ஸ்வதேச கீதங்கள் – முன்னுரைகள்

மகாகவி பாரதி தனது தேசபக்திக் கவிதைகளை தொகுத்து ‘ஸ்வதேச கீதங்கள்’ என்ற பெயரில் 1908இல் நூலாக வெளியிட்டார். அதன் இரண்டாம் பாகம் 1909இல் வெளியானது. அந்த நூல்களில் பாரதி எழுதிய முன்னுரைகளே இவை. இவ்விரண்டு பாகங்களும் பாரதியின் சத்குருநாதர் சகோதரி நிவேதிதைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதல் பாகத்தில் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை யாயினும், இரண்டாவது பாகத்தில் ”எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும், சொல்லாமலுணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு இந்நூலை சமர்ப்பிக்கின்றேன்” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் மகாகவி பாரதி. நூலின் முகவுரையில் மகாகவியின் தன்னடக்கம் கண்டு உள்ளம் நெகிழ்கிறோம்...

சில வேடிக்கைக் கதைகள்

சீன தேசத்திலிருந்து ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவுக்குப் போயிருந்தானாம். அப்போது ஒரு பிரபுவின் மனைவி சீனத்து விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருக்கையிலே அவள்,  ‘உங்களுடைய சீன தேசத்தில் கலியாணமாகும் வரை மணப்பெண் தனது புருஷன் முகத்தைப் பார்ப்பது வழக்கமில்லையாமே! மெய்தானா?’ என்று கேட்டாள். அதற்கு ராஜகுமாரன்: 'உங்கள் தேசத்தில் சில பெண்கள் கலியாணமான பிறகு தனது புருஷன் முகத்தைப் பார்ப்பதில்லையென்று கேள்விப்படுகிறேன். அது மெய்தானா?’ என்றான்....