அப்பால் ஒரு விசேடகாலத்தில் திருவாவடுதுறையில் அம்பலவாண தேசிகர் முன்னிலையில் பல வித்துவான்களும் பிரபுக்களும் சூழ்ந்த மகாசபையில் அந்நூல் அரங்கேற்றப்பட்டது. அதைக் கேட்ட எல்லோரும் அதிசயித்தார்கள். திருவாவடுதுறை சம்பந்தமாகப் பல பிரபந்தங்கள் இருந்தாலும் அக் கலம்பகம் எல்லாவற்றிலும் சிறந்ததாகவும் பொருள் நயம் செறிந்ததாகவும் சைவ சம்பிரதாயங்களையும் ஆதீன சம்பிரதாயங்களையும் விளக்கிக் கொண்டிருப்பதாகவும் உள்ளதென்று கொண்டாடினார்கள். அப்பொழுது பெரிய காறுபாறாகவும், ஆதீன வித்துவானாகவுமிருந்து விளங்கிய கனகசபைத் தம்பிரான் முதலியோர்கள் இவருடைய புலமைத் திறத்தைக் கண்டு மகிழ்ந்து, “இவர்களுக்குச் சந்நிதானம் தக்க மரியாதை செய்தருள வேண்டும்” என்று தலைவரிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள். அதனைக் கேட்ட அம்பலவாண தேசிகர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகரோடும் ஆலோசித்து ‘மகாவித்துவான்’ என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கினார். எல்லோரும், “அத்தகைய பட்டத்திற்கு இவர் ஏற்றவரே” என்று கூறிச் சந்தோஷித்தார்கள். ....
Day: September 15, 2022
தராசு கட்டுரைகள்- 3
நாம் இகலோகத்து அறிவிலும் மேம்பாடு பெற வேண்டும். தெரியாத சாஸ்திரங்களின் ஆரம்பங்களைப் பிறரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு அவற்றை நமது ஊக்கத்தாலும் உயர்மதியாலும் மேன்மேலும் வளர்ந்து மீளவும் உலகத்தாருக்கு ஊட்ட வேண்டும். இகலோக வளர்ச்சியிலே நாம் தலைமை வகிக்க வேண்டும். அதற்கு நாமே தகுதியுடையோர்....
வையத் தலைமை கொள்!- 5
ஒருவர் அடிப்படையாகப் பெற வேண்டிய குணநலன்கள், உடல் வலிமை, கல்வித் திறம் ஆகியவற்றைப் பெற்றிருந்தாலும், அவனது நடையழகும், நல்லெண்ணமும், சமுதாய உணர்வும்தான் அவனை அவையத்து முந்தி இருக்கச் செய்கின்றன; இலக்கை நோக்கி அவனை உந்தித் தள்ளுகின்றன. தனது ‘நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும், வருகின்ற ஹிந்துஸ்தானமும்’ என்ற கவிதையில், எப்படிப்பட்ட இளைஞர்கள் நாட்டில் இருக்க வேண்டும், எப்படிப்பட்டவர்கள் இருக்கக் கூடாது என்பதை அறுதியிட்டு உரைத்திருக்கிறார் பாரதி.