நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?

இது வெறும் சிறுகதை அல்ல… கண்களைக் குளமாக்கும் இல்லறச் சிறப்பின் கதை. அந்த லாட்டரிச் சீட்டை இக்கதையின் நாயகி கிழித்தெறிந்துவிடக் கூடாது என்று நம் மனம் துடிக்கிறது. நாமாக இருந்தால் அதையே செய்வோம். உஞ்சவிருத்தி வாழ்க்கையையே தனக்கு விதிக்கப்பட்ட தர்மமாகக் கொண்ட வேதவித்தான கணவரின் நிழல் அல்லவா இத்தாய்? “நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?” என்று அவள் கேட்கும் கேள்வி நெக்குருக வைக்கிறது. ஜெயகாந்தன் ஏன் இன்றும் சிறுகதைக் கோயிலின் மூலவராக இருக்கிறார் என்பது இக்கதையைப் படித்தால் தான் தெரிகிறது.

சத்திய சோதனை – 2(16-20)

மனப்பூர்வமாகக் கொள்ளும் புனிதமான ஆசை எதுவும் நிறைவேறி விடுகிறது. இந்த விதி உண்மையானது என்பதை என் சொந்த அனுபவத்தில் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே என் உள்ளத்தின் ஆசை. அந்த ஆசை, என்னை எப்பொழுதும் ஏழைகளின் நடுவில் கொண்டு போய்ச் சேர்த்தது. அதனால் அவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிக் கொள்ளவும் முடிந்தது....

இந்தியாவில் விதவைகளின் நிலைமையும் காந்தி சொல்லும் உபாயமும்

வீண் சந்தேகம், பொறாமை, குருட்டுக்காமம், பெண்களை ஆத்மாவில்லாத, ஹ்ருதயமில்லாத, ஸ்வாதீனமில்லாத அடிமைகளாக நடத்தவேண்டுமென்ற கொள்கை இவற்றைக் கொண்டே நம்மவர்களில் சில புருஷர்கள் 'ஸ்திரீகளுக்கு புனர் விவாகம் கூடாது' என்று சட்டம் போட்டார்கள். அதனாலேதான், மனைவியில்லாத கிழவர்கள் சிறு பெண்களை மணம் புரிய நேரிடுகிறது. அதனாலேதான், ஹிந்து தேசத்து விதவைகளின் வாழ்க்கை நரக வாழ்க்கையினும் கொடியதாய் எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகிறது.....

சிவகளிப் பேரலை – 49

தோட்டத்திலே பாத்தி கட்டி, அதற்குள் நீருற்றி, ஒரு கம்பை (கழியை) நட்டு கொடியை வளர்ப்பார்கள். அந்தக் கழிமீது கொடி படர்ந்து,  மேலே பந்தல் மீதேறி வளர்ந்து, பூப்பூத்து, காய் காய்த்து, கனி தரும். அதுபோல சிவ பக்தியாகிய கொடி, முக்தியாகிய பழத்தை, பக்தனுக்குத் தருகின்றது என்பதை விளக்குகிறார் ஸ்ரீஆதிசங்கரர்....

இன்றைய இந்தியாவின் முகங்கள் – 10

...பெருநாரையைக் காக்க பெண்கள் அணி திரண்டது. அதன் பெயர் ‘ஹார்ஜிலா ஆர்மி’. 2008-இல் அது தொடங்கப்பட்டது பத்தாயிரம் பெண்கள் இன்று அந்த அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமன்றி, பெருநாரைப் பாதுகாவலராகச் செயல்படுகின்றார்கள். கோயில் திருவிழாக்களில் இந்தப் பறவையைப் புகழ்ந்து பாடல்கள் பாடுகிறார்கள். இனப்பெருக்கக் காலத்தில் அதற்கென வளைகாப்புப் பாடல்கள் பாடப்படுகின்றன. படையல் சமர்ப்பிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணமான பூர்ணிமாதேவி பர்மனை அவர்கள் ‘பெருநாரை சகோதரி’ என்று அன்புடன் அழைக்கிறார்கள். உலகில் அழிந்து வரும் அரிய வகை பறவை இனமான பெருநாரை இன்று செழித்து, பெருகி வருகிறது....

பாரதியின் ‘கனவு’

மகாகவி பாரதி புதுச்சேரியில் வாழ்ந்தபோது, தனது சுயசரிதையை எழுத முற்பட்டார். அப்போது அவர் எழுதியதே ‘கனவு’ என்னும் இக்கவிதை. இது அவரது சுயசரிதை தொகுப்பில் முதற்பகுதி. பாரதி –அறுபத்தாறு என்னும் இரண்டாம் பகுதியும் உண்டு. ‘கனவு’ கவிதை, முன்னுரை, முடிவுரை தவிர்த்து ஐந்து பகுதிகளைக் கொண்டது. தோல்வியில் முடிந்த பிள்ளைக் காதல், பயனில்லாத ஆங்கிலக் கல்வி, விருப்பத்துக்கு மாறான இளமைத் திருமணம், தந்தையின் வறுமை நிலை, பொருளின் பெருமை ஆகிய 5 பகுதிகள் கொண்டது இந்த நெடுங்கவிதை. இதில் 49 செய்யுள்கள் உள்ளன.

அமைதியான நதியினிலே ஓடும்…

நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது... நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது....

சிவகளிப் பேரலை – 48

சிவத்தியானம் என்பது வற்றாத நீர்நிலை. அங்கே சிவனருளால் மகிழ்ச்சியாகிற நீர் எப்போதுமே நிரம்பியிருக்கிறது. முனிவர்களும் தவசிரேஷ்டர்களுமான  தாமரைகள் சிவத்தியான நீர்நிலையையே தமது இருப்பிடங்களாகக் கொண்டுள்ளன(ர்). தூய மனம் கொண்டவர்கள் இதனையே நாடுகின்றனர்.  தேடி அடையப்படுகின்ற புண்ணியத்தை சிவத் தியான நீர்நிலை தருகின்றது. அனைத்து விதமான பாவங்களின் கறைகளையும் சுவடு தெரியாமல் இந்த நீர்நிலை போக்கிவிடுகிறது....

பாரதியின் தனிப்பாடல் -1

காணும் பொருளேல்லாம் கவிஞனுக்குக் கவிப் பொருளே. எல்லாப் பொருளிலும் அவன் காண்பது இயற்கையும் அதில் ஒன்றிய தனது அறிவின் விளைவும். இக்கவிதையில் மகாகவி பாரதி கண்ட பறவையினங்கள் பேசிக்கொண்டால் என்ன பேசி இருக்கும் என்பதை கவியாக்கி இருக்கிறார்....

இலக்கிய தீபம் – 13

புகார் நகரின் வைப்பிடம் நம்மால் அறியமுடியவில்லை யென்றாலும், அங்கே நிகழ்ந்த வாழ்க்கை நெறி முதலியவை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்குச் சிறந்த ஒரு சான்று அகப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் நாம் அதிருஷ்டசாலிகள் என்றே கூறவேண்டும். பட்டினப்பாலை என்ற சங்கப்பாட்டு முன்னரே குறிப்பிடப்பட்டது. இது பத்துப் பாட்டினுள் ஒன்பதாவதாகத் தொகுக்கப் பெற்றுள்ளது. 301 அடிகளையுடையது. பொருள் ஈட்டுதற் பொருட்டு வேற்று நாட்டிற்குச் செல்லத் தொடங்கிய தலைவன் தனது நெஞ்சை நோக்கி, தலைவியைப் பிரிந்து, 'முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரேன்' எனச் செலவழுங்கிக் கூறுவதாக, சோழன் கரிகாற் பெருவளத்தானை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது. பிரிவைப் பற்றிக் குறிக்கும் 5 அடிகள் ஒழிய ஏனை 296 அடிகளும் காவிரியின் பெருமையையும், காவிரிப்பூம் பட்டினத்தின் வாழ்க்கைச் சிறப்பையும், காவிரிப்பூம் பட்டினத்தின் வாழ்க்கைச் சிறப்பையும் கரிகாலனது வெற்றித் திறத்தையும் விரித்துக் கூறுகின்றன....

சிவகளிப் பேரலை – 47

ஓர் அரசன் ஓரிடத்தில் தங்குவதற்கு முன்பாக, அவனது பரிவாரங்களும், அரசனது பணிவிடைகளுக்கு வேண்டிய பொருட்களும் முன்கூட்டியே வந்து சேருமோ, அதுபோல இறைவனாகிய சிவபெருமான் பக்தனின் மனத்திற்குள் குடிபுகுவதற்கு முன்பாகவே, அவனது பாவங்கள் அழிந்து, நற்குணங்கள் அரும்பிவிடும் என்பதை மிக அழகாக வர்ணிக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....

தமிழ் நாட்டோருக்கு இறுதி விண்ணப்பம்

தேசத்தை உத்தாரணஞ் செய்வதற்கு ஒவ்வொருவரும் இயன்றதெல்லாஞ் செய்க. நாம் செய்யக்கூடியது சிறிதுதானேயென்று கருதி அதனைச் செய்யாதிருந்து விடலாகாது. நியாயமான சட்டங்களை மீற வேண்டாம். அநியாயமான சட்டங்களை யெடுத்து விடுவதற்கு இயன்ற முயற்சிகளெல்லாம் செய்ய வேண்டும். சுதேசிய விரதத்தை உயிருள்ள வரை கைவிடாமல் ஆதரித்து வரவேண்டும். மானத்தைப் பெரிதாக நினைக்க வேண்டும். ஸ்வதந்திரத்தை எப்போதுந் தியானஞ் செய்து வர வேண்டும். வந்தே மாதரம்....

யந்திரம்

மானுட உணர்வுகளின் ஆதி ஆழத்தை அறிபவர் யாரும் இருக்க முடியாது. புனைவிலக்கியம் அந்த வெற்றிடத்தை நோக்கிய பாய்ச்சல். ஜெயகாந்தன் அவர்கள் கூறுவது போல சஹ்ருதயர்களால் மட்டுமே பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். அதற்கு அவரே இச் சிறுக்கதையில் சொல்வது போல, கூடு விட்டு கூடு பாயும் திறன் வேண்டும். முத்தாயியின் கதை உங்களுக்குள்ளும் சிறு சலனத்தை ஏற்படுத்தினால், உங்களாலும் கூடு விட்டு கூடு பாய முடிகிறது என்று பொருள்.

சிவகளிப் பேரலை – 46

முந்தைய ஸ்லோகத்தில் மனத்தை பறவையாக வர்ணித்த ஸ்ரீ ஆதிசங்கரர், இங்கே  அதனை ஓர் அன்னப் பறவையாக உருவகப்படுத்துகிறார். அன்னப்பறவை அழகு பொருந்திய மாளிகைக்குள் வளர்க்கப்படும் பேறு பெற்றது. சிவபெருமானின் திருவடிகளே, மனமாகிய அன்னம் சுகித்திருக்கும் மாளிகை என்பதை அழகு மிளிர எடுத்துரைக்கிரார் ஆதிசங்கரர்....

பாரதியின் ஞானப்பாடல் – 25

கற்பனை நகரமென்பது சித்தத்தில் குழந்தை நிலை பெறுவதை இங்கு குறிப்பிடுகிறது. ‘யோவான்’ என்பது குமார தேவனுடைய பெயர். ‘அக்கடவுள் மனிதனுக்குள்ளே நிலைபெற்று, மனிதன் மோக்‌ஷ நிலையை அடைவதற்கு முன்னர் குழந்தைப் பருவத்தை அடைய வேண்டும்’ என்று யேசு கிறிஸ்து நாதர் சொல்லியிருக்கும் பொருளை இப்பாடல் குறிப்பிடுகிறது. கவலைகளை முற்றுந் துறந்துவிட்டு உலகத்தை வெறுமே லீலையாகக் கருதி னாலன்றி மோக்ஷம் எய்தப் படாது.....