பாரதி – அறுபத்தாறு (1-6)

-மகாகவி பாரதி முன்னுரை:மகாகவி பாரதியின் சுயசரிதை பிரிவில்  ‘பாரதி-அறுபத்தாறு’ கவிதை  இடம்பெற்றிருப்பது இதிலுள்ள சுய விளக்கங்கள் காரணமாகவே. மரணத்தை வெல்லும் வழியில் “பார் மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்!” என்று முழங்குகிறார் பாரதி (பாடல்- 6). முன்னதாக, சோக அடவியில் புகவொட்டாமல் துய்ய செழுந்தேன் போல கவிதை எழுதும் அறிவை தனக்கு பராசக்தி தந்ததாக்க் (பாடல்- 3) கூறுவார் பாரதி. எனவேதான் இக்கவிதைகள் தன்வரலாற்றுப் பிரிவில் சேர்க்கப்படுகின்றன.மானுடரை அழிக்கும் அசுரர்கள், பொறுமையின் பெருமை, ”எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் … Continue reading பாரதி – அறுபத்தாறு (1-6)

சத்திய சோதனை- 3(6-10)

சலவைத் தொழிலாளிக்கு அடிமையாக இருப்பதிலிருந்து என்னை நான் விடுவித்துக் கொண்டதைப் போலவே க்ஷவரத் தொழிலாளியை எதிர்பார்ப்பதையும் போக்கிக்கொண்டு விட்டேன். இங்கிலாந்துக்குப் போகிறவர்கள் எல்லோரும் க்ஷவரம் செய்து கொள்ளவாவது கற்றுக்கொள்ளுகின்றனர். ஆனால், நான் அறிந்தவரையில், தங்கள் தலைமுடியையும் தாங்களே கத்தரித்துக் கொள்ளுவது என்பதை யாரும் கற்றுக் கொண்டதில்லை. நான் இதையும் கற்றுக்கொண்டு விட வேண்டியதாயிற்று. நான் ஒரு சமயம் பிரிட்டோரியாவில் ஆங்கிலேயர் ஒருவரிடம் முடி வெட்டிக்கொள்ளப் போனேன். அவர், அதிக வெறுப்புடன் என் தலைமுடியை வெட்ட மறுத்துவிட்டார். எனக்கு இது அவமரியாதையாக இருந்தது. உடனே முடிவெட்டும் கத்திரி ஒன்றை வாங்கினேன். கண்ணாடி முன்பு நின்றுகொண்டு, என் தலைமுடியை கத்தரித்துக் கொண்டேன் முன் முடியை வெட்டுக்கொள்ளுவதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றேன். ஆனால், பின்பக்கத்து முடியை வெட்டிக் கெடுத்து விட்டேன். கோர்ட்டில் இருந்த நண்பர்கள் அதைப் பார்த்துவிட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்.      “உமது தலை முடிக்கு என்ன ஆபத்து வந்தது, காந்தி? எலிகள் ஏதாவது வேலை செய்துவிட்டனவா?” என்று கேட்டனர்.

சிவகளிப்பேரலை- 77

சங்க காலத் தமிழ் இலக்கியங்களிலே தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் ஏக்கம் மிகப் பாங்குடன் விவரிக்கப்பட்டிருக்கும். இத்தகு சங்கத் தமிழ் இலக்கிய நயத்துடன், சம்ஸ்கிருத செய்யுளை (ஸ்லோகத்தை) யாத்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர். ...

மகாவித்துவான் சரித்திரம்- 1(5)

இவர் புத்தகங்களைத் தேடுகையில் திருவானைக்காக்கோயில் தர்மகர்த்தாவின் வீட்டில், திருவாவடுதுறை யாதீனத்து வித்துவானாகிய ஸ்ரீ கச்சியப்ப முனிவராற் செய்யப்பெற்ற நூல்களுள் ஒன்றாகிய திருவானைக்காப் புராணம் கிடைத்தது. அதை முறையே படித்து வருகையில் கடவுள் வாழ்த்தின் அழகும், நாட்டுச்சிறப்பு முதலிய காப்பிய உறுப்புக்களின் அமைதியும், அவற்றிற் பழைய நூற் பிரயோகங்களும், இலக்கண அமைதிகளும், தம்மால் அது வரையில் அறியப்படாத சைவ சாஸ்திரக் கருத்துக்களும், சைவ பரிபாஷைகளும், புதிய புதிய கற்பனைகளும் நிறைந்து சுவை ததும்பிக் கொண்டிருத்தலையறிந்து இன்புற்றுப் பன்முறை படித்து ஆராய்ச்சி செய்வாராயினார். அதைப் படிக்கப் படிக்க அதுவரையிற் படித்த பல நூல்களினும் வேறு தலபுராணங்களினும் அது மிக்க சுவையுடையதென்று அறிந்துகொண்டார். பின்னர், கச்சியப்ப முனிவர் செய்த வேறு நூல்கள் எவையென்று ஆராய்ந்து தேடிய பொழுது, விநாயக புராணத்தில் சில பகுதிகளும், பூவாளூர்ப் புராணமும், காஞ்சிப் புராணமும் கிடைத்தன. அந்த நூல்களையும் வாசித்து இன்புறுவாராயினர். ...

சிட்டுக்குருவி

சிட்டுக்குருவிக்கென்றே தனிக்கவிதைத் தொகுப்பு எழுதிய மகாகவி பாரதி, அதனைப் போற்றுவதன் காரணம் அதன் விடுதலை உணர்வே. அகண்ட வானமே வீடாகக் கொண்ட, எல்லையற்ற - கட்டற்ற- கவலையற்ற வாழ்க்கை சிட்டுக்குருவியுடையது. அதனைப் போல வாழத் துடித்தவர் அடிமை வாழ்வகற்றத் துடித்த நமது சுதந்திரக் கவிஞர் பாரதி. இங்கே உள்ளது சிட்டுக்குருவி குறித்த அவரது உரைநடைப் பதிவு....