காற்றிடைச் சாளரம் – 12

-கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம்

கடவுளும் நானும்

துயிலெழுந்தார்;
உயிரெடுத்தேன்.

நீராடினார் ;
மழையாடினேன்.

பசியடைந்தார்;
பசியாறினேன்.

காமமெய்தினார்;
கலவிபுரிந்தேன்.

சினந்தார்;
சமரிட்டேன்.

விடைகளாயிருந்தார்;
வினாக்களாயிருந்தேன்.

மௌனமானார்;
தியானமானேன்.

அன்பிலலர்ந்தார்;
இன்புறவடைந்தேன்.

நன்றி பெருக்கினார்;
நாயுடன் இருந்தேன்.

லயித்திருந்தார்;
கவிதைகளாக்கினேன்.

திருவுலாவினார்;
தடம் தேடினேன்.

என்னையறிந்தார்;
தன்னைக் கரைத்தேன்.

இனி என்ன?

இடையிடையே நான்

பயந்தும் துவண்டும்

வாழ்ந்தபோதெல்லாம்

அவரின் நிலையறியாமலேயே

உடல் விடுவேன் – துயிலடைவார்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s