ஒரு சிலர்க்குத் தமிழ்க் கவியென்பது இலக்கண விதிகளைக் கோத்து வைப்பதற்குரிய மாட்டு-கருவியாகவே தோன்றிக் கொண்டிருக்கும். வேறு சிலர்க்கு அது வாதப் பிரதிவாதங்கள் நிகழ்த்துவதற்குரிய தர்க்கப் பொருளாகவே தோன்றிக் கொண்டிருக்கும். இன்னும் ஒரு சாரார்க்கு அது காலவாராய்ச்சிக்கு உதவும் சரிதப் பொருளாகவே தோன்றும். கடைசியாக ஒரு சிலர்க்கு நலிந்து சிதைத்துத் தாம் கருதிய நுணுக்கப் பொருள்களை யிட்டு வைப்பதற்குரிய சொற்பையாகவே தோன்றி விடுகிறது. சிறந்த கவித்துவ நலம் படைத்தவன் தனது இதயத்தினின்றும் உணர்ச்சி ததும்பத் தோன்றிய கவிதையின் இன்பத்தைப் பிறர் அனுபவிக்க வேண்டுமென்றே கருதுவான். உண்மைக் கவிதையின் பயன் இன்பவுணர்ச்சியே யன்றிப் பிறிதல்ல. ....
சிவகளிப் பேரலை – 54
முந்தைய ஸ்லோகத்தில் மயிலுக்கும் மகேஸ்வரனுக்கும் சிலேடை அமைத்துப் பாடிய ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் இடி, மின்னலுடன் மழை பொழிகின்ற மேகத்தைப் பார்த்ததும் பெண் மயிலுக்கு முன்பாக ஆண் மயில் தோகை விரித்து ஆனந்தமாக நடனமிடுவதுபோல், சந்தியாகாலத்திலே சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடுவதாக ஒப்புமைப்படுத்திக் கூறுகிறார். ....
பாரதியின் தனிப்பாடல்- 6
எளியவன் ஒருவனது சின்னஞ்சிறு தென்னந்தோப்பை வீழத்தாமல் கடந்த புயலை வாழ்த்தி, சக்தியின் புகழைப் பாடுகிறார் பாரதி, இக்கவிதையில்....
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்…
ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக எஸ்.பி. சௌத்ரியாக, ‘தங்கப் பதக்கம்’ திரைப்படத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார் சிவாஜி கணேசன். படத்தை இயக்கிய மாதவன், திரைக்கதை வசனம் எழுதிய மகேந்திரன், இசை அமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் தொழில்பக்தியையும் எடுத்துக்காட்டிய திரைப்படம் அது. காவல் பணியில் நேர்மையாக இருந்த சௌத்ரியின் கண்டிப்பு பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடும் மகன் பிற்பாடு இளம் குற்றவாளியாகி விடுகிறான். அவன் வீடு திரும்புகையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் திரைக்கதை. தந்தையின் கண்டிப்புக்கும் மகனின் வீம்புக்கும் இடையிலான தாயின் பாசப் போராட்டத்தை கே.ஆர்.விஜயா அற்புதமாகக் காட்டி இருப்பார். “ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்” என்பது போன்ற நம்ப இயலாத, முட்டாள்தனமான நாயக வசனம் பேசாத காவல் துறை அதிகாரியாக சிவாஜி இப்படத்தில் மிரட்டி இருப்பார். அதனால் தான் இப்படம் இன்றும் முன்னுதாரணமாகப் பேசப்படுகிறது. உறவுகளின் சிக்கலில் சின்னாபின்னமாகிறது சௌத்ரியின் குடும்பம். இறுதியில் மனம் திருந்தாமல் தேசத்துரோக்க் குற்றத்தில் ஈடுபடும் தனது மகனை தானே சுட்டுக் கொல்கிறார் எஸ்.பி. சௌத்ரி. அதற்காக அரசின் தங்கப் பதக்கம் அவருக்கு வழங்கப்படுகிறது. படம் பார்க்கும் நமக்கு கண்களில் நீர் திரையிடுகிறது. இத் திரைப்படத்தில், தனது மகனின் பிறந்த நாளில் அன்னையும் தந்தையும் பாடும் இனிய பாடல் இது. திரைக்கதையின் ஓட்டத்தை உணர்ந்து, விதியின் பாதையை பூடகமாகக் கூறிவரும் பாடலும் கூட. அன்னையும் தந்தையும் எத்துணை பாசத்துடன் தனது மகன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கனவாகக் காண்கிறார்கள் என்பது இப்பாடலில் காட்டப்படும்போதே, பின்னாளில் நிகழ உள்ள அபத்தமான திருப்பங்கள் நமக்குப் புலப்படத் துவங்கும். கவியரசு கண்ணதாசனின் இனிய திரைப்பாடல்களுள் ஒன்று இது.
சிவகளிப் பேரலை – 53
மல்லிகையையும் அதனை விரும்புகின்ற வண்டையும் அடுத்தடுத்து சிவபெருமானுக்கு சிலேடையாக அமைத்துப் பாடிய ஸ்ரீஆதிசங்கரர், அடுத்தபடியாக மேகத்தையும் அதனை விரும்புகின்ற மயிலையும் சிவபெருமானோடு இணைத்து இரட்டுற மொழிந்துள்ளார். ....
பாரதியின் தனிப்பாடல்- 5
வானம் சினந்தது; வையம் நடுங்குது; வாழி பராசக்தி காத்திடவே! தீனக் குழந்தைகள் துன்பப்படாதிங்கு தேவி, அருள்செய்ய வேண்டுகிறோம்....
கடவுளின் பிரதிநிதி
கோயில்களுக்குள் பட்டியலின (தாழ்த்தப்பட்ட) மக்களும் செல்வது இன்று இயல்பாகி இருக்கலாம். ஆனால், அதற்கு வித்திட்டது மகாத்மா காந்தி விடுதலை இயக்கத்தில் ஹரிஜன முன்னேற்றத்தை ஓர் ஆதார விஷயமாகக் கொண்டதுதான். ஆயினும், இதில் உடனே நமது சமூகம் திருந்திவிடவில்லை. அதற்கு பெருத்த போராட்டங்கள் நடத்தப்பட வேண்டி இருந்தது. இறுதியில் சட்டப்படி கோயிலுக்குள் ஹரிஜனங்கள் செல்லும் உரிமை பெற்றனர் என்றால் அதற்கு வழிவகுத்தது அன்றைய காங்கிரஸ் பேரியக்கம் தான் எனில் மிகையில்லை. இதற்கான போராட்டம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை என்பதற்கான நிரூபணம் புதுமைப்பித்தன் எழுதி, ‘மணிக்கொடி’யில் (1934) வெளியான இச் சிறுகதை…இலக்கியம் வரலாற்றின் பதிவும் கூட என்பது உண்மைதான்.
சிவகளிப் பேரலை – 52
இந்த ஸ்லோகத்தில் மேகத்தோடு சிவபெருமானை இணைத்து சிலேடை புனைந்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர். ...
பாரதியின் தனிப்பாடல் – 4
இயற்கையின் பெருநடனத்தை அதே ஆவேச சொற்பெருக்கில் கொண்டுவந்து இக்கவிதையில் கட்டியமைத்திருக்கிறார் மகாகவி பாரதி...
எனது முற்றத்தில் – 10
குன்றக்குடி அடிகளார் என்று எழுபதுகளில் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய ஆதீனகர்த்தர் அவர்களை சென்னையில் அவரது மயிலை திருமடத்தில் நான் பேட்டி கண்டேன். அதனால் அவருடைய பின்வரும் வாக்கியத்தை1970களில் தியாகபூமி இதழில் பதிவு செய்ய முடிந்தது: "நான் மதத்தால் ஹிந்து, மொழியால் தமிழன், தேசத்தால் இந்தியன்"....
சிவகளிப் பேரலை – 51
பிரணவ நாதத்துடன் ஓங்கி நிற்பவர் சிவபெருமான். அவரது மேனி மிகுந்த சிவப்பு அல்லது மிகுந்த வெண்மை நிறம் கொண்டது. மதனன் எனப்படும் காமதேவனை பார்வையாலேயே நெருப்பு மூட்டி அழித்தவர் சர்வேஸ்வரன். அவர், பூப்போன்ற மனத்தையுடைய தேவர்களை மிகவும் விரும்புபவர். ஸ்ரீசைலம் போன்ற மலைப் பிரதேசங்களிலே கோவில் கொண்டிருப்பவர்.....
பாரதியின் தனிப்பாடல் – 3
மண்ணுல கத்துநல் லோசைகள் காற்றெனும் வானவன் கொண்டுவந்தான்; பண்ணி லிசைத்தவ வொலிக ளனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம்.....
இலக்கிய தீபம்- 14
சங்க இலக்கியங்களில் இத்தொண்டியைப் பற்றி வருவனவற்றை நோக்குவோம். மேல் கடற்கரையில் வெகுதொலைவில் இந்நகரம் இருந்தது என்பதை ஒரு புலவர் தற்காலத்தாருக்கு ஒவ்வாத ஒரு முறையிலே கூறுகிறார். ஒரு காதலன் தன் காதலி அருமையானவள் என்பதையும், அடைதற்கு முடியாதபடி அத்தனை தூரத்தில் (உயர்வில்) அவள் உள்ளவள் என்பதையும், ஓர் உவமானத்தால் குறித்தார். ‘கொரமண்டல் கோஸ்ட்’ (சோழ மண்டலக் கரை) என்னும் கீழ் கடற்கரையிலேயுள்ள சிறகு அற்ற நாரை 'மலபார் கோஸ்ட்' என்னும் மேல் கடற்கரையிலேயுள்ள தொண்டிப் பட்டினத்தின் கடற்கழியிலேயுள்ள அயிரை மீனை உண்ணுவதற்கு விரும்புவது போலுள்ளது தனது நெஞ்சு காதலியைக் காதலித்தது என்பது உவமானம்....
சிவகளிப் பேரலை – 50
சிவானந்த லஹரியை ஆதிசங்கரர் அருளிச்செய்த ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் சிவபெருமான், மல்லிகார்ஜுனராகவும், அம்பாள் பிரமராம்பிகையாகவும் அருள் பாலிக்கிறார்கள். இந்த 50-வது ஸ்லோகம், மல்லிகைக்கும், மல்லிகார்ஜுனருக்குமான சிலேடை. ...
பாரதியின் தனிப்பாடல் – 2
காதலி னாலுயிர் தோன்றும்;- இங்கு காதலி னாலுயிர் வீரத்தி லேறும்; காலி னாலறி வெய்தும்- இங்கு காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்...