1920-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஒரு விபரீத முடிவை எடுத்தது. அதாவது, பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்ப்பதற்காக, சட்டசபைத் தேர்தல்களைப் புறக்கணிப்பதாக அக்கட்சி அறிவித்தது. இதன் பின்புலத்தில் மகாத்மா காந்தி இருந்தார். இதனை காங்கிரஸ் கட்சியிலிருந்த தீவிரவாத கோஷ்டியினர் (பிபின் சந்திர பால், சித்தரஞ்சன் தாஸ் உள்ளிட்டோர்) ஏற்கவில்லை. அவர்களை ஆதரித்த சுதேசமித்திரன் பத்திரிகையும் மகாத்மா காந்தியின் முடிவை எதிர்த்தது. அதுகண்டு காந்தி அபிமானிகள் பலர் மகாகவி பாரதிக்கு தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் சுதேசமித்திரன் பத்திரிகையில் நீங்கள் எப்படி வேலை செய்யலாம்? என்று அவர்கள் கேட்டனர். அதற்கு சுதேசமித்திரன் பத்திரிகையிலேயே மகாகவி எழுதிய பதில் தான் இக்கட்டுரை… இதில் பாரதியின் அரசியல் ஞானமும், தேசபக்தியும் மிளிர்கின்றன.
பாஞ்சாலி சபதம் – 2.3.11
பாஞ்சாலியை அவமதிக்க எண்ணிய கௌரவர் சோர்ந்து விழுந்ததைக் கண்டு அவை அமைதி காத்தது. அப்போது, பீமன் எழுந்து வெஞ்சினம் உரைக்கிறான். “கண்ணன் பதம் மீதும் கண்களின் கழலால் மதனனை எரித்த சிவனின் கழலடி மீதும் ஆணையிட்டு உரைக்கிறேன்” என்று சொல்லும் அவன், எங்கள் தேவியைத் தனது தொடை மீது அமரச் சொன்ன நாய்மகன் துரியோதனனை யுத்தக் களத்தில் தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்; துச்சாதனைன் தோள்களைப் பிய்ப்பேன். இது நான் சொல்லும் வார்த்தை அல்ல, தெய்வத்தின் வார்த்தை!” என்று சபதம் செய்கிறான்.
விவேகானந்தம்
திரு. கவிக்கோ ஞானச்செல்வன், தமிழகம் அறிந்த புலவர், சென்னையில் வசிக்கிறார்; தமிழாசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர்; சிறந்த எழுத்தாளர். ‘பாரதி வாழ்கிறார், நீங்களும் கவிஞராகலாம், அர்த்தமுள்ள அரங்குகள்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தினமணிக்கதிரில் வெளியான ‘பிழையின்றித் தமிழ் எழுதுவோம்’ தொடர் தமிழ்மொழி மீதான இவரது பற்றை வெளிப்படுத்தும். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது….
பாரதியும் பாரதிதாசனும்- 4அ
பாரதி, பாரதிதாசன் என்ற இருவருடைய கவிதைகளையும் ஆர அமர நினைந்து பார்ப்போமேயானால், இருவருடைய உணர்ச்சிக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதை அறிய முடியும். இருவருடைய ஆற்றலும் பேராற்றல்கள் என்பதிலும் ஐயமில்லை. பலவிடங்களில் வாழும் மக்களிடம் பழகிய காரணத்தால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் குழாய் மூலம் நீர் சொரிவது போலப் பாரதியின் கவிதைகள் வெளிப்பட்டன. தமிழர்களை அல்லாமல் பிற மக்களோடு பழகும் வாய்ப்பைப் பெறாத காரணத்தாலும் பிற இடங்களுக்கு அதிகம் சென்று தங்கி உறவு கொள்ளாத காரணத்தாலும் புரட்சிக் கவிஞரின் பாடல்கள் குடத்தைக் கவிழ்த்து நீரைச் சொரிவது போல உணர்ச்சியை அப்படியே கொட்டி விடுகின்றன.
பாஞ்சாலி சபதம் – 2.3.10
அவையில் பாஞ்சாலியைச் சிறுமை செய்யும் நோக்கில் துச்சாதனன் அவளது சீலையைப் பற்றி இழுக்கிறான். அப்போது வேறு வழியின்றி கண்ணனைச் சரண் புகுகிறாள் துருபதன் மகள். “ஆதிமூலமே என்றழைத்த யானைக்காக முதலையை மாய்த்தவன்; காளிங்கன் மீது களி நடனம் புரிந்தவன்; சக்கரமும் சார்ங்கமும் ஏந்தியவன்; தூணைப் பிளந்து நரசிம்மமாக அவதரித்து அகந்தை கொண்ட அசுரனை மாய்த்தவன்; முனிவர் அகத்தில் மிளிர்பவன்; அறிவினைக் கடந்த விண்ணகப் பொருளான கண்ணா, என் மானத்தைக் காப்பாயாக!” என்று மனமுருகி வேண்டி இருகரம் கூப்பினாள். அப்போது ஆங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. “பொய்யர்தந் துயரினைப்போல், - நல்ல புண்ணிய வாணர்தம் புகழினைப்போல், தையலர் கருணையைப் போல்…” பாஞ்சாலியின் ஆடை வளர்ந்த்து. துச்சாதனன் துகிலுரிக்க உரிக்க, பாண்டவர் ஐவரின் தேவியின் சீலை, புதிது புதிதாய், வண்ணப் பொற்சேலைகளாக வளர்ந்தது. கரம் சோர்ந்து வீழ்ந்தான் கீழ்மகன்…
ஏழையே தெய்வம்!
பேரா. திரு. இரா.வன்னியராஜன், திருவேடகம் விவேகானந்த குருகுலக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென்பாரதத் தலைவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் உறித்த கட்டுரை இது…
மகர சங்கராந்தியே பொங்கல்!
தமிழர் திருநாள் என்ற பெயரில் இந்துக்களின் பண்டிகையான பொங்கல் திருவிழாவை மடைமாற்றும் முயற்சி, இந்த ஆண்டு மாநில அரசாலும், இந்து விரோதிகளாலும் முனைப்பாக முன்னெடுக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை மதச்சார்பற்றதாக மாற்ற பெரும் வேகத்துடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படன. இதற்கு ஆங்காங்கே அறிவுலகினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து மதத்தினரும் பொங்கல் விழா கொண்டாடுவதில் நமக்கு- தமிழ் பேசும் இந்துக்களுக்கு- எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், பாரம்பரிய வேர்களை வெட்டி வீழ்த்தும் வெறியுடன் இது ஒரு பின்புலத் திட்டத்துடன் இது மேற்கொள்ளப்படுகையில் விமர்சித்தாக வேண்டி இருக்கிறது. ... இங்கே உள்ளவை, மார்க்சிய அறிஞர் திரு. இளங்கோ பிச்சாண்டி, மருத்துவ சமூகவியலாளர் திரு. அ.போ.இருங்கோவேள் ஆகியோரின் பதிவுகள்...
மகாவித்துவான் சரித்திரம்- 2(13)
பிள்ளையவர்களுடைய இளம்பிராயத்தில் ஒருவர் பாடங்கேட்க வந்தார். "என்ன படிக்க வேண்டும்?" என்று இவர் அவரைக் கேட்கவே அவர், "இலக்கியம் படிக்க வேண்டும்" என்று கூறினார். அப்பால், "இலக்கணம் படிக்க வேண்டாமா ?" என்று இவர் கேட்டபொழுது, “நன்றாகப் படித்திருக்கிறேன்" என்று அவர் விடை கூறினார்; உடனே இப்புலவர்பிரான் அவரை ஒரு செய்யுள் சொல்லச் செய்து, "இந்தப் பாடலில் எழுவாய், பயனிலை என்ன?" என்று கேட்டார். அவர் நெடுநேரம் யோசித்தும் விளங்காமல் விழித்துக் கொண்டே யிருக்கையில் இவர், "எழுவாய், பயனிலை" என்று சொன்னார்...
பாஞ்சாலி சபதம் – 2.3.9
விகர்ணனின் நல்லுரை கேட்டுச் சினந்த கர்ணன், அவனை ஏசுகிறான். பாஞ்சாலியின் அழகால் மயங்கி இவ்வாறு சிறுவன் பிதற்றுவதாகக் கூறி கண்டிக்கும் கர்ணன், “மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கங் கீழடியார்க் கில்லை” என்று கூறி,பாண்டவர்களின் மேலாடைகளையும் பாஞ்சாலியின் சீலையையும் களையுமாறு சேவகனுக்கு உத்தரவிடுகிறான். இதைக் கேட்டு திகைத்த பாஞ்சாலி என்ன செய்வதென்று அறியாமல், இரு கரங்களையும் இணைத்து இறுகப் பற்றிக் கொண்டாள் என்கிறார் மகாகவி பாரதி…
விவேகானந்தர்: எண்ணத்தை இயக்கமாகிய ஆன்மிக வழிகாட்டி
முன்னோடி பெண் தொழில் முனைவோரும், நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள எழுத்தாளருமான செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி, சென்னையில் உள்ள, மென்பொருள் தயாரிக்கும் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் இயக்குநருமாவார். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே…
சர்க்கரை இல்லாத பொங்கலா?
பச்சரிசியை மட்டும் பானையிலிட்டுக் கிண்டினால் பொங்கலாகி விடுமா? சர்க்கரை, பாசிப்பருப்பு, நெய், முந்திரி, திராட்சை, ஏலம் இல்லாமல் பொங்கலா? அப்படித்தான் தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக திராவிட மாடல் ஆட்சியை நடத்துபவரின் ஆதரவாளர்களும், அவரை ஆட்சியில் அமர்த்திய மாற்று மதத்தவர்களும் ஒரு பித்தலாட்டத்தை அரங்கேற்றி வருகிறார்கள். அதாவது தைப் பொங்கல் இந்துக்களின் பண்டிகை அல்லவாம்… தமிழர்களின் பண்டிகையாம்… அதற்காக பொங்கலின் வடிவத்தை மாற்ற - அதன் ஆன்மிக உணர்வையே மழுங்கடிக்க - முயல்கிறார்கள் மடையர்கள். அவர்களுக்கான பதிலே இக் கட்டுரைகள்…
ஸ்வதந்திர கர்ஜனை- 2(23)
...இதில் சொல்லப்படும் முக்கிய கருத்து ‘காங்கிரஸ் கட்சி தடை செய்யப்படுமானால், காங்கிரஸ்காரர் ஒவ்வொருவரும் தமக்குத் தாமே வழிகாட்டியாகி முடிவுகளை எடுத்துச் செயல்பட வேண்டும்’. இந்த வாசகங்களிலிருந்து ஒவ்வொருவரும் ஊகித்துக் கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளம். அதன் விளைவுகள் தான் நாட்டில் பிரிட்டிஷாருக்கு எதிரான கடுமையான இறுதிப் போராட்டம்....
பாஞ்சாலி சபதம்- 2.3.8
சினம் கொண்ட பீமன், விஜயனின் பேச்சைக்கேட்டு அமர்ந்தான். அப்போது கௌரவர் பக்கம் இருக்கும் ஒரே நியாயவானான விகர்ணன், ‘தமையன்கள் செய்வது அதர்மம்’ என்று அவையில் எழுந்து சொல்கிறான். “தன்னையிவன் இழந்தடிமை யான பின்னர்த் தாரமெது? வீடேது?” என்று பெண்ணரசு கேட்பது நிட்யாயம் தானே? என்கிறான். அப்போது அவையில் சிறு சலசலப்பு ஏற்படுகிறது...
“கொடுப்பதைக் கொடுத்து விடுங்கள்”
திரு. படுதலம் சுகுமாரன், தமிழகம் அறிந்த எழுத்தாளர்; கார்ட்டூனிஸ்ட்; சிறுகதை ஆசிரியர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
பாட்டும் நானே… பாவமும் நானே!
ஆணவம் கொண்ட பாடகர் ஒருவருக்கு பாடம் கற்பிக்க, விறகுவெட்டியாய் வந்து பாடி திருவிளையாடல் நிகழ்த்திய சிவனின் பெருமையை உணர்த்தும் பாடல் இது... திரைக்கதைக்கு ஏற்ப கவியரசர் நிகழ்த்தியுள்ள சொற்களின் ஜாலம், திரைப்படத்தின் தரத்தையே உயர்த்துகிறது...