எளிமைக்கும் அர்ப்பணிப்புக்கும் இலக்கணமாக வாழ்ந்த விவேகானந்த கேந்திரத் தலைவர்

கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதியன்று விவேகானந்த கேந்திரத்தின் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் தனது 89-ஆவது வயதில்  இறைவனடி சேர்ந்தார்.  எளிமைக்கும், அர்ப்பணிப்புக்கும்  இலக்கணமாகத் திகழ்ந்த அவர் ஒரு உயர்ந்த மனிதர். எப்போதுமே தன்னைப் பற்றி வெளியில் சொல்லாதவர். வாழ்நாளின் கடைசி வரைக்கும் நமது தேசம் மற்றும் பண்பாடு ஆகியவற்றுக்காக மட்டுமே சிந்தித்துச் செயலாற்றியவர்.