-கவியரசு கண்ணதாசன்
ஆணவம் கொண்ட பாடகர் ஒருவருக்கு பாடம் கற்பிக்க, விறகுவெட்டியாய் வந்து பாடி திருவிளையாடல் நிகழ்த்திய சிவனின் பெருமையை உணர்த்தும் பாடல் இது... திரைக்கதைக்கு ஏற்ப கவியரசர் நிகழ்த்தியுள்ள சொற்களின் ஜாலம், திரைப்படத்தின் தரத்தையே உயர்த்துகிறது...

பாட்டும் நானே… பாவமும் நானே!
பாடும் உனை நான் பாடவைப்பேனே!
பாட்டும் நானே… பாவமும் நானே!
பாடும் உனை நான் பாடவைப்பேனே!
(பாட்டும்)
கூட்டும் இசையும்… கூத்தின் முறையும்…
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
கூட்டும் இசையும்… கூத்தின் முறையும்…
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
(பாட்டும்)
அசையும் பொருளில் இசையும் நானே!
ஆடும் கலையின் நாயகன் நானே!
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே…
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே!
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…
என்னிசை நின்றால் அடங்கும் உலகே!
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே!
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே!
அறிவாய் மனிதா, உன் ஆணவம் பெரிதா?
அறிவாய் மனிதா, உன் ஆணவம் பெரிதா?
ஆலவாயனொடு பாடவந்தவனின்
பாடும்வாயை இனி மூடவந்ததொரு
(பாட்டும்)
திரைப்படம்: திருவிளையாடல் (1965) இசை: கே.வி.மகாதேவன் பாடகர்: டி.எம்.செளந்தரராஜன் நடிப்பு: சிவாஜி கணேசன்
$$$