பொற்குவியல்கள் கொட்டிக் கிடக்கும் புதையலைக் காண விரும்புவோர் மந்திர மை போட்டு அதனை அறிந்துகொண்டு, பலிச் சடங்குகளை நடத்தி அதனை அடைய முயல்வர். பக்தர்களுக்கு சிவபெருமானின் திருவடிகளே நற்புதையலாகும். அந்த நற்புதையலின் இருப்பிடத்தை சிவபெருமான் மீதான தியானம் என்கின்ற மையின் மூலமாக அறிந்துகொள்ள முடியும்
Day: July 26, 2022
பாரதியின் தனிப்பாடல்- 24
29-01-1906 அன்று ‘சுதேசமித்திரன்’ இதழில் - "வேல்ஸ் இளவரசருக்குப் பரத கண்டத்தாய் நல்வரவு கூறுதல்" என்கிற பாரதியின் கீழ்க்கண்ட கவிதை பிரசுரமானது. இக்கவிதையில், அந்நியர் ஆட்சியில் இந்தியர் அடைந்த துயரங்களிலிருந்து நமது மக்களை ஆங்கிலேய ஆட்சி காத்த்து என்று குறிப்பிடும் பாரதி, அவர்களால் ஏற்பட்டுள்ள தொல்லைகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. எனினும் வேல்ஸ் இளவரசரை ‘அதிதி தேவோ பவ’ என்ற கருத்தாக்கத்துடன் வரவேற்று மகிழ்கிறார் மகாகவி பாரதி....
எனது முற்றத்தில் – 13
ஒரே தெருக்காரர்களான 5, 6 குடும்பத்தினர் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக சித்திரான்னம் எனப்படும் விதவித கலவை சாதம் கட்டிக்கொண்டு காவிரியை அல்லது தாமிரபரணியை அல்லது பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நதியை நோக்கி நடையைக் கட்டுவார்கள். அல்லது வண்டி கட்டுவார்கள். ஆற்றங்கரை மணல் பரப்பில் அன்று ஒரு வேளை சாப்பாடு அத்தனைபேருக்கும் பொது. ஆனால் அவரவர் வீட்டில் சமையல் செய்து எடுத்து வந்து பகிர்வார்கள். எந்த வீட்டில் இருந்து என்ன கலவை சாதம் என்று முன்கூட்டியே பேசியிருப்பார்கள். காலங்காலமாக நதியைப் பெண்ணாகப் போற்றும் நமது தொன்மை நாகரீகம் காரணமாக அன்றைய தினம் ஆற்றை வழிபடுவார்கள். அடுத்து கட்டுச்சோற்றை ஒரு கட்டுக் கட்டுவார்கள். எல்லாவற்றுக்கும் இடையில் ’கம்புக்கும் காவல், தம்பிக்கும் பெண் பார்த்த’ படலங்களும் அரங்கேறும்.