இது வெறும் சிறுகதை அல்ல… கண்களைக் குளமாக்கும் இல்லறச் சிறப்பின் கதை. அந்த லாட்டரிச் சீட்டை இக்கதையின் நாயகி கிழித்தெறிந்துவிடக் கூடாது என்று நம் மனம் துடிக்கிறது. நாமாக இருந்தால் அதையே செய்வோம். உஞ்சவிருத்தி வாழ்க்கையையே தனக்கு விதிக்கப்பட்ட தர்மமாகக் கொண்ட வேதவித்தான கணவரின் நிழல் அல்லவா இத்தாய்? “நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?” என்று அவள் கேட்கும் கேள்வி நெக்குருக வைக்கிறது. ஜெயகாந்தன் ஏன் இன்றும் சிறுகதைக் கோயிலின் மூலவராக இருக்கிறார் என்பது இக்கதையைப் படித்தால் தான் தெரிகிறது.
Day: July 3, 2022
சத்திய சோதனை – 2(16-20)
மனப்பூர்வமாகக் கொள்ளும் புனிதமான ஆசை எதுவும் நிறைவேறி விடுகிறது. இந்த விதி உண்மையானது என்பதை என் சொந்த அனுபவத்தில் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே என் உள்ளத்தின் ஆசை. அந்த ஆசை, என்னை எப்பொழுதும் ஏழைகளின் நடுவில் கொண்டு போய்ச் சேர்த்தது. அதனால் அவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிக் கொள்ளவும் முடிந்தது....
இந்தியாவில் விதவைகளின் நிலைமையும் காந்தி சொல்லும் உபாயமும்
வீண் சந்தேகம், பொறாமை, குருட்டுக்காமம், பெண்களை ஆத்மாவில்லாத, ஹ்ருதயமில்லாத, ஸ்வாதீனமில்லாத அடிமைகளாக நடத்தவேண்டுமென்ற கொள்கை இவற்றைக் கொண்டே நம்மவர்களில் சில புருஷர்கள் 'ஸ்திரீகளுக்கு புனர் விவாகம் கூடாது' என்று சட்டம் போட்டார்கள். அதனாலேதான், மனைவியில்லாத கிழவர்கள் சிறு பெண்களை மணம் புரிய நேரிடுகிறது. அதனாலேதான், ஹிந்து தேசத்து விதவைகளின் வாழ்க்கை நரக வாழ்க்கையினும் கொடியதாய் எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகிறது.....
சிவகளிப் பேரலை – 49
தோட்டத்திலே பாத்தி கட்டி, அதற்குள் நீருற்றி, ஒரு கம்பை (கழியை) நட்டு கொடியை வளர்ப்பார்கள். அந்தக் கழிமீது கொடி படர்ந்து, மேலே பந்தல் மீதேறி வளர்ந்து, பூப்பூத்து, காய் காய்த்து, கனி தரும். அதுபோல சிவ பக்தியாகிய கொடி, முக்தியாகிய பழத்தை, பக்தனுக்குத் தருகின்றது என்பதை விளக்குகிறார் ஸ்ரீஆதிசங்கரர்....
இன்றைய இந்தியாவின் முகங்கள் – 10
...பெருநாரையைக் காக்க பெண்கள் அணி திரண்டது. அதன் பெயர் ‘ஹார்ஜிலா ஆர்மி’. 2008-இல் அது தொடங்கப்பட்டது பத்தாயிரம் பெண்கள் இன்று அந்த அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமன்றி, பெருநாரைப் பாதுகாவலராகச் செயல்படுகின்றார்கள். கோயில் திருவிழாக்களில் இந்தப் பறவையைப் புகழ்ந்து பாடல்கள் பாடுகிறார்கள். இனப்பெருக்கக் காலத்தில் அதற்கென வளைகாப்புப் பாடல்கள் பாடப்படுகின்றன. படையல் சமர்ப்பிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணமான பூர்ணிமாதேவி பர்மனை அவர்கள் ‘பெருநாரை சகோதரி’ என்று அன்புடன் அழைக்கிறார்கள். உலகில் அழிந்து வரும் அரிய வகை பறவை இனமான பெருநாரை இன்று செழித்து, பெருகி வருகிறது....
பாரதியின் ‘கனவு’
மகாகவி பாரதி புதுச்சேரியில் வாழ்ந்தபோது, தனது சுயசரிதையை எழுத முற்பட்டார். அப்போது அவர் எழுதியதே ‘கனவு’ என்னும் இக்கவிதை. இது அவரது சுயசரிதை தொகுப்பில் முதற்பகுதி. பாரதி –அறுபத்தாறு என்னும் இரண்டாம் பகுதியும் உண்டு. ‘கனவு’ கவிதை, முன்னுரை, முடிவுரை தவிர்த்து ஐந்து பகுதிகளைக் கொண்டது. தோல்வியில் முடிந்த பிள்ளைக் காதல், பயனில்லாத ஆங்கிலக் கல்வி, விருப்பத்துக்கு மாறான இளமைத் திருமணம், தந்தையின் வறுமை நிலை, பொருளின் பெருமை ஆகிய 5 பகுதிகள் கொண்டது இந்த நெடுங்கவிதை. இதில் 49 செய்யுள்கள் உள்ளன.