மகாவித்துவான் சரித்திரம்- 1(16)

புதுச்சேரியில் இயன்றவரையில் தமிழ்ப்பாடங்களைக் கற்றுப் பாடப் படிக்கப் பிரசங்கிக்க ஒருவாறு பயிற்சியுற்றிருந்த செ.சவராயலு நாயகரென்னும் கிறிஸ்தவர் இவர் படிப்பிக்கும் நலத்தைக் கேள்வியுற்று திரிசிரபுரம் வந்து தியாகராச செட்டியார் முதலியோர் முகமாகக் கையுறைகளுடன் இவரைக் கண்டு, வீரமாமுனிவ ரென்னும் புனைப்பெயர் கொண்ட டாக்டர் பெஸ்கியாற் செய்யப் பெற்ற தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம் முதலியனவாய தங்கள் சமய நூல்களைப் பாடஞ்சொல்ல வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அதற்கிசைந்த இவர் அவரைப் பரீட்சித்து அவருடைய தமிழ்க் கல்வியின் நிலையை அறிந்து சில கருவி நூல்களை முதலிற் பாடஞ் சொல்லிவிட்டுப் பின்பு அவர் விரும்பிய வண்ணம் தேம்பாவணி முதலியவற்றிற்குப் பொருள் கூறித் தமிழில் நல்ல பயிற்சியை உண்டாக்கி அனுப்பினர். அதன் பின்பு சவராயலு நாயகருக்குக் கிறிஸ்தவர் குழாங்களில் உண்டான மதிப்பும் பெருமையும் அதிகம்.

விடுதலைப் போரில் அரவிந்தர்-7

"தேசத்தின் முன்பு விதி ஒரு பணியை, ஒரு லட்சியத்தை முன்வைக்கும் போது, அந்த ஒரு பணியின், லட்சியத்தின் முன்பு மற்ற எல்லாவற்றையும், அவை எவ்வளவு தான் உயர்ந்ததாக மேன்மையானதாக இருந்தாலும் அவை அனைத்தும் தியாகம் செய்யப்பட வேண்டும். இப்பொழுது நம் தாய்நாட்டிற்கு அதுபோன்றதொரு தருணம் வந்துள்ளது. நாம் அவளுக்குப் பணி செய்ய வேண்டும். நமது எல்லாச் செயல்களும் தேச சேவையை நோக்கியதாகவே இருக்க வேண்டும். நீங்கள் கற்பதாக இருந்தால் அவளுக்காகவே கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் உடல், மனம், ஆன்மாவை அவளது சேவைக்காகத் தயார்படுத்துங்கள். அவளுக்காக வாழ்வது மட்டுமே உங்கள் ஊதியமாகட்டும். நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் அவளுக்கு சேவை செய்யவே அறிவைத் திரட்டி வாருங்கள். அவள் வளம் பெற பணிபுரியுங்கள். அவள் மகிழ்ச்சி அடைவதற்காக நீங்கள் கஷ்டப்படுங்கள். இந்த ஒரு அறிவுரையிலேயே எல்லாம் அடங்கி உள்ளது"...

பாரஸீக தேசத்தில் பிரதிநிதி ஆட்சி முறைமை

உலகின் பிற நாடுகள் எவ்வாறு அரசியலில் மாற்றம் அடைந்து வருகின்றன என்பதை போகிற போக்கில் செய்தியாகச் சொல்லி, இந்தியர்களின் மனதில் தேச விடுதலை எண்ணத்தை வளர்க்க, இதழாளர் பாரதி பாடுபட்டதை இச்செய்தி காட்டுகிறது. பாரசீக நாட்டில் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்ததை எவ்வளவு குதூகலமாக பாரதி கொண்டாடுகிறார், பாருங்கள்!

சத்திய சோதனை- 4(6-10)

மனிதனும் அவனுடைய செயல்களும் வெவ்வேறானவை. நற்செயலைப் பாராட்ட வேண்டும்; தீய செயலைக் கண்டிக்க வேண்டும். செயலைச் செய்யும் மனிதர், நல்லவராயிருப்பினும் தீயவராயிருந்தாலும் செயலின் தன்மைக்கு ஏற்றவாறு மரியாதைக்கும் பரிதாபத்திற்கும் உரியவராகிறார். ‘பாவத்தை வெறுப்பாயாக. ஆனால், பாவம் செய்பவரை வெறுக்காதே’ என்பது உபதேசம். இது புரிந்துகொள்ள எளிதானதாகவே இருந்தாலும், நடைமுறையில் இதை அனுசரிப்பதுதான் மிக அரிதாக இருக்கிறது. இதனாலேயே பகைமை என்ற நஞ்சு உலகத்தில் பரவுகிறது.....

எனது முற்றத்தில்- 19

ஸ்ரீ குருஜி கோல்வல்கர் நூற்றாண்டு 2006இல் வந்தது. அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள், கட்டுரைகள், பேட்டிகளின் பதிவுகள் 'ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் 12 தொகுதிகளாக  வெளியாகின. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து நிறைய பெரியோர்கள் வந்து இதற்காகவே சென்னையில்  தங்கி பதிப்புப் பணியை நிறைவேற்றிக் கொடுத்தார்கள் என்பதால் என் மனதில் மலைப்பே தோன்றவில்லை. தொகுதிகளின் பல்வேறு கட்டுரைகளின் நடையை செப்பம் செய்து கொடுத்த இருவர் தற்போது இரண்டு மாநிலங்களின் ஆளுநர்கள்  என்பது சுவாரஸ்யமான தகவல். ....