-கவியரசு கண்ணதாசன்

அமைதியான நதியினிலே ஓடும் – ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.
அமைதியான நதியினிலே ஓடும் – ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்!
அமைதியான நதியினிலே ஓடும், – ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.
தென்னம் இளங்கீற்றினிலே…ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது…
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது…
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது.
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது!
அமைதியான நதியினிலே ஓடும், – ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது…
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது…
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை.
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை!
அமைதியான நதியினிலே ஓடும், – ஓடம்
ஓ ஓ ஓ……
அமைதியான நதியினிலே ஓடும், – ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது…
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது…
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது.
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது!
அமைதியான நதியினிலே ஓடும், – ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும்…
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும்…
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்.
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்!
அமைதியான நதியினிலே ஓடும் – ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்!
அமைதியான நதியினிலே ஓடும், – ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.
திரைப்படம்: ஆண்டவன் கட்டளை (1964) இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி பாடியோர்: சௌந்தர்ராஜன், சுசிலா.
$$$