சென்னை வாசிகளின் நிதானமும் விபின சந்திரபாலரின் சந்நிதானமும்

சென்னையில் பழைய கட்சியாருக்கு (கோகலே கோஷ்டி- நிதானக் கட்சியார்) ஆதரவு குறைந்து புதிய கட்சியாருக்கு (திலகர் கோஷ்டி- தீவிரவாதிகள்) ஆதரவு பெருகியதை பெருமகிழ்ச்சியுடன் செய்தியாகத் தீட்டுகிறார் இதழாளர் பாரதி. ஸர் பட்டம் இனி மரியாதைக்குரியதல்ல என்றும் பகடி செய்கிறார். “ஸர். வி. சி. தேசிகாச்சாரிக்கும் மிஸ்டர் பி. ஆர். சுந்தரய்யருக்கும் ஜனங்கள் சரியான பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்” என்று எழுதும்போது, பாரதியின் அரசியல் நுண்ணுணர்வும், தீவிரக் கொள்கைப் பிடிமானமும் வெளிப்படுகின்றன...

இது மிஷின் யுகம்

கூலிக்கு வேலை செய்யும் உழைப்பாளிகளின் இயந்திரத்தனமான வாழ்க்கையை சில நிமிட நிகழ்வுகளில் ஒரு சிறுகதையாக இங்கே பதிவு செய்கிறார் புதுமைப்பித்தன். ஓர் உணவகத்தில் நிகழும் சம்பாஷனைகள், காட்சிகளை செதுக்கிவைத்த வரிகளில் படிமம் ஆக்கி இருக்கிறார். பெரிய உபதேசம் இல்லை... படித்து முடிக்கும்போது அந்த ‘சர்வர்’ நமது மனதில் பதிந்து விடுகிறான்....