தமிழக முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எளிய தமிழில் எழுதி 1957இல் வெளியிட்டார். 50 ஆண்டுகளுக்குள் இரண்டும் 10 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததன; விற்பனையில் சாதனை என்று மட்டுமல்ல, தமிழ் மண்ணின் ஆன்மிக தாகம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்....
சிவகளிப் பேரலை- 45
பறவை அதன் குடும்பத்தோடும் இனத்தோடும் கூடி வாழ்கின்ற இடம் கூடு. அந்தக் கூடுதான், பறவைக்குப் பாதுகாப்பையும், சௌகர்யத்தையும், சுகங்களையும் தருகிறது. அதேபோல் பக்தனின் மனதாகிய பறவைக்கு, இறைவனின் திருவடிகளே சிறந்த சரணாலயம். ..
பாரதியின் ஞானப்பாடல்- 24
மகாகவி பாரதியின் ஞானப்பாடல்களில் 24வது கவிதை இது...வெள்ள மெனப் பொழியும் தண்ணருளில் ஆழ்ந்தபின் வேதனை உண்டோ?
சிவகளிப் பேரலை – 44
சிங்கத்துக்கும் சிவபெருமானுக்கும் சிலேடையாக இந்த ஸ்லோகத்தை உரைத்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர். இறைச் சிங்கம் எனது மனக்குகையிலே வீற்றிருக்க, எனக்கு எவ்விதத்தில் அச்சம் வரும்? என்று கேட்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
பாரதியின் ஞானப்பாடல் – 23
ஒருமையுணர்வின் (அத்வைதம்) உச்சநிலை இப்பாடல். பகைவனுக்கு அருள்பவர்க்கு எதிரிகளே இருக்க முடியாது. ஏனெனில் அவர் இறைவனை அறிந்தவர் ஆகிறார்...
சிவகளிப் பேரலை – 43
மகாபாரதத்திலே அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை தந்தருள, வேடனாகத்தான் அவன் முன்னர் சிவபெருமான் காட்சி தருகிறார். அவருக்கு கிராதமூர்த்தி என்றும் பெயருண்டு. அப்பேர்பட்ட சிறந்த வேடனாகிய சிவபெருமான் வசிப்பதற்கு, உண்மையிலேயே சிறந்த வனம் எது தெரியுமா? பக்தனின் மனம்தான்....
பாரதியின் ஞானப்பாடல்- 22
மனதைக் கட்டுப்படுத்துதல் முனிவர்க்கும் அரிது. அந்த மனம் செய்யும் கொடுமைகளை இங்கு பட்டியலிடுகிறார் மகாகவி பாரதி.
சிவகளிப் பேரலை – 42
ஆழம் காணவியலாத பக்தி என்ற நீர் நிறைந்த அகழியும், அந்த பக்தியிலே அசைவிலாத உறுதி என்ற தன்மை வாய்க்கப் பெற்ற மதிலும், நற்குணங்களாகிய படைகளும், உடல் - மனம் ஆகியவற்றை கட்டுப்படுத்தியதால் ஏற்பட்ட உறுதி வாய்ந்த கோட்டைச் சுவர்களும், ஞானத்தையே நிறைவான பொருளாகவும் கொண்டது பக்தனின் மனதாகிய கோட்டை. ...
பாரதியின் ஞானப்பாடல்- 21
மகாகவி பாரதியின் ஞானப்பாடல்களில் 20வது கவிதை இது... பேயாய் உழலும் சிறுமனதுக்கு அறிவுரை இது...
சிவகளிப் பேரலை – 41
ஐம்புலன்களை அடக்குவதன் மூலம் நாம் ஆண்டவனுக்கு மிக அருகில் வருகிறோம். அவ்வாறு அடக்குதல் எளிதா? ஐம்புலன்களின் வேட்கையை அழிக்க முடியாது என்றபோதிலும், அதனை அடக்குவதற்கு இறைவன் கொடுத்த ஒழுக்க வழிமுறைகளிலே வழுவாது நிற்க வேண்டும் என்பதை திருக்குறள் உள்ளிட்ட அற நூல்கள் வலியுறுத்துகின்றன. அதுசரி, நினைத்தாலே கடினமாக இருக்கக்கூடிய இந்தச் செயலை நம்மால் கடைப்பிடித்து ஒழுக முடியுமா? முடியும். அதற்கு, ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என அடியெடுத்துக் கொடுக்கிறது திருவாசகம்.
பாரதியின் ஞானப்பாடல்- 20
‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற அற்புதமான வாசகத்தைக் கொண்ட இனிய கவிதை இது... கவலைகளால் குமையாமல், களிப்புடன் வாழ நமக்கு வழிகாட்டுகிறார் மகாகவி.
சிவகளிப் பேரலை – 40
மனத்தில் சிவபெருமான் அரசாட்சியால் ஞானப்பயிர் வளர்ந்து நற்பலன்கள் கொடுப்பதை முந்தைய ஸ்லோகத்தில் வர்ணித்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் பக்தன் ஒருவன், தனது மனத்திலே பக்திப் பயிரை எவ்விதம் வளர்ப்பது என்பதை விவரிக்கிறார்....
பாரதியின் ஞானப்பாடல் – 19
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற வகையிலான ஞானப்பாடல் இது...
சிவகளிப் பேரலை – 39
சிவபெருமான் ஆட்சி நடைபெறுகின்ற மனத்திலே நான்கு பாதங்களுடைய அறம் நன்கு பேணப்படுகிறது. தவம், தூய்மை, கருணை, உண்மை ஆகியவையே தர்ம தேவதையின் (அறத்தின்) நான்கு கால்களாக வர்ணிக்கப்படுகின்றன. இவ்வாறு அறம் பேணப்படுவதால், காமம், கோபம் (குரோதம்), செருக்கு (கர்வம்) ஆகியவை அழிந்துவிடுகின்றன. பாவமும் ஒழிந்துவிடுகிறது. காலம், இன்பத்தை மட்டுமே தருகிறது. மேலும், இறையனுபூதியாகிய ஞானப்பயிர் விளைந்து நற்பலன்களைக் கொடுக்கிறது.....
பாரதியின் ஞானப்பாடல்- 18
கடமை கடமை என்று ஓடிக் கொண்டிருக்க வேண்டாம், கட்டற்று, கடமை நினைவே இன்றி வாழ்வோம் - என்ற மகாகவி பாரதியின் வித்யாசமான சிந்தனை இக்கவிதையில் ஒலிக்கிறது....