பாரதியின் தனிப்பாடல்- 12

“கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி” என்பது மகாகவி பாரதியின் வாக்கு. எனவேதான் கவிதையையே தனது மனைவிக்கு நிகராக அவரால் வைக்க முடிகிறது. இக்கவிதை,  கவிதையின் மகாசக்தியை வியக்கிறது.

சிவகளிப் பேரலை – 60

இறைவனின் திருப்பாதங்களைச் சரண் புகுவதால் அனைத்துவிதத் துன்பங்களில் இருந்தும் நாம் விடுதலை பெறுகிறோம். இறைவன் திருவடித் தாமரை மீதான விருப்பம், அதனை எப்படியும் அடைந்தே தீரூவது என்ற விடாப்படியான முயற்சியுடன், உறுதியுடன் கூடியதாக இருக்க வேண்டும். ஏனோதானோ என்று இருந்தால் அது கைவசமாகாது. நினைப்பே நம்மை உந்தித் தள்ளுகிறது, முன்னேயும் பின்னேயும். ....

ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்

கந்தன் கலியுகவரதன்  எனப்படுகின்றான். இதன் உட்பொருளை நாம் அறிந்துகொள்வது அவசியம். நான்கு யுகங்களுள் கடையாயது கலியுகம். அதில் அறம் மிகக் குறைந்துள்ளது. ஆதலால் தெய்வத்தை அறிந்துகொள்ளவும், தெய்வத்தைத் தொழவும் முயலுபவர் கலியுகத்தில் மிகக் குறைந்திருக்கின்றனர். இனி, தெய்வம் எனும் சொல் எப்பொருளைக் குறிக்கிறது என அறிந்துகொள்வது அவசியம். இயற்கை வேறு, தெய்வம் வேறு அல்ல. ஒரே பொருள் இரண்டு விதங்களில் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஐம்பொறிகள் வாயிலாக நுகர்கின்றவிடத்து அது இயற்கை. ஞானக்கண் கொண்டு காணுமிடத்து அதே பொருள் கடவுள் எனப் பெயர்பெறுகிறது. கடவுள் காட்சி மெய்க் காட்சி. இயற்கைக் காட்சி பொய்யானது, நிலையற்றது. ஆதலால்தான் இயற்கையாகக் காணும் காட்சியைக் கடந்து மெய்ப்பொருளை உள்ளவாறு காணுதல் வேண்டும். அதை உள்ளவாறு அறிகின்றவிடத்து வாழ்க்கைச் சிக்கல்களெல்லாம் தாமாக அடிபட்டுப் போய்விடுகின்றன. விவேகானந்தரிடத்து மிளிர்கின்ற மகிமைகளுள் சில கந்தனிடமிருந்து பெற்றுள்ள மகிமைகளாகத் தென்படுகின்றன. ஆதலால் முருகக் கடவுளது மகிமைகளையும் மானுடருள் மேலோனாகிய விவேகானந்தரது விபூதிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்ப்போம்....