லார்டு கர்ஸனும் ஹிந்துக்களின் ஒழுக்கமும்

வங்கப் பிரிவினையால் இந்திய மக்களின் ஒட்டுமொத்த விரோதத்தை சம்பாதித்தவர் கர்சன் பிரபு. அவர் கொல்கத்தா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ‘இந்தியர்கள் உண்மைக்கு மாறானவர்கள்’ என்ற பொருளில் பேசியதை மகாகவி பாரதி இச்செய்தியில் கண்டிக்கிறார். தனது செய்திக்கு ஆதாரமாக, ஆங்கிலேயர் ஒருவரே கர்சனின் மோசடித்தனத்தைக் கண்டித்ததையும் எடுத்தாண்டிருக்கிறார். ஓர் இதழாளரின் கடமை என்பது நாட்டு மக்களுக்கு உண்மையை உரைப்பதும் தெளிவான சான்றுகளை முன்வைப்பதும் தான் என்பதை இதழாளர் பாரதி இதன்மூலம் செய்து காட்டி இருக்கிறார்...

பாரதி- அறுபத்தாறு- (54-56)

காதலின் புகழை சென்ற கவிதையில் பாடிய மகாகவி பாரதி, இக்கவிதையில், காதல் என்ற பெயரில் ஏமாற்றி பெண்மைநலம் உண்ணும் காமுகர்களின் தீய நெஞ்சை சுட்டிக்காட்டி, பொய்மைக்காதலைச் சாடுகிறார். ”ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,  அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?” என்ற அவரது கேள்வி, “கற்புநிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்ற முந்தைய ஒரு கவிதையின் (பெண்கள் விடுதலைக் கும்மி) நீட்சியே.