- பி.ஏ.கிருஷ்ணன்
- சுந்தர்ராஜ சோழன்
- முரளி சீதாராமன்
- சேக்கிழான்
பச்சரிசியை மட்டும் பானையிலிட்டுக் கிண்டினால் பொங்கலாகி விடுமா? சர்க்கரை, பாசிப்பருப்பு, நெய், முந்திரி, திராட்சை, ஏலம் இல்லாமல் பொங்கலா? அப்படித்தான் தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக திராவிட மாடல் ஆட்சியை நடத்துபவரின் ஆதரவாளர்களும், அவரை ஆட்சியில் அமர்த்திய மாற்று மதத்தவர்களும் ஒரு பித்தலாட்டத்தை அரங்கேற்றி வருகிறார்கள். அதாவது தைப் பொங்கல் இந்துக்களின் பண்டிகை அல்லவாம்… தமிழர்களின் பண்டிகையாம்… அதற்காக பொங்கலின் வடிவத்தை மாற்ற - அதன் ஆன்மிக உணர்வையே மழுங்கடிக்க - முயல்கிறார்கள் மடையர்கள். அவர்களுக்கான பதிலே இக் கட்டுரைகள்… இக்கட்டுரைகளைத் தொகுக்க வாய்ப்பளித்த முகநூலுக்கு நன்றி!

1. சர்க்கரை
மடைமாற்றும் மதச்சார்பின்மை
-சேக்கிழான்
சர்க்கரை சேர்க்காத சர்க்கரைப் பொங்கலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தைப் பொங்கலை மதச்சார்பற்ற பண்டிகையாக – தமிழர் திருநாள் என்ற பெயரில் மடைமாற்ற – இந்த ஆண்டு தீவிர முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
வழக்கமாக தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பது போன்ற கிறுக்குத்தனமான கோஷங்களே இதுவரை முன்வைக்கப்பட்டு வந்தன. அந்த முடவாதத்துக்கு எந்தப் பலனும் இல்லை என்பதும், தமிழக மக்கள் அதனை ஏற்கவில்லை என்பதும் திமுகவினருக்குப் புரிந்துவிட்டது. எனவே தான் மு.கருணாதிதி செய்த தவறை – தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்த முட்டாள் தனத்தை – அவரது மகன் ஸ்டாலின் இந்த ஆண்டும் செய்யத் துணியவில்லை.
மாறாக, தமிழர்களின் அதாவது தமிழ் பேசும் இந்துக்களின் பாரம்பரியப் பண்டிகையான பொங்கலை மதச்சார்பற்றதாகச் சித்தரிப்பதற்கான முயற்சிகள் இந்த ஆண்டு அதிதீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. மும்மதத்தாரும் பொங்கலிடும் நிகழ்வில் காட்சியளிக்கும் படங்களை கவனமாக தமிழக அரசும், திமுக ஆதரவாளர்களும் முன்வைத்தனர்.
கேரளத்தில் திருவோணம் பண்டிகையை அனைத்து மதத்தினரும் கொண்டாடும் கேரள கலாச்சார விழாவாக மாற்றி அமைத்திருக்கிறார்களாம். அதுபோல தமிழகத்திலும் பொங்கல் பண்டிகையை அனைத்துத் தமிழர்களுக்கான விழாவாக மாற்றி அமைப்போம் என்றெல்லாம் கோஷங்கள் எழுப்பப்பட்டன. விலைபோன சில எழுத்தாளர்களும் இதற்குத் துணை போயினர்.
கேரளத்தில் திருவோணம் பண்டிகையை என்னதான் கம்யூனிஸ்டுகள் மடைமாற்ற முயன்றபோதும், அது இன்னமும் மண்ணின் மைந்தர்களின் விழாவாகவே தொடர்கிறது; தொடரும் என்பதே யதார்த்தம். தவிர, மாற்று மதத்தவரே ஆயினும், சில நூறு ஆண்டுகளுக்கு முன்னம் அவர்களும் இந்துப் பாரம்பரியத்தைக் கடைபிடித்தவர்களே. எனவே, அங்கு ஒருவித ஒவ்வாமையுடனேயே பிற மதத்தினர் வேறு வழியின்றி “ஓணம் வந்தல்லோ” என்று பாடி மகிழ்கின்றனர்.
அதுபோலவே, தமிழகத்திலும் மாற்று மதத்தினர் முழு மனதுடன் இல்லாமல், அரசியல் காரணங்களுக்காக பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர். செருப்புக்காலுடன் பொங்கலிடுவது, அடுப்பில் பொங்கல் பானைக்குப் பதிலாக பிரியாணி அண்டாவை வைத்துப் பொங்கலிடுவது, பொங்கலின் முக்கிய அம்சமான சூரியனுக்குப் படையலிடாதது என, தங்களின் அசௌகரியங்களை வெளிப்படுத்துகின்றனர். இதனை உதயசூரியனை சின்னமாகக் கொண்ட கட்சி வேண்டுமென்றே ஆதரிக்கிறது.
பொங்கலிடுவது என்பதே, அறுவடையான பயிர் விளைச்சலுக்காக சூரியனுக்கு நன்றி செலுத்தும் திருவிழா தான். இந்த அடிப்படையையே பகுத்தறிவுக் குஞ்சுகள் உணரவில்லை என்பது பரிதாபம்.
இந்துப் பண்டிகைகளை கேலி பேசிய காலம் மாறி, இந்துப் பண்டிகை ஒன்றை மதச்சார்பற்றதாக சொந்தம் கொண்டாடும் அளவுக்கு இவர்கள் கீழிறங்கும்போதே, மக்களின் மனமாற்றம் புரியத் தொடங்கிவிட்டது. அதாவது, இனியும், இந்து நம்பிக்கைகளை கேலி பேச முடியாது. எனவே, அவற்றுக்கு வேறு வடிவம் கொடுத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு விக்கிரக ஆராதனை எதிர்ப்பாளர்களும், இறைவனுக்கு பிரசாதம் படைப்பதை எதிர்ப்பவர்களும் வந்து விட்டனர். அதனை அவர்களது வாக்குகளால் வென்ற திமுக நிறைவேற்ற முயல்கிறது.
அசுர மன்னன் ஹிரண்ய கசிபு ஆரம்பத்தில் கடவுள் இல்லை என்றான். பிறகு, கடவுளே தான்தான் என்றான். திமுக இப்போது முதல்நிலையைத் தாண்டி, இரண்டாம் நிலைக்கு வந்துவிட்டது. அடுத்து தூணைப் பிளக்கும் மூன்றாவது கட்டமும் விரைவில் நிகழும்.
உங்களுக்கு இனிப்புப் பொங்கல் பிடிக்கவில்லையா? பொங்கலை மிளகுப் பொங்கலாக சமைத்து தாராளமாக சாப்பிடுங்கள். உடன் வந்து சாப்பிட நாங்களும் தயார் என்கிறார்கள் தமிழ் பேசும் இந்துக்கள். அதுவும் உடலுக்கு நல்லது தான். ஆனால், உங்கள் மதச்சார்பற்ற வசதிக்காக, சூரியனுக்குப் படைக்கும் தைப் பொங்கலில் ‘சர்க்கரையும் நெய்யும்’ கலக்கக் கூடாது என்று கூறி உங்கள் முட்டாள்தனத்தை அம்பலப்படுத்தாதீர்கள்.
கல் தூண் தான். ஆயினும், எப்போது வேண்டுமாயினும் தூணைப் பிளந்து வெளிப்பட நரசிம்மர் உள்ளே காத்திருக்கிறார். அசுரரின் குடலே அவருக்கு மாலை. அசுரர்கள் திருந்தினால் அவர்களுக்கு நல்லது. பிரஹலாதர்களை மீண்டும் மீண்டும் சீண்டுவது அவர்களுக்கு வேண்டாத வேலை.
$$$
2. பாசிப்பருப்பு
நாங்கள் நாங்களாக இருக்கிறோம்!
-முரளி சீதாராமன்

இதோ பார், சூரியனையும் மாட்டையும் கும்பிடணும் – அதுதான் பொங்கல்!
சும்மா ‘பகுத்தறிவுப் பொங்கல்’ – ‘படையல் இல்லாப் பொங்கல்’ – ‘சமத்துவப் பொங்கல்’…. இந்த உருட்டல் எல்லாம் வேண்டாம்!
“பொங்கல் எங்களது பண்டிகை அல்ல – சூரியனையோ, காளை மாட்டையோ, பசு மாட்டையோ கும்பிடுவது எங்கள் வழிபாட்டு முறை இல்லை – நாங்கள் உங்களிலிருந்து வேறுபட்டவர்கள்” – என்று வெளிப்படையாகச் சொல்!
WE ARE NOT ONE AMONG YOU; WE BELONG TO A DIFFERENT FAITH; WE ARE THE ‘OTHER PEOPLE’ – என்று வெளிப்படையாகச் சொல்!
உன்னுடைய ‘மாற்று நம்பிக்கை’-யை மத நல்லிணக்கம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் அதற்குரிய வகையில் புரிந்து கொண்டு உன்னை ஒரு ‘மாற்று மத’ நண்பனாக ஏற்கிறோம்!
அதை விட்டுவிட்டு எங்கள் மத வழிபாட்டில் புகுந்து அதை உன் இஷ்டத்துக்கு வளைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம்!
நீ பொங்கலே கும்பிட வேண்டாம் – கும்பிடாமலே இரு – அதனால் எங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை!
ஆனால் ‘பொங்கலைக் கொண்டாடுவேன் – ஆனால் சூரியனை வணங்குவதோ, மாட்டை வணங்குவதோ செய்ய மாட்டேன்’- என்று சொல்லிக் கொண்டு உள்ளே வராதே!
உன்னுடன் அப்படிக் கைகுலுக்கி – எங்கள் வழிபாட்டு முறைகளை நீர்த்துப் போகச் செய்து – மாமன், மச்சான் உறவு கொண்டாட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை!
நீ ‘எங்களில்’ ஒருவனல்ல – ‘எங்களோடு’ ஒருவன் – புரிந்து கொள்!
நீ நீயாக இரு – உனது வழிபாட்டு முறை எதுவோ அதில் திடமாக இரு – அந்த அளவில் உனது நம்பிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம்.
நாங்கள் நாங்களாக இருக்கிறோம் – பொங்கல் உட்பட எந்தத் திருநாளையும் அவற்றுக்குரிய வழிபாட்டு முறைப்படிதான் நாங்கள் கொண்டாடுவோம்!
சூரியனுக்குப் படையல் தந்தே ஆக வேண்டும்!
மாட்டை வணங்கியே ஆக வேண்டும்!
இந்த மரபில் மாற்றம் செய்ய எங்களுக்கே அதிகாரம் இல்லாத போது…
உனக்கு எவன் அதிகாரம் கொடுத்தான் – உள்ளே வந்து உருவ வழிபாட்டைக் குறை கூறுவதற்கு?
எப்போது ஒரு அந்நிய தேச மண்ணிலிருந்து வந்த இறைக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு எங்களிடமிருந்து விலகிச் சென்று விட்டாயோ…
அன்றிலிருந்தே நீ எங்களில் ஒருவனாக இருக்கும் தகுதியை விட்டுக் கொடுத்து விட்டாய்!
இப்போது நீ எங்களில் ஒருவன் அல்ல!
எங்களுடன் இந்நாட்டில் குடியுரிமை பெற்று வசிக்கும் இன்னொருவன் – அதாவது ‘மாற்று மதத்தைச் சேர்ந்த’ – சக பிரஜை நீ!
இருவரும் பகை இன்றி சக குடிமக்களாக வாழ வேண்டுமா?
ஆம் – நிச்சயம் அப்படித்தான் வாழ வேண்டும்!
நாம் இருவரும் சக குடிமக்களாக ஒருவர் மீது ஒருவர் துவேஷம் பாராட்டாமல் வாழ வேண்டுமா?
ஆம் – நிச்சயம் – அப்படித்தான் வாழ வேண்டும்!
சமூகத்தில் நல்லிணக்கத்தைக் காப்பதில் உனக்கும் எனக்கும் சம பங்கு உண்டா?
ஆம் – இருவருக்கும் அந்தப் பொறுப்பு உண்டு!
அந்த எல்லையோடு நில்.
நீ நீயாக இரு – நாங்கள் நாங்களாக இருக்கிறோம்!
ஒவ்வொரு இந்துவும் எனது சகோதரன் – ஒவ்வொரு ‘நீ’யும் எனது சக குடிமகன் (Co-Citizen).
அந்நிய மதத்துக்குப் போய்விட்ட நீ – ஒரு கௌரவமான சக பிரஜையாக இருக்கலாம் எனக்கு!
ஆனால் எனது மத நம்பிக்கைகளை, சடங்கு வழிபாட்டு முறைகளைத் திருத்தி உன் இஷ்டத்துக்கு வழிபடும் திருத்தல்வாதப் புரட்டுக்கு நாங்கள் உடன்பட மாட்டோம்!
$$$
3. நெய்
திரித்தல்களை அனுமதிக்க முடியாது!
-சுந்தர்ராஜ சோழன்

பொங்கல் மதச்சார்பற்ற பண்டிகை என்று திரிப்பதைப் போன்ற அயோக்கியத்தனமான வாதம் வேறொன்று இல்லை. இந்தப் பிரசாரம் தெளிவான பண்பாட்டு அழிப்பே அன்றி வேறில்லை.
பொங்கலை ஏன் தை மாதம் முதல் நாள்தான் வைக்க வேண்டும்? அதைத்தான் உழவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று எதாவது சட்டம் உள்ளதா? ஏன் ஆவணி மாதம், வைகாசி மாதம் கொண்டாடினால் என்ன தவறு? ஆனால் ஏன் இதனை தைப்பொங்கல் என்கிறார்கள்?
தை மாதமானது மகர ராசியாகக் குறிக்கப்படுகிறது. மகர சங்கிரமணம் அதாவது மகர ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கும் நாளே உத்தராயண புண்யகாலம்.
“மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை அயண முன்னி ஆசற நடக்கும் நாளில்”
-என்று சீவக சிந்தாமணி போற்றுகிறது.
கடக மாதமான ஆடியில் தக்ஷிணாயண புண்யகாலம் துவங்கி அது மார்கழியான தனுர் மாதத்தில் முடியும். பின் மகர மாதமான தையினில் உத்தராயண புண்யகாலம் துவங்குகிறது..
மகர சங்கராந்தி போலவே, சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் அது நுழையும் நாட்கள் சங்கிராந்தியே. மேஷ சங்கிராந்தி தொடங்கி மீன சங்கிராந்தி வரை முறையாக உள்ளன. அத்தனை நாட்களும் பல கோயில்களில் சிறப்பு விழாக்கள் நடைபெற நிவந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் மிக விசேஷமாக ஆடி மாதத்தையும், தை மாதத்தையும் கொண்டாட ஒரே காரணம், அதற்குள் இருக்கும் தக்ஷிணாயண,உத்தராயண புண்ய நாட்களே. ஆடி மாதம் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடும் வழக்கம் இப்போதும் உள்ளது.
ஆகவே, எல்லா மாதமும் சங்கிராந்தி வருகிறது. ஆனால் இந்த மகர சங்கிராந்தியான தைத் தலைநாளில் பெரும்பொங்கல் வைத்து வழிபடுவதே உத்தராயண புண்ய காலத்தை வரவேற்று உழவைப் போற்றும் திருநாளாக அமையுமென முன்னோர்கள் கணித்துள்ளார்கள்.
சூரியனின் இயக்கத்தைக் கணித்து, சூரியனுக்கு வணக்கம் செலுத்துவதே இந்தப் பண்டிகையின் அடிப்படை நோக்கம். இந்துக்களைத் தவிர வேறு யாரும் சூரியனை வணங்க மாட்டார்கள் என்றால், அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. அதற்காக நமது அறிவியல் பூர்வ கண்டடைதல்களை உள்ளடக்கிய விழாக்களை திரிப்பதற்கு அனுமதிக்க முடியாது.
$$$
4. முந்திரி, திராட்சை, ஏலம்
பொங்கல் இந்துப் பண்டிகையே!
-பி.ஏ.கிருஷ்ணன்
மூத்த எழுத்தாளர் திரு. பி.ஏ.கிருஷ்ணன், தீவிர நேருவிய ஆதரவாளர். அவருக்கு பாஜகவை சிறிதும் பிடிக்காது என்பது அவரது முகநூல் பதிவுகளைக் காண்பவர்களுக்கு நன்கு தெரியும். போலவே, திராவிட அரசியல் மாய்மாலங்களை துணிவுடன் எதிர்க்கும் பிரபலமான ஒரே தமிழ் எழுத்தாளரும் அவர்தான். அவரது முகநூல் கணக்கில் வெளியிட்ட சில பதிவுகள் இவை…

பொங்கல் முழுக்க முழுக்க ஓர் இந்துப் பண்டிகை.
திராவிடக் கோமாளிகளும் தமிழ்நாட்டிற்கே உரித்தான இதர ஸ்பெஷல் கோமாளிகளும் அதைப் பற்றி உளறிக் கொட்டுவதால் அதன் இந்துத் தன்மை மாறி விடாது.
இந்தியா முழுவதும் அது பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
###
பொங்கல் திருநாளை எல்லா மதத்தவர்களும் கொண்டாடுவதிலும் அதைத் தமிழர் திருநாள் என்று சொல்வதிலும் எனக்கு எந்தத் தடையும் இல்லை.
ஆனால் இவ்வாறு செய்யப்படுவதால் அதன் இந்து அடையாளம் மாறிவிடுகிறது என்று சொல்வது நேர்மையாகாது. திராவிட இயக்கத்தினருக்கு வேறு திருநாள் கிடைக்காததால் பொங்கலைக் கையில் எடுத்துக்கொண்டு வழக்கமான புரட்டுகளைச் செய்வதால் அதன் அடிப்படை மாறி விடாது.
###
“பொங்கல் தினத்தன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் மக்கள் பண்டிகை கொண்டாடுவது உண்மைதான். அது மட்டுமே அதை ‘இந்து’ என்று குறிப்பிடப் போதுமானதா என்பதே கேள்வி. இந்து மதம் என்ற அடையாளம் ஒரு வசதிக்காக உருவானது என்பதையும், அது இந்தியாவின் அத்தனை கலாசார, பண்பாட்டு, வாழ்வியல் நெறிகளையும் அள்ளிப் போட்டுக்கொள்ளும் ஒரு அர்த்தமற்ற வரலாற்றுச் சாக்குமூட்டை என்பதையும் புரிந்துகொள்ளாமல் பேசுபவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது”
-இது தில்லியில் மாணவர்கள் வாழ்க்கையை தொடர்ந்து இருளடையச் செய்து கொண்டிருக்கும் முழுச் சோம்பேறிப் பேராசிரியரின் பிதற்றல்.
இந்து மதம் என்ற பெயர் வேண்டுமானால் பின்னால் வந்ததாக இருக்கலாம். ஆனால் இந்தியாவிற்கு வந்த அனைவராலும் இந்துக்கள் மிகத் தெளிவாக அடையாளம் காணப்பட்டார்கள். அவர்களுடைய கலாச்சார அடையாளங்கள் தனித்துவமானவை என்று அவர்கள் நினைத்தார்கள் என்பதும் வந்தவர்களுக்குத் தெரிந்திருந்தது.
இது அல் பிரூனி….
இந்துக்களைக் கடுமையாகச் சாடுகிறார். ஆனால் இந்துக்கள் என்றுதான் சொல்கிறார்.
The Hindus believe that there is no country but theirs, no nation like theirs, no kings like theirs, no religion like theirs, no science like theirs. They are haughty, foolishly vain, self-conceited, and stolid. They are by nature niggardly in communicating that which they know, and they take the greatest possible care to withhold it from men of another caste among their own people, still much more, of course, from any foreigner. According to their belief, there is no other country on earth but theirs, no other race of man but theirs, and no created beings besides them have any knowledge or science whatsoever...
இந்தியாவின் கலாச்சார, பண்பாட்டு வாழ்வு நெறி இவை அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டிருந்த ஒரு மதம் இந்து மதம் என்பது ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் வந்த இஸ்லாமிய அறிஞருக்குத் தெரிந்திருந்தது.
எனவே இந்து மதம் ஒரு அர்த்தமற்ற வரலாற்றுச் சாக்குமூட்டை என்று சொல்வதற்கு அசாத்தியத் தடித்தனமும் பொறுக்கித்தனமும், வரலாறு என்றால் என்ன என்பதை அறியாத மொண்ணைத்தனமும் வேண்டும். இவையனைத்தும் இவருக்கு இருப்பதால்தான் பெரியார் ஆதரவாளராக இருக்கிறார்.
தமிழ் இலக்கியம் தெரியாது; வரலாறு தெரியாது; ரிக்வேதம் என்றால் இடையர்கள் உளறியிருப்பது என்று பிதற்றும் முழுத் தற்குறித்தனம். இவரைப் போன்றவர்கள் பேராசிரியர் என்று வலம் வருவது தமிழகத்தின் சாபக்கேடு.
###
இது Abbe Dubois 1800-இல் எழுதிய ‘Hindu manners, customs and ceremonies’ என்ற புத்தகத்திலிருந்து:
The Pongulf or Maha-sanhranti, always takes place during the winter solstice, the period when the sun, having finished its course towards the southern hemisphere, turns to the north again and comes back to visit the people of India. The feast lasts three days; the first is called Bhoghi-pongul… On this day visits are exchanged between relatives and friends, who make presents and give entertainments to each other; the day passes in diversions and amusements of all sorts. The second day is called Surya-pongul . In fact the feast appears to be specially dedicated to the sun. The married women first of all bathe with their clothes on, and while still dripping wet put rice to boil in milk on a fire in the open air. As soon as it begins to simmer, they all cry out together, Pongul, Pongul! Pongul, Pongul! Almost immediately afterwards they remove the vessel from the fire and place it before the idol of Vigneshwrara, to whom they ofier a portion of the rice; another portion is given to the cows, and the rest is eaten by the people of the house…. The third day is called the Pongul of the cows. On this day they put into a big vessel filled with water some safiron powder, some seeds of the tree called parati^ and some leaves of the margosa-tree. After mixing the ingredients well together, they sprinkle the cows and the oxen with the liquid, walking round them three times. All the men of the house (for the women are excluded from this ceremony) then turn successively towards the four points of the compass and perform the sashtanga, or prostration of the six members, four times before the animals/ The horns of the cows are painted in various colours, and round their necks are hung garlands of green leaves interlaced with flowers. On these garlands are hung cakes, cocoanuts, and fruits, which, as they are shaken off by the animals, are eagerly scrambled for and devoured, as though they were sacred things, by the crowd following. The cows are then driven together outside the town or village, and are then made to scatter in all directions by the aid of drums and noisy instruments. On this day cattle are allowed to graze everywhere without restraint; and no matter what damage they may do in the fields, they are never driven away. The idols are afterwards taken from the temples and carried in procession, to the sound of music, to the place where the cattle have again been collected. The temple dancing-girls, who are to be found at all feasts and public ceremonies, are not absent on this occasion; they march at the head of the large concourse of people, and from time to time pause to delight the spectators with their lascivious dances and obscene songs. The feast terminates with a performance which, I believe, has no other object than simple amusement. The crowd forms itself into a big circle, in the middle of which a hare is let loose, which in its efforts to escape runs round and round, from side to side, exciting much laughter amongst the spectators, till at last it is caught. The idols are then carried back to the temples, the cows are led back to the sheds, and thus ends the most popular of all Hindu feasts.
மிக மிகத் தெளிவாக பொங்கல் இந்துப் பண்டிகை என்று கூறியது மட்டுமல்லாமல், இது சோம்பேறிப் பண்டிகை என்றும் அவர் பின்னால் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
திராவிடத் தற்குறிகளும் முழுச் சோம்பேறிப் பேராசிரியர்களும் எதையும் படிக்காமல் உளறிக் கொண்டிருப்பதால் அவர்கள் சொல்வது உண்மையாகி விடாது.
இதைப் பரவலாகப் பகிர்ந்து கொள்ளவும்.
###
பொங்கலைப் பற்றி கிறித்துவப் பாதிரியார் Abbe Dubois எவ்வாறு எழுதியிருக்கிறார் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.
இது இன்னொரு பாதிரியார் எழுதியது….
டாக்டர் ஜான் ஸ்கட்டர். வேலூர் மருத்துவமனையை நிறுவிய ஐடா ஸ்கட்டரின் தாத்தா. இவர் 1849-இல் ‘Dr. Scudder’s Tales for Little Readers, about the Heathen’ என்ற குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை எழுதினார். அதில் இந்துக்களின் திருநாட்கள் என்ற பகுதியில் பொங்கலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அமெரிக்கக் குழந்தைகளுக்காக எழுதியது. Abbe Dubois புத்தகத்திலிருந்தும் எடுத்திருக்கிறேன் என்று சொல்கிறார்.
அதில் குறிப்பாக மாட்டுப் பொங்கலைப் பற்றிச் சொல்லிவிட்டு இதையும் எழுதுகிறார்.
Are you ready to exclaim, Is it possible that a people can be guilty of such utter folly? But you, my dear children, would be guilty of such a folly, if you had not the Bible. Should not the gratitude, then, which you owe to your heavenly Father, for your distinguished mercies, constrain you to do all that you can to send this book to this dark land?
எனவே பொங்கல் திருநாள் இந்துத் திருநாள் என்பதில் அன்றிருந்த கிறித்துவப் பாதிரிமார்களுக்கு எந்த ஐயமும் இல்லை.
ஏனென்றால் இன்றைய அரையணா அறிஞர்களையும் முழுச் சோம்பேறிப் பேராசியரியர்களையும், இதர திராவிட வெறியர்களையும் விட அவர்கள் நேர்மையானவர்கள்.
$$$