார் கிருஷ்ண பரமாத்மா. இங்கு, சிறந்ததாக தான் கருதும் வசந்த காலமும், ஓவியக் கலையும், மார்கழி மாதமும், மல்லிகை மலரும் காதலியையே நினைவுபடுத்துகின்றன, தமிழ்க் காதலரான கவியரசர் கண்ணதாசனுக்கு… மடியில் விளையாடும் மழலையாகவும், தழுவும் கன்னியாகவும், கண்போல் வளர்க்கும் அன்னையாகவும் காதலியைக் காணும் ஆணை காதலனாகப் பெற்ற பெண், புண்ணியம் செய்தவள்!
காலங்களில் அவள் வசந்தம்!
கலைகளிலே அவள் ஓவியம்!
மாதங்களில் அவள் மார்கழி!
மலர்களிலே அவள் மல்லிகை! (2)
.
காலங்களில் அவள் வசந்தம்…
.
பறவைகளில் அவள் மணிபுறா!
பாடல்களில் அவள் தாலாட்டு ஓ…. (2)
கனிகளிலே அவள் மாங்கனி…
கனிகளிலே அவள் மாங்கனி!
காற்றினிலே அவள் தென்றல்!
.
காலங்களில் அவள் வசந்தம்!
கலைகளிலே அவள் ஓவியம்!
மாதங்களில் அவள் மார்கழி!
மலர்களிலே அவள் மல்லிகை!
.
காலங்களில் அவள் வசந்தம்…
.
பால் போல் சிரிப்பதில் பிள்ளை- அவள்
பனி போல் அணைப்பதில் கன்னி! (2)
கண் போல் வளர்ப்பதில் அன்னை!
கண் போல் வளர்ப்பதில் அன்னை- அவள்
கவிஞன் ஆக்கினாள் என்னை!
.
காலங்களில் அவள் வசந்தம்!
கலைகளிலே அவள் ஓவியம்!
மாதங்களில் அவள் மார்கழி!
மலர்களிலே அவள் மல்லிகை!
.
காலங்களில் அவள் வசந்தம்…
.
படம்: பாவ மன்னிப்பு (1961) இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடகர்: பி.பி.ஸ்ரீனிவாஸ்