திரு. ஜெயமோகன், தமிழின் முன்னணி எழுத்தாளர்; திரைக்கதை வசனகர்த்தா. ‘தி இந்து- தமிழ்’ நாளிதழில் 2014-இல் இவர் எழுதிய கட்டுரை நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது.
பாஞ்சாலி சபதம் – 2.2.6
பாஞ்சாலியை அவைக்கு அழைத்து வருமாறு ஏவிய துரியனைக் கண்டு சினம் கொண்ட நடுநிலை நாயகரான விதுரன், ”மூட மகனே, நீ செய்வது தகாது. பாண்டவர் உன்னை மாய்க்கும் முன்னம் அவர்களிடம் பறித்ததை திருப்பி அளி” என்று அறிவுறுத்துகிறார். உடனே, விதுரனை மடையனென்று விளம்பிய துரியன் தேர்ப்பாகனை அழைத்து, ‘பாஞ்சாலியை அவைக்கு வருமாறு வேந்தன் பணித்ததைக் கூறு’ என்கிறான். தேர்ப்பாகனால் நடந்த இழிவை அறிந்த பாஞ்சாலி, “மாண்பிழந்த நாயகர்தாம்- என்னைமுன்னே கூறி இழந்தாரா? தம்மையே -முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா?” என்று பதிலறிந்து வருமாறு பாகனிடம் கூறுகிறாள். அதாவது, ஏற்கனவே அடிமைப்பட்டவனுக்கு பிறரை- குறிப்பாக மனைவியை- அடிமையாக்கும் சுதந்திரம் இல்லை என்பதே பாஞ்சாலியின் கருத்து.
வந்தேமாதரம்
இக்கவிதை பெரும்பாலான பாரதி கவிதைத் தொகுதிகளில் காணப்படாதது. ‘சக்கரவர்த்தினி’ மகளிர் மாத இதழிலும், ‘சுதேசமித்திரன்’ நாளிதழிலும் வெளியான பாரதி பாடல் இது…
இளைஞர்களின் உற்சாக டானிக்!
திருமதி ஜி.மீனாட்சி, பத்திரிகையாளர்; ‘ராணி’ வார இதழின் ஆசிரியர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது இவர் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாகிறது….
பாஞ்சாலி சபதம் – 2.2.5
சூதாட்ட வெற்றியின் ஆணவம் துரியன் கண்களை மறைக்கிறது. சித்தப்பனும் அஸ்தினாபுர அமைச்சனுமான விதுரனிடம் திரும்பி, பாஞ்சாலியை ஏவல் செய்ய அரசவைக்கு அழைத்து வருமாறு ஏவுகிறான் துரியன். அப்போது பாஞ்சாலியை சூதில் எடுத்த விலைமகள் என்கிறான் பாவிமகன்....
மகாவித்துவான் சரித்திரம்- 2(11)
சிதம்பரம் பிள்ளைக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. அவர்களுள் முதல்வரும் மூன்றாம் புதல்வரும் அக்காலத்தில் இறந்துவிட்டனர். இரண்டாங் குமாரருக்கு வைத்தியநாதசாமி பிள்ளை யென்று பெயர். தம் தந்தையார் பார்த்து வந்த கப்பூர்க் கணக்கு வேலையை அவர் பார்த்துக்கொண்டு இப்பொழுது சௌக்கியமாக இருந்து வருகின்றனர். அவரை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. "உமக்கு ஆண் குழந்தை பிறந்தால் அக் குழந்தைக்குப் பிள்ளையவர்களுடைய பெயரை வைக்க வேண்டும்" என்று அவரிடம் நான் சொல்லியிருந்தேன்.
வங்கமே வாழிய!
14-9-1905-இல் சென்னைக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் மகாகவி பாரதி பாடிய பாடல் இது; மறுநாள் ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் வெளியாகி உள்ளது.
சுவாமிஜியைக் கண்டெடுத்த தமிழகம்
‘பத்மன்’ என்ற பெயரில் எழுதிவரும் திரு. நா.அனந்த பத்மநாபன், பல நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர். சென்னையில் வசிக்கிறார். இதழியல் துறையில் பல்லாண்டுகால அனுபவம் உடைய இவர், தமிழக அரசின் விருது பெற்ற ’மூன்றாவது கண்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
பாஞ்சாலி சபதம் – 2.2.4
விநாச காலம் நெருங்குகையில் விபரீத புத்தி ஏற்படுவது இயல்பு. கௌரவர்களின் அழிவுக்காலத்துக்கு அடிகோலிடும் நிகழ்வு இப்போது நிகழ்கிறது. சூதில் தோற்ற சகோதரனின் மனைவியை - அவைக்கு பாஞ்சாலியை அடிமையாக அழைத்து வருமாறு ஏவுகிறான் துரியன். அப்போது உலகில் நெறி கெடுவதால் குழப்பம் நேரிடுகிறது என்று சொல்வதுடன் நிறுத்தவில்லை, மகாகவி பாரதி. சிவனும் மாலவனும் பிரம்மனும் வாணியும் லட்சுமியும் கொற்றவையும் நிலைகுலைகிறார்கள் என்கிறார்... இங்கே அவரது யாப்பு ஆசிரியப்பாவாக மாறுகிறது....
பாரதியும் பாரதிதாசனும்- 3அ
இளமையிலேயே நாடு முழுவதையும் சுற்றித் திரிந்து பார்த்த காரணத்தாலும் பிற மொழி பேசும் இந்திய நாட்டு மக்களோடு பல்லாண்டுகள் பழக நேர்ந்த காரணத்தாலும், பாரதியாரின் அறிவு, விரிந்த பரப்பும் பாங்கும் கொண்டது என்பதை மறுக்க முடியாது. இந்தியா முழுவதையும் ஒன்றாகக் காணுகின்ற ஒருமைக் கண்ணோட்டம், பரந்துபட்ட அவருடைய அனுபவத்தின் விளைவு என்று நினைக்க வேண்டியுள்ளது.
ஸ்வதந்திர கர்ஜனை- 2(20)
காந்திஜி தன்னுடைய உரையின் நிறைவில் மிக உருக்கமாக ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அது, “நான் ஒரு மந்திரத்தை உங்களுக்கு இப்போது சொல்லுகிறேன். அதை உங்கள் இதயங்களில் பதித்து வைத்திருங்கள். நீங்கள் விடும் மூச்சுக்காற்றிலும் இந்த மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கட்டும். அந்த மந்திரம் ‘செய்! அல்லது செத்து மடி!’ Do or Die” என்று குறிப்பிட்டார்...
மூன்று கடல்கள், மூன்று நாட்கள்
திரு. சுப்பு மூத்த தமிழ் பத்திரிகையாளர்; தினமணி, தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தவர்; மொழி பெயர்ப்பாளர்; ‘திராவிட மாயை- ஒரு பார்வை’ என்ற நூலின் மூலமாக தமிழக அரசியல், இலக்கிய வட்டாரங்களில் பெரும் சலனத்தை ஏற்படுத்திய எழுத்தாளர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே…
பாஞ்சாலி சபதம் – 2.2.3
சூதில் தோற்று பணயமாக வைத்த பாஞ்சாலியை தருமன் இழந்து கையறுநிலையில் தவிக்க, அவனது கௌரவ இளையவனான துரியன் கூத்தாடுகிறான் - நெடுநாள் பகை தீர்ந்ததென்று! அப்போது அவையில் நிகழ்ந்த அநியாயங்களை எல்லாம் எனது பாடலில் எழுத என்னால் இயலாது என்கிறார் மகாகவி பாரதி.
அக்கினிக் குஞ்சுகள்- நூல் அறிமுகம்
பத்திரிகையாளர் வ.மு.முரளி, தினமணியின் இணைப்பிதழான 'இளைஞர் மணி'யில் 2015 அக்டோபர் 27 இல் தொடங்கி 2018 டிசம்பர் 20 வரை 120 வாரங்கள் தொடர்ந்து எழுதிய கட்டுரைத் தொடரின் தொகுப்பு இது. “வாரந்தோறும் படித்தாலும் அப்பொழுது ஏற்படாத மலைப்பு நூல் வடிவில் தொகுப்பாக படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது” என்று தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் குறிப்பிட்டுள்ளார். அது பொருத்தமான பாராட்டுத் தான்.
“சென்னை இளைஞர்களே, நீங்கள்தான் உண்மையில் அனைத்தையும் செய்து முடித்தவர்கள்”
திரு. மாலன் தமிழகம் அறிந்த மூத்த பத்திரிகையாளர்; இயற்பெயர் நாராயணன்; தினமணி, இந்தியா டுடே (தமிழ்), குமுதம், குங்குமம்,புதிய தலைமுறை ஆகிய பத்திரிகைகளிலும் சன் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்; கணையாழி, திசைகள் ஆகிய இலக்கிய இதழ்களில் பணியாற்றியவர்; ஜனகணமன (நாவல்), என் ஜன்னலுக்கு வெளியே, உயிரே உயிரே, சொல்லாத சொல் (கட்டுரைத் தொகுப்புகள்), மாலன் சிறுகதைகள் உள்ளிட்ட நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது முதல் கட்டுரை இங்கே…