அனைவரையும் அரவணைக்கும் பெருந்தன்மை, அனைத்து மதங்களை நேசிக்கும் பரந்த மனப்பான்மை ஆகியவற்றுடன் கூடவே, சமுதாய வலிமையும் எவர்க்கும் பணியாத வீரமும், உரிமையைக் காக்கும் தன்மானமும், மாறா இறைநம்பிக்கையும் அவசியம் என்பதையே, வேதபுரீஸ்வரர் திருகோயிலின் அழிவு, சரித்திரச் சாட்சியாக நம்மிடம் சொல்கிறது. ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்று முழங்கும் பிரான்ஸ் நாட்டினர் தான் வேதபுரியின் சிவன் கோயிலை இடித்தவர்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. ‘வசுதைவ குடும்பகம், யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பவை வலிமையானோர் சொல்ல வேண்டிய வார்த்தைகள் என்பதையும் வேதபுரி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது....
Day: September 7, 2022
நமது ஞாபகத்திற்கு
ஆங்கிலேயரிடம் விண்ணப்பித்தால் சுதந்திரம் கிடைக்குமா என்று, இக்கட்டுரையில் கோபமாகவும் கேலியாகவும் வினவுகிறார் மகாகவி பாரதி. “வெகு பிரயாசத்தால் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று 10 ஆயிரம் மைல் தூரத்திலிருந்து இங்கு வந்திருக்கும் ஆங்கிலேயர்கள் நமக்கு நம்முடைய வேண்டுகோள்களைக் கொடுப்பார்களென்று நினைப்பது வெகு மூடத்தனமாகும்” என்று தனது வாதத்துக்கு ஓர் ஆதார ருசுவையும் முன்வைக்கிறார். ”செவிடர்கள்போல் ஆங்கிலேயர்களுக்கு விண்ணப்பப் பத்திரிகையை அனுப்பாமல், நம்முடைய பிரயத்தனத்தையே தேடுவது மிகவும் சிரேஷ்டமானது” என்கிறார் இறுதியில்.
விடுதலைப் போரில் அரவிந்தர்- 8
....இது சூரத் காங்கிரஸ் மாநாடு பற்றி வெளிப்படையாகத் தெரிந்த விஷயம். ஆனால் அதற்கு பல காலம் கழித்து ஒரு சீடரின் கேள்விக்கு அரவிந்தரின் பதிலில், "திரைக்குப் பின்னால் நடக்கும் உறுதியான செயல்களைப் பற்றி வரலாறு எப்போதும் பதிவு செய்வதில்லை. திரைக்கு முன்னால் வெளிப்படையாக நடக்கும் விஷயங்களை மட்டுமே அது பதிவு செய்கிறது. மிதவாதிகளுடன் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்றும், காங்கிரசைப் பிளக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு உத்தரவிட்டது நான் தான். இந்த முடிவை திலகரைக் கலந்தாலோசிக்காமல் நானே சுயமாக மேற்கொண்டேன். இதை வெகு சிலரே அறிவார்கள்" என்று எழுதியுள்ளார்.....