காக்காய்ப் பார்லிமெண்ட்

நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார்.  “உம்முடைய பெயரென்ன?” என்று கேட்டேன்.  “நாராயண பரம ஹம்ஸர்” என்று சொன்னார்.  “நீர் எங்கே வந்தீர்?” என்று கேட்டேன். “உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார்” என்று சொன்னார்.  “சரி, கற்றுக் கொடும்” என்றேன். அப்படியே கற்றுக் கொடுத்தார். காக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம்.

சிவகளிப் பேரலை- 63

   உண்மையான பக்தி இருக்கும் இடத்தில், பக்தனுக்குரிய குறைகளை சிவபெருமான் பார்ப்பதில்லை. இருக்கின்ற குறைகளும் அவனருளால் நீங்கி, நிறைவே தோன்றும். பக்தனுக்குரிய குறைகளைப்  பார்க்காமல், பக்தியைப் பாராட்டி, அவனுக்கு உயர்ந்த பதவியைத் தந்தருள்பவர் சிவபெருமான். இதற்குப் பல புராணங்களும், சரித்திரங்களுமே சான்று. அவற்றில் கண்ணப்ப நாயனாரின் சரிதத்தைக் கோடிட்டுக் காட்டி, பக்தனை மதிக்கும் பரமசிவனின் பெருமையை இந்த ஸ்லோகத்தில் எடுத்துரைக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.....

பாரதியின் தனிப்பாடல்- 15

மகாகை பாரதியின் தனிப்பாடல்களில் 15வது கவிதையான ‘சந்திரமதி’ காதலின் சிறந்த வெளிப்பாடு....

சத்திய சோதனை- 2(26-29)

ஸர் பிரோஸ் ஷா எனக்கு இமயமலைபோல் தோன்றினார். லோகமான்யரோ எனக்கு சமுத்திரம்போல் காணப்பட்டார். ஆனால், கோகலேயோ கங்கையைப் போல இருந்தார். அந்த புண்ணிய நதியில் யாரும் நீராடி இன்புற முடியும். ஹிமாலயம் ஏறிக் கடப்பதற்கு அரியது. கடலில், யாரும் துணிந்து எளிதில் இறங்கிவிட முடியாது; ஆனால், கங்கையோ அரவணைத்துக் கொள்ள எல்லோரையும் அன்புடன் அழைக்கிறது. கையில் துடுப்புடன் படகில் ஏரி, அதில் மிதப்பதே இன்பம். பள்ளிக்கூடத்தில் சேர வரும் ஒரு மாணவனை ஓர் உபாத்தியாயர் எவ்விதம் பரீட்சிப்பாரோ அதே போல கோகலே என்னை நுட்பமாகப் பரீட்சை செய்தார்.....

ஸ்ரீ பாரத நாட்டின் புதிய புண்ய ஸ்தலங்கள்

நமது பாரத நாட்டில் ஸ்வதந்திரக் கிளர்ச்சியாரம்பித்துக் கொஞ்சம் நாள்தான் ஆயிற்று. எனினும் அநேக புண்ணிய ஸ்தலங்கள் உண்டாய் விட்டன. இந்தப் புண்ணிய ஸ்தலங்களின் விசேஷம் என்னவென்றால் இவைகள் பாரத நாட்டிலுள்ள எல்லா மதத்தினருக்கும் பொதுவானவைகள். பாரத நாட்டில் மாத்திரமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த தேசபக்தர்களின் ஆச்ரமங்கள் தோன்றியிருக்கின்றன.....

காற்றிடைச் சாளரம் – 12

-கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம் கடவுளும் நானும் துயிலெழுந்தார்;உயிரெடுத்தேன். நீராடினார் ;மழையாடினேன். பசியடைந்தார்;பசியாறினேன். காமமெய்தினார்;கலவிபுரிந்தேன். சினந்தார்;சமரிட்டேன். விடைகளாயிருந்தார்;வினாக்களாயிருந்தேன். மௌனமானார்;தியானமானேன். அன்பிலலர்ந்தார்;இன்புறவடைந்தேன். நன்றி பெருக்கினார்;நாயுடன் இருந்தேன். லயித்திருந்தார்;கவிதைகளாக்கினேன். திருவுலாவினார்;தடம் தேடினேன். என்னையறிந்தார்;தன்னைக் கரைத்தேன். இனி என்ன? இடையிடையே நான் பயந்தும் துவண்டும் வாழ்ந்தபோதெல்லாம் அவரின் நிலையறியாமலேயே உடல் விடுவேன் – துயிலடைவார். $$$