ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக எஸ்.பி. சௌத்ரியாக, ‘தங்கப் பதக்கம்’ திரைப்படத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார் சிவாஜி கணேசன். படத்தை இயக்கிய மாதவன், திரைக்கதை வசனம் எழுதிய மகேந்திரன், இசை அமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் தொழில்பக்தியையும் எடுத்துக்காட்டிய திரைப்படம் அது. காவல் பணியில் நேர்மையாக இருந்த சௌத்ரியின் கண்டிப்பு பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடும் மகன் பிற்பாடு இளம் குற்றவாளியாகி விடுகிறான். அவன் வீடு திரும்புகையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் திரைக்கதை. தந்தையின் கண்டிப்புக்கும் மகனின் வீம்புக்கும் இடையிலான தாயின் பாசப் போராட்டத்தை கே.ஆர்.விஜயா அற்புதமாகக் காட்டி இருப்பார். “ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்” என்பது போன்ற நம்ப இயலாத, முட்டாள்தனமான நாயக வசனம் பேசாத காவல் துறை அதிகாரியாக சிவாஜி இப்படத்தில் மிரட்டி இருப்பார். அதனால் தான் இப்படம் இன்றும் முன்னுதாரணமாகப் பேசப்படுகிறது. உறவுகளின் சிக்கலில் சின்னாபின்னமாகிறது சௌத்ரியின் குடும்பம். இறுதியில் மனம் திருந்தாமல் தேசத்துரோக்க் குற்றத்தில் ஈடுபடும் தனது மகனை தானே சுட்டுக் கொல்கிறார் எஸ்.பி. சௌத்ரி. அதற்காக அரசின் தங்கப் பதக்கம் அவருக்கு வழங்கப்படுகிறது. படம் பார்க்கும் நமக்கு கண்களில் நீர் திரையிடுகிறது. இத் திரைப்படத்தில், தனது மகனின் பிறந்த நாளில் அன்னையும் தந்தையும் பாடும் இனிய பாடல் இது. திரைக்கதையின் ஓட்டத்தை உணர்ந்து, விதியின் பாதையை பூடகமாகக் கூறிவரும் பாடலும் கூட. அன்னையும் தந்தையும் எத்துணை பாசத்துடன் தனது மகன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கனவாகக் காண்கிறார்கள் என்பது இப்பாடலில் காட்டப்படும்போதே, பின்னாளில் நிகழ உள்ள அபத்தமான திருப்பங்கள் நமக்குப் புலப்படத் துவங்கும். கவியரசு கண்ணதாசனின் இனிய திரைப்பாடல்களுள் ஒன்று இது.
Day: July 7, 2022
சிவகளிப் பேரலை – 53
மல்லிகையையும் அதனை விரும்புகின்ற வண்டையும் அடுத்தடுத்து சிவபெருமானுக்கு சிலேடையாக அமைத்துப் பாடிய ஸ்ரீஆதிசங்கரர், அடுத்தபடியாக மேகத்தையும் அதனை விரும்புகின்ற மயிலையும் சிவபெருமானோடு இணைத்து இரட்டுற மொழிந்துள்ளார். ....
பாரதியின் தனிப்பாடல்- 5
வானம் சினந்தது; வையம் நடுங்குது; வாழி பராசக்தி காத்திடவே! தீனக் குழந்தைகள் துன்பப்படாதிங்கு தேவி, அருள்செய்ய வேண்டுகிறோம்....