சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவின் சிகாகோ நகரில் கூடிய சர்வ சமயப் பேரவையில் 1893 செப்டம்பர் 11-இல் ஆற்றிய உரை சரித்திரப்புகழ் பெற்றது. உலக அரங்கில் பாரதத்தின் பெருமையையும் ஹிந்து தர்மத்தின் சிறப்பையும் நிலைநிறுத்திய மகத்தான அந்த உரை நிகழ்ந்து இன்றுடன் 129 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அற்புதமான அந்த நினைவை மீண்டும் மீட்டெடுக்கிறது, சுவாமிஜியின் இக்கட்டுரை...
Day: September 11, 2022
சத்திய சோதனை- 4(11-15)
கடவுளை நான் கண்டதுமில்லை; அறிந்ததுமில்லை. உலகமெல்லாம் அவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையையே என் நம்பிக்கையாக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த என் நம்பிக்கை அழிக்க முடியாதது. ஆகையால் அந்த நம்பிக்கை அனுபவத்திற்குச் சமம் என்று கருதுகிறேன். என்றாலும், நம்பிக்கையை அனுபவம் என்று விவரிப்பது உண்மைக்கு ஊறு செய்வதாகும் என்று சொல்லக் கூடுமாகையால், கடவுளிடம் எனக்குள்ள நம்பிக்கையை எடுத்துக்கூற என்னிடம் சொற்கள் இல்லை என்று சொல்லுவதே மிகவும் சரியானதாக இருக்கக்கூடும்....
விடுதலைப் போரில் அரவிந்தர் – 9
“அலிப்பூர் அரசு ஹோட்டலை (சிறைச்சாலை) பற்றி நான் கொடுத்த மேற்கண்ட விவரங்களை எல்லாம், நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதற்காகச் சொல்லவில்லை. நாகரிகம் மிகுந்த பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் விசாரணைக் கைதிகளுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பான ஏற்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்காகத் தான். நிரபராதிகளுக்கு எவ்வளவு நீண்ட மனஉளைச்சல்! நான் விவரித்த கஷ்டங்கள் அங்கு இருந்தன என்பதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் இறைவனின் கருணை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. நான் கொஞ்ச நாட்கள்தான் கஷ்டப்பட்டேன். பிறகு என் மனம் எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ளவும், அதை உணராதபடிக்கு மேலெழவும் தொடங்கியது. அதனால்தான் என் சிறை வாழ்க்கையை கோபமும் சோகமும் இல்லாமல் அதை நினைத்து சிரித்தபடி என்னால் எழுத முடிகிறது”.....
எனது முற்றத்தில்- 20
அந்த வழியே நடைபயிற்சிக்கு சென்று கொண்டிருந்த ’துக்ளக்’ ஆசிரியர் சோ ராமசாமி தாமாக அந்த வகுப்பில் பிரவேசித்தார். வகுப்பில் இருந்த 200 பேர் முகத்திலும் ஒரு மலர்ச்சி. "மம நாம ஸ்ரீராம், பவதஹ நாம கிம்?" என்று சோவை நோக்கியும் ஸ்ரீராமன் தன் அஸ்திரத்தை ஏவினார். லாகவமாக அதைக் கையாண்ட சோ, "மம நாம ஏகாக்ஷரம்!" (என் பெயர் ஓர் எழுத்து) என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.....
மகாகவி பாரதியின் புனித நினைவில்…
பாரதி அமரர் ஆகி 101 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அந்த மகா புருஷனின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ஒரு முறை அவரே தன் சீடனான குவளை கிருஷ்ணமாச்சாரியாரிடம் சொன்னார்: “கிருஷ்ணா நான் இருநூறு ஆண்டுகள் முன்னதாகப் பிறந்து விட்டேன். என்னைப் பற்றி இவ்வுலகம் புரிந்து கொள்ள பல காலம் ஆகும். ஆங்கிலப் புலவர் ஷேக்ஸ்பியருடைய புகழ்கூட அவர் காலமான பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பரவத் தொடங்கியது”. அந்த மகாகவியின் வாக்கு சத்திய வாக்கு....
துளஸீ பாயி என்ற ரஜ புத்ர கன்னிகையின் சரித்திரம்
மகாகவி பாரதி எழுதிய முதல் குறுங்கதை இது. ‘ஷெல்லிதாஸ்’ என்ற புனைபெயரில் இச் சிறுகதையை பாரதி, மகளிருக்காக தாம் நடத்திய ‘சக்கரவர்த்தினி’ என்னும் மாத இதழில் (1905 நவம்பர்) எழுதினார். இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், உடன்கட்டை ஏறும் வழக்கம் அவசியமற்றது என்பதை உணர்த்துடன் காதலின் பெருமையைச் சுட்டிக்காட்டவும், பாரதி பிரசார நோக்கத்துடன் இந்தக் கதையை எழுதி இருக்கிறார். ஹிந்து சமயத்தில் மிகுந்த நாட்டமும், தேர்ச்சியும் உடைய மகாகவி பாரதியின் பாரம்பரியச் சிந்தனை, இக்கதை எழுதுவதைத் தடுக்கவில்லை. ஏனெனில், மகாகவி பாரதி- காளிதாசன் மட்டுமல்ல, ஷெல்லிதாசனும் கூட.
வையத் தலைமை கொள்!- 1
ஆத்திசூடி ஒரு ஸ்மிருதி நூல். அதனை தனது காலத்தில் வாழும் மக்களுக்காக மாற்றி எழுத வேண்டும் என்று தீர்க்கதரிசனப் புலவர் பாரதி விரும்பியதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ்த்தாய் மீது மிகுந்த பற்றும், தமிழ்மகள் ஔவை மீது மிகுந்த மரியாதையும் கொண்டிருந்த மகாகவி பாரதியின் ’புதிய ஆத்திசூடி’ அவ்வகையில் ஒரு பெரும் ஆதர்ஷ இலக்கியமாக நம்முன் உள்ளது. ஔவையார் 109 வரிகளில் பாடிய ஆத்திசூடியை, 110 வரிகளுடன் புதிய ஆத்திசூடியாகப் பாடுகிறார் பாரதி.....
தராசு கட்டுரைகள்- 1
நாளிதழ்கள், பருவ இதழ்களில் பத்தி (Column Writing) எழுதுவது இப்போது பிரபலமாக இருக்கிறது. எழுத்தாளரின் எண்ணத்தை பாதித்த /சமூகம் பயன்பெறும் எந்த விஷயம் குறித்தும் தொடர்ந்து ஒரே பகுதியில், ஒரே தலைப்பில் (இதனை மகுடம் என்கிறார் இதழாளர் பாரதி) எழுதுவது தான் பத்தி எழுத்தாகும். தமிழில் இதற்கு பிள்ளையார் சுழி இட்டவரும் மகாகவி பாரதியே. 1915இல் சுதேசமித்திரன் நாளிதழில் பாரதி எழுதத் துவங்கிய ‘தராசு’ பத்தி, தொடர்ச்சியாக அல்லாமல், இடையிடையே நின்று, வெளிவந்திருக்கிறது. நமக்குக் கிடைத்த கட்டுரைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...